Home /News /lifestyle /

எச்சரிக்கை... இந்த வைட்டமின் குறைபாடு இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்குமாம்..!

எச்சரிக்கை... இந்த வைட்டமின் குறைபாடு இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்குமாம்..!

வைட்டமின் குறைபாடு

வைட்டமின் குறைபாடு

வைட்டமின் கே குறைபாடு குறிப்பிடத்தக்க ரத்தப்போக்கு, மோசமான எலும்பு வளர்ச்சி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கண்டறிப்பட்டுள்ளது.

பரபரப்பான லைப்ஃஸ்டைலில் இதய நோய்கள் மிகவும் பொதுவானதாகி விட்டது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலக அளவில் நிகழும் பெரும்பாலான மரணங்களுக்கு இதய நோய்கள் (CVDs) முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய் சம்பந்தமான பாதிப்புகளால் இறந்துள்ளனர், இது உலகளாவிய இறப்புகளில் 32 சதவீதம் ஆகும். இந்த இறப்புகளில் 85 சதவீதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக நடந்துள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சரியான கவனிப்பு மிகவும் முக்கியம்.ஆச்சரியப்படும் விதமாக, ஒரு வைட்டமினை போதுமான அளவு உட்கொள்வது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வைட்டமின் கே பங்களிப்பு:

வைட்டமின் கே ரத்தம் உறைதல், காயங்களை குணப்படுத்துதல், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது ஃபைலோகுவினோன் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் கே2 அல்லது மெனாகுவினோன் என இரண்டு வகைகளில் வருகிறது. வைட்டமின் கே-வின் இந்த இரண்டு வடிவங்களும் ரத்த உறைதலில் ஈடுபடும் புரதங்களை உருவாக்குகின்றன.நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வைட்டமின் கே என்பது உறைதல், எலும்பு வளர்ச்சி மற்றும் இருதய ஆரோக்கியம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கொழுப்பில் கரையக்கூடிய சேர்மங்களின் குழுவைக் குறிக்கிறது.

மேலும், வைட்டமின் கே குறைபாடு குறிப்பிடத்தக்க ரத்தப்போக்கு, மோசமான எலும்பு வளர்ச்சி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கண்டறிப்பட்டுள்ளது.

திடீரென்று உங்கள் உடல் எடை அதிகரிக்கிறதா..? பொதுவான காரணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்

வைட்டமின் கே இதய நோய் அபாயத்தைக் குறைக்குமா?

நியூ எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் (ECU) ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், வைட்டமின் கே நிறைந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு, பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி தொடர்பான இருதய நோய் - இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள் 34 சதவீதம் வரை குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் மூத்த எழுத்தாளர் டாக்டர் நிக்கோலா போண்டோனோ, பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் இருதய நோய்களுக்கு எதிராக அதிக வைட்டமின் கே உட்கொள்வது முக்கியமானது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் (NHS) வயது வந்த ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு தங்களது உடல் எடையில் ஒரு கிலோவிற்கு1 மைக்ரோகிராம் அளவிற்கு வைட்டமின் கே எடுத்துக்கொள்ள வேண்டுமென பரிந்துரைக்கிறது.இதய நோய்களுக்கான காரணிகள் என்னென்ன?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்பின்மை, புகையிலை பயன்பாடு மற்றும் ஆல்கஹால் பயன்பாடு ஆகியவை இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பழக்கவழக்கங்கள்...

இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது, ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு, அதிக எடை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படலாம். இந்த "இடைநிலை ஆபத்து காரணிகள்" முதன்மை பராமரிப்பு வசதிகளில் அளவிடப்பட்டு இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு உள்ளிட்ட பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதே சமயம் புகையிலை பயன்பாட்டை நிறுத்துதல், உணவில் உப்பைக் குறைத்தல், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல், வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளும் அளவை குறைத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வது இருதய நோய்க்கான பாதிப்புகளை குறைக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள்:

வைட்டமின் கே குறைபாட்டின் பரவலான அறிகுறிகள் உள்ளன, அவற்றில் அதிகப்படியான இரத்தப்போக்கு மிகவும் பொதுவானது.

பிற அறிகுறிகள் பின்வருமாறு:

- அடிக்கடி அல்லடி எளிதாக சிராய்ப்புண்கள் ஏற்படுதல்

- நகங்களின் கீழ் சிறிய இரத்த உறைவு

- உடலில் உள்ள பகுதிகளில் வரிசையாக இருக்கும் சளி சவ்வுகளில் இரத்தப்போக்கு

- அடர் கருப்பு மலம் அல்லது ரத்தம் கலந்த மலம் ஆகிய நமது உடலில் வைட்டமின் கே குறைபாடு உள்ளதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள் ஆகும்.வைட்டமின் கே நிறைந்துள்ள உணவுகள்:

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு, வைட்டமின் கே-யின் பெரும்பகுதி உணவுப் பொருட்களில் இருந்து பெறப்பட வேண்டும் என பரிந்துரைக்கிறது. அதன்படி, கீரை, முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகள், தாவர எண்ணெய்கள், அவுரி நெல்லி மற்றும் அத்திப்பழம் போன்ற பழங்கள், முட்டை, சீஸ், கல்லீரல் உள்ளிட்ட இறைச்சிகள், கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் கிரீன் டீ போன்ற உணவுகள் வைட்டமின் கே இன் சிறந்த ஆதாரங்களாகும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Vitamin Deficiancy, Vitamin K

அடுத்த செய்தி