Home /News /lifestyle /

ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ் அதிகமாக எடுத்து கொள்வதால் உடலுக்கு இவ்வளவு பாதிப்பா..!

ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ் அதிகமாக எடுத்து கொள்வதால் உடலுக்கு இவ்வளவு பாதிப்பா..!

ஒமேகா 3

ஒமேகா 3

ஒரு வகை கொழுப்பு அமிலமான ஒமேகா 3 -ஐ நம் உடலால் சொந்தமாக உருவாக்க முடியாது. எனவே தான் உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் மூலம் இவற்றை பெற வேண்டியிருக்கிறது.

ஒமேகா 3 நம் செல் சவ்வுகளில் ஒரு முக்கிய அங்கமாகும். eicosanoids எனப்படும் சிக்னலிங் மூலக்கூறுகளை உற்பத்தி செய்ய நம் உடலுக்கு இவை தேவைப்படுகின்றன. நோயெதிர்ப்பு, நுரையீரல், இதய மற்றும் நாளமில்லா அமைப்புகள் சரியாக வேலை செய்ய ஒமேகா 3 உதவுகிறது.

ஒமேகா -3 குறைபாடு எதிர்மறை உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். உணவுகளை தவிர ஒமேகா 3-ஐ சப்ளிமெண்ட்ஸ் மூலமும் சிலர் எடுத்து கொள்கிறார்கள். இது பல வழிகளில் நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாக ஒமேகா -3 எடுத்து கொள்வதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சப்ளிமெண்ட்ஸ் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே உடலில் பயன்படுத்தப்படுகிறது. டோஸ்கள் வரம்பை மீறும் போது உடலுக்குப் பயனற்றவையாகின்றன.

ஒமேகா 3 வகைகள்..

கடல் மீன், மீன் எண்ணெய்கள், ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. மீன் சாப்பிடாதவர்கள் ஒமேகா 3 தேவைகளை பூர்த்தி செய்ய அடிக்கடி சப்ளிமெண்ட்ஸ் எடுக்கிறார்கள்.

ஒமேகா 3-ல் மூன்று முக்கிய வகைகள் உள்ளன: ஆற்றலுக்காக உடலால் பயன்படுத்தப்படும் ஆல்ஃபா-லினோலெனிக் ஆசிட், மீனில் அதிகம் காணப்படும் ஈகோசாபென்டெனோயிக் ஆசிட் மற்றும் மூளை, விழித்திரை மற்றும் பிற உடல் பாகங்களின் கட்டமைப்பு கூறுகளான டோகோசாஹெக்ஸெனோயிக் ஆசிட். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் போதுமான நுகர்வு மார்பக புற்றுநோய், மனச்சோர்வு மற்றும் பல அழற்சி நோய்களின் அபாயங்களை குறைக்கின்றன.எவ்வளவு டோஸ் எடுத்து கொள்ளலாம்.!

உடலுக்கு மிகவும் இன்றியமையாதது ஒமேகா 3 என்றாலும், நம் உடலுக்கு அதன் சிறிய அளவே தேவைப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரைப்படி ஒரு நபர் Eicosapentaenoic ஆசிட் மற்றும் Docosahexaenoic ஆசிட் 250 mg முதல் 2g வரை எடுத்து கொள்ள வேண்டும். Docosahexaenoic ஆசிட் பல உடல் உறுப்புகளின் கட்டமைப்பு கூறு என்பதால், ஒமேகா 3 சப்ளிமெண்ட் குறைந்தது 250 mg DHA இருக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். எனவே சப்ளிமெண்ட்ஸ் எடுக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்..!

ஒமேகா 3-யை அளவுக்கதிகமாக எடுத்து கொண்டால்...!

நோய் எதிர்ப்பு செயல்பாடுகளில் மாற்றம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஆபத்து போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் அதிகப்படியான நுகர்வு குறைந்த ரத்த அழுத்தம், ரத்தம் மெலிதல், காயம் ஏற்பட்டால் அதிக ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். உடலில் சேரும் அதிக அளவு ஒமேகா 3 குளுக்கோஸ் உற்பத்தியைத் தூண்டும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கலாம். தவிர எடையை அதிகரிக்க கூடும் மற்றும் தூக்க முறைகளையும் தொந்தரவு செய்ய கூடும். மேலும் ஒமேகா 3-ஐ அதிகமாக எடுப்பது வாயில் மீன் தொடர்பான சுவையை நீண்ட காலத்திற்கு தக்க வைக்கலாம்.எனவே ஒமேகா 3 சப்ளிமெண்ட்ஸை எடுத்த பிறகு மீன் வாசனை கொண்ட சுவை நாக்கில் நீண்ட நேரம் உணர்ந்தாலோ அல்லது அதிக ஏப்பம் வந்தாலோ உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி நீங்கள் எடுத்து கொள்ளும் டோசின் அளவை சரி பார்க்கவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Omega 3

அடுத்த செய்தி