Home /News /lifestyle /

இந்த வகை இரத்தம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு நிச்சயம் வருமா..? என்ன காரணம்..?

இந்த வகை இரத்தம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு நிச்சயம் வருமா..? என்ன காரணம்..?

இதய பாதிப்பு

இதய பாதிப்பு

உங்களுக்கு எந்த வகை ரத்தம் என்பதைப் பொறுத்து இதய நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பொது சுகாதாரம் குறித்து ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

சிவப்பு ரத்த அணுக்கள் மீது இருக்கும் ஆண்டிபாடீஸ் மற்றும் ஆண்டீஜெனிக் பொருள்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நமது ரத்தம் எந்த வகையைச் சேர்ந்தது என்று பிரித்து அறியப்படுகிறது. பிரதானமாக ஏ, பி, ஏபி மற்றும் ஓ என்று 4 வகையான ரத்த மாதிரிகள் உள்ளன. உங்கள் பெற்றோரிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கப்பெறும் மரபணுக்கள் அடிப்படையில் உங்களுக்கான ரத்த வகை எது என்பது தீர்மானிக்கப்படுகிறது.

உங்களுக்கு எந்த வகை ரத்தம் என்பதைப் பொறுத்து இதய நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பொது சுகாதாரம் குறித்து ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த ஆய்வாளர் லூ-கி மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ள முடிவுகளில், எந்தெந்த ரத்த வகைகள் மிகவும் ஆபத்தானவை என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

ஏ, பி அல்லது ஏபி போன்ற ரத்த வகை கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கிறது இந்த ஆய்வு. ஓ வகை ரத்தம் கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து குறைவு. அதிலும் ஏபி ரத்த வகை கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு மிக, மிக அதிகம்.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

20 வயதுக்கு மேற்பட்ட 89,550 நபர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த ஆய்வு நீண்ட காலம் நீடித்தது. இதில் ஏபி ரத்த வகை கொண்டவர்கள், பிற ரத்த வகை கொண்டவர்களைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகமாக இதய நோய் பாதிப்புக்கான வாய்ப்பை கொண்டிருந்தனர் என்பது தெரிய வந்தது. பி வகை ரத்தம் கொண்டவர்களுக்கு 11 சதவீதமும், ஏ வகை ரத்தம் கொண்டவர்களுக்கு 5 சதவீதமும் அபாய பாதிப்பு அதிகம் இருந்தது.



ஆய்வுகளால் நன்மை உண்டா

நாம் நமக்கு அமைந்த ரத்த வகை எது என்பதை இனி மாற்றியமைக்க இயலாது. ஆனால், எந்த வகை ரத்தம் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம் என்பதை மருத்துவர்கள் கணித்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அல்லது ரத்த அழுத்த அளவுகளை தெரிந்து கொள்வதைப் போல ரத்த வகையை தெரிந்து கொள்வதும் நல்ல விஷயம் தான்.

40 வயதிற்குப் பின் ஆண்கள் உடல் ஆரோக்கியத்தில் தவறவிடக்கூடாத விஷயங்கள்...நோயற்ற வாழ்வுக்கு வழிகள்

உங்கள் ரத்த வகை அதிக அபாயத்தை கொண்டது என தெரிய வந்தால், பிறகு இதய நோயில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள முடியும்.



ரத்த வகை மற்றும் இதர உடல்நல பிரச்சினைகள்

ஓ வகை ரத்தம் கொண்டவர்களுக்கு இதய நோய் மட்டுமல்லாமல், வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏ வகை ரத்தம் கொண்டவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. ஏபி ரத்த வகை கொண்டவர்களுக்கு நினைவு பிரச்சினைகளும், ஏ ரத்தம் கொண்டவர்களுக்கு அதிக ஸ்ட்ரெஸ் பிரச்சினையும் வரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Blood Group, Heart disease

அடுத்த செய்தி