• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Weight loss | இந்த 3 பொருட்கள் போதும்… உடல் எடையை விறுவிறுவென குறைக்க உதவும் கற்றாழை ஜூஸ் ரெடி!

Weight loss | இந்த 3 பொருட்கள் போதும்… உடல் எடையை விறுவிறுவென குறைக்க உதவும் கற்றாழை ஜூஸ் ரெடி!

நீங்கள் கற்றாழை ஜூஸை உட்கொள்ளத் தொடங்கும் போது, ​​அதை அதிகமாக உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

  • Share this:
கற்றாழை பல நன்மைகளைக் கொண்ட ஒன்றாகும். அதிலும் இதனில் உள்ள ஒரு சிறப்பம்சம், உடல் எடையை குறைக்க உதவுவதாகும். உடல் எடை குறைப்புக்கு உதவும் கற்றாழை ஜூஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கற்றாழையின் நன்மைகள்:

இந்திய ஆயுர்வேத நடைமுறைகளில் நீண்ட காலமாக கற்றாழை இருந்து வருகிறது. மேலும், இந்த செடியை உங்கள் வீட்டிலும் எளிதாக வளர்க்கலாம். இந்த மருத்துவ செடியில் பல பல நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால், உடல் எடை குறைப்பு என்று வரும்போது, ​​இது உங்களுக்கு சிறந்த செரிமானத்திற்கும் உதவும், உடலில் நீர் தேக்கத்தையும் அதிகரிக்கும், உடலை சுத்தப்படுத்தும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு.

Must Read | உடல் எடையைக் குறைக்க தீவிர உடற்பயிற்சிகளை விட இந்த யோகாசனங்கள் எஃபெக்டிவ்!

அதன் சிறந்த பண்புகளுடன், இந்த தாவரத்தை உட்கொள்வதும் எளிது. கற்றாழையால் உங்கள் உடலில் பாசிட்டிவான மாற்றங்களை நீங்கள் கண்டறிந்து, அதை மீண்டும் மீண்டும் பெறுவீர்கள். எனவே, மேலும் காத்திருக்காமல், கற்றாழை ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி?

இந்த செய்முறை மிக எளிமையானது மற்றும் விரைவானதும் கூட. இதைச் செய்ய உங்களுக்கு எந்த ஆடம்பரமான பொருட்களும் தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியது இந்த செடியின் சில துண்டுகளை எடுத்து பச்சை விளிம்புகளை வெட்டுவது மட்டுமே ஆகும். அவை முடிந்ததும், இதை சிறிது தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் மிக்ஸி அல்லது ப்ளெண்டரில் சேர்க்கவும். இதை நன்றாக அரைத்த பின்பு குடிக்கவும். நீங்கள் இந்த ஜூஸை உட்கொள்ளத் தொடங்கும் போது, ​​அதை அதிகமாக உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், கற்றாழை உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: