களைப்பே இல்லாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா...? தீர்வு வந்தாச்சு...

”ட்ரெட்மில்லில் ஓடுவதற்கு, நடப்பதற்கு சமமான பலனை இது அளிக்கிறது”

களைப்பே இல்லாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா...? தீர்வு வந்தாச்சு...
ரோபோ ஆடை
  • News18
  • Last Updated: August 24, 2019, 10:11 AM IST
  • Share this:
நடப்பதும் ஓடுவதும் மனிதன் செய்ய வேண்டிய சாதாரண வேலை. ஆனால் அதையும் எளிமையாக்கி கையில் தருகின்றனர் அறிவியலாளர்கள்.

எக்ஸோசூட் என உடற்பயிற்சிக்கான ஆடை ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும்போது களைப்பே தெரியாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய உதவும்.

ஐந்து கிலோ எடைகொண்ட இந்த ஆடையானது இரண்டு கால்களில் மாட்டி, பின்இடுப்பில் கட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கீழ்முதுகில் இணையும் இந்த பெட்ல் டைப் கிட்டத்தட்ட செல்ஃபோன் போல் செயல்படுகிறது. அது நாம், ஓடுவது நடப்பதற்கு ஏற்ப அதன் வழிகாட்டுதல் மற்றும் பலன்களை தெரிவிக்கும்.


ஹார்ட்வர்ட் ஜான் எ. பால்சன் ஸ்கூல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் , அறிவியலாளர்கள் தலைமையில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை இடுப்பின் அளவுக்கு ஏற்ப சரிசெய்து மாட்டிக்கொள்ளலாம். இதை அணிந்துகொண்டு நடந்தால் உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் 9.3 சதவீதமும், ஓடும்போது 4 சதவீதமும் குறைகிறது.  ட்ரிட்மில்லில் ஓடுவதற்கு, நடப்பதற்கு சமமான பலனை அளிக்கிறது.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்