• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? ஒவ்வொரு‌‌ முறை சாப்பிட்ட பிறகும் இதை செய்தால் போதும்!

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? ஒவ்வொரு‌‌ முறை சாப்பிட்ட பிறகும் இதை செய்தால் போதும்!

உணவு

உணவு

உணவே மருந்து என்று ஆயுர்வேத கூற்று படி, நீங்கள் தேர்வு செய்யும் உணவு, எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் போது எந்த மனநிலையில் இருக்கிறீரகள் என்பது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அதிகரிக்கும்.

  • Share this:
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பழமையான மருத்துவ முறைகளில் ஒன்று ஆயுர்வேதம். இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள பல நாடுகளிலும் ஆயுர்வேத மருத்துவ முறை பயன்படுத்தப்பட்டுன் வருகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆயுர்வேத முறைப்படி, உங்கள் உடல் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஒரே ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். இதைப் பற்றி ஆயுர்வேத மருத்துவரான நிகிதா கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம கணக்கில் பகிர்ந்துள்ளார்.

ஆயுர்வேதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. நாம் உண்ணும் உணவிலிருந்து தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப உடுத்தும் உடை வரை ஆயுர்வேதத்தில் பரிந்துரைகள் உள்ளன. இந்த பழமையான மருத்துவம் உடலுக்கு மட்டுமின்றி, மனதையும், மன நலத்தையும் மேம்படுத்துகிறது.

உணவே மருந்து என்று ஆயுர்வேத கூற்று படி, நீங்கள் தேர்வு செய்யும் உணவு, எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் போது எந்த மனநிலையில் இருக்கிறீரகள் என்பது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அதிகரித்து (Ojas) நச்சுத்தன்மையை (ama) குறைக்கும் என்று ஆயுர்வேத நிபுணர் நிகிதா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு, உடல் திடமாக இருப்பதற்கும், தினமும் ஒவ்வொரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு இதை செய்ய வேண்டும் என்றும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் ஒவ்வொரு முறையும் நீங்கள் சாப்பிட்ட பிறகு குறைந்தது 100 ஸ்டெப்ஸ் நடத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. இதைப்பற்றி ஆயுர்வேத மருத்துவர் நிகிதா அவர்கள் பின்வரும் விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.



மதிய உணவு மற்றும் இரவு உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் நூறு அடிகளாவது நடப்பது உங்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 100 அடிகள் என்பது பரிந்துரைக்கப்பட்ட குறைந்த பட்ச செயல்பாடு. நீங்கள் சாப்பிட்டு பிறகு 15 நிமிடங்கள் நடப்பது நல்லது என்று பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு நடப்பது குறிப்பிட்ட உடல்நலக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஷத்பவளி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க எவ்வாறு உதவுகிறது?

சாப்பிட்ட பிறகு பதினைந்து நிமிட நடை அல்லது குறைந்தபட்சம் நூறு அடிகள் நடப்பது, நீங்கள் சாப்பிட்ட உடன் படுப்பது அல்லது ஓய்வெடுப்பது ஆகியவற்றை தவிர்க்க உதவுகிறது. இதனால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

இந்த பயிற்சி செரிமானத்துக்கு உதவுகிறது. நீங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவு நேரத்தில், அதிக அளவு உணவு சாப்பிடும் போது அல்லது தாமதமாக சாப்பிடும் போது, செரிமானம் நிச்சயமாக பாதிக்கப்படும். சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது உங்கள் செரிமானத்தை தூண்ட உதவுகிறது.

உடல் எடையை குறைக்கும்போது சொல்லப்படும் இந்த விஷயங்கள் உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்

ஃபுட் மெட்டபாலிசம் என்று உங்கள் உணவில் சத்துக்கள் முழுமையாக கிடைப்பதற்கு சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது உதவி செய்கிறது. சாப்பிட்ட பிறகு பெரும்பாலானவர்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்றே தோன்றும். இந்த ஓய்வு சோம்பேறித்தனமாக மாறும். எனவே சாப்பிட்ட பிறகு ஏற்படும் சோம்பேறித்தனத்தை தடுப்பதற்கு இந்த 15 நிமிட நடை உதவுகிறது.



இந்த எளிமையான பயிற்சியை எப்படி செய்ய வேண்டும்?

பொதுவாக சாப்பிட்ட பிறகு நீங்கள் கடினமான வேலைகளை செய்யக் கூடாது. எனவே, நீங்கள் நீண்ட தூரம் நடைபயிற்சி செய்வது போல பிரிஸ்க் வாக்கிங் மேற்கொள்ள கூடாது. ஷத்பவளி என்பது உடலில் இருக்கும் கொழுப்பை எரிப்பதற்கான பயிற்சி கிடையாது உங்கள் உடலை செரிமானத்தை துரிதப்படுத்தி, உங்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் ஒரு முறை. எனவே, சாப்பிட்ட பிறகு நடக்கும் போது, வேகமாக நடக்க வேண்டாம். ரிலாக்சாக நடப்பது போல சில நிமிடங்கள் நடந்தால் போதுமானது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: