Home /News /lifestyle /

டயட்டில்  இருந்தாலும் உடல் எடை குறையவில்லையா..? இதுதான் காரணமாம்... மருத்துவ விளக்கம்

டயட்டில்  இருந்தாலும் உடல் எடை குறையவில்லையா..? இதுதான் காரணமாம்... மருத்துவ விளக்கம்

உடல் எடையை குறைக்க டிப்ஸ்

உடல் எடையை குறைக்க டிப்ஸ்

உடல் எடையைக் குறைப்பதற்காக குறைவான அளவில் உணவுகளைச் சாப்பிடுவது போன்ற டயட் ப்ளான்களை கடைப்பிடிக்க முடியாத பலர் தங்களது எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்ளவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆனால் அறுவை சிகிச்சை செய்தாலும் உடல் எடை அதிகரிக்கத் தான் செய்யுமாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மரபணு, ஹார்மோன்கள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் உடற்பயிற்சியை முறையாக கடைப்பிடித்து டயட்டில் இருந்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியாது எனவும் அதிகரிக்கத்தான் செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.

“எங்கேயாவது வெளியில் நாம் செல்லும் போது குண்டாக இருப்பவரைப் பார்த்தாலே பாவம் என்போம் அல்லது பாரு எவ்வளவு குண்டாக இருக்கிறார்கள் என கமெண்ட் செய்வோம்“. இதனால் தான் உடல் பருமனாக இருக்கும் பெரும்பாலானோர் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்ப்பார்கள். ஏன் நாம் மட்டும் இப்படி இருக்கிறோம்? என்கிற தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு அதிகளவில் ஏற்படும் என்பதால் இதனைத் தவிர்க்கவே உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக எடையை குறைப்பதற்கான டயட் உணவுகள், தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டாலும் உடல் எடையை சிலருக்கு குறையாது. ஏன்? எதனால்? என்பது பற்றிய முழுமையான தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்வோம்..

டயட்டில் இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கக் காரணங்கள்…

உடல் எடையைக் குறைப்பதற்காக குறைவான அளவில் உணவுகளைச் சாப்பிடுவது போன்ற டயட் ப்ளான்களை கடைப்பிடிக்க முடியாத பலர் தங்களது எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்ளவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆனால் அறுவை சிகிச்சை செய்தாலும் உடல் எடை அதிகரிக்கத் தான் செய்யுமாம்.உடல் எடையைக் குறைக்க உதவும் பேரியாட்ரிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் இரைப்பையின் அளவை குறைப்பது மட்டுமில்லை, ஹார்மோனின் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பசியுணர்வு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றாலும் முறையாக டயட் பிளானை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் அறுவை சிகிச்சை செய்த இரைப்பையின் அளவு பெரிதாகி மீண்டும் உங்களது எடை அதிகரிக்கக்கூடும்.

மரபணுக்கள் :

என்ன தான் உடல் எடையைக் குறைக்க தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட் இருந்தாலும் உடல் எடை குறையாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மரபணுக்கள். உங்களுக்கு சில குறிப்பிட்ட மரபணுக்களில் குறைபாடுகள் இருந்தாலும் உடல் பருமன் ஆகக்கூடும்.

கொஞ்ச தூரம் நடந்தாலும் கால் வலிக்குதா..? இந்த நோய்க்கான எச்சரிக்கையாக இருக்கலாம்..!

குடல் பாக்டீரியா:

உடல் பருமன் சில பாக்டீரியா இனங்களின் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு மற்றும் குறைவுடன் தொடர்புடையது என்பதால் உடல் எடை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் லெப்டின் மற்றும் கிரெலின் என்ற இரண்டு ஹார்மோன்கள் உள்ளது. லெப்டின் பசியை அடக்கும் ஹார்மோன்களாக உள்ளதால் எடை இழப்பிற்கு உதவுகிறது. அதே சமயம் கிரெலின் என்னும் ஹார்மோன் உடல் எடை அதிகரிப்பைத் தூண்டுவதால் எடை அதிகரிக்க உதவுகிறது.எனவே இவை இரண்டையும் சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நம் உடலுக்குத் தேவையான தூக்கம் இல்லாமல் இருக்கும் போது இந்த இரண்டு ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கும் போது உடல் எடையும் சேர்ந்து அதிகரிக்கிறது. இன்றைக்கு கிட்டத்தட்ட 70% உடல் பருமன் மரபியல் காரணமாக இருக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் எடையை சீக்கிரமே குறைக்க இந்த 5 டிரிங்க்ஸ் குடிங்க... கொழுப்பை எளிதில் கரைச்சிடும்..

இதோடு மன அழுத்தம், மரபு ரீதியான உடல் எடை அதிகரிப்பு, நேரத்திற்கு உணவு உட்கொள்ளாதது, தேவையில்லாத நொறுக்குத் தீனிகளை கொஞ்சம் டேஸ்ட் செய்துப் பார்ப்போம் என நினைப்பது போன்ற பல காரணங்கள் எத்தனை தான் நீங்கள் டயட்டில் இருந்தாலும் உங்களுடைய உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு போதும் உதவி செய்யாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diet, Weight loss

அடுத்த செய்தி