உண்மையான ஃபிட்னஸ் எது தெரியுமா.? தீபிகா படுகோன் சொல்வதை கேளுங்கள்..

உண்மையான ஃபிட்னஸ் எது தெரியுமா.? தீபிகா படுகோன் சொல்வதை கேளுங்கள்..

தீபிகா படுகோன்

ஒரு நபரின் ஃபிட்னஸ் என்பது வெளியே நாம் பார்க்கும் அவரது உடல் தோற்றம் மட்டும்மல்ல. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஃபிட்டாக இருப்பதை பற்றியது.

  • Share this:
பாலிவுட் நடிகைகளில் மிக சிறந்த ஒருவர் தீபிகா படுகோன். தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் அவர், தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அதிலிருந்து மீண்டது எப்படி என்பதை பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மனநோயால் எந்த உயிரும் இழக்கப்படாத ஒரு உலகத்தைப் பார்க்க விரும்புவதாகவும் முன்பு கூறி இருக்கிறார்.

இந்நிலையில் ஃபிட்னஸ் என்பது உடல் தோற்றம் மட்டுமல்ல. மனம், உடல் மற்றும் ஆன்மாவின் சமநிலை என்று இவர் நம்புகிறார். ஃபிட்னஸ் பற்றி கருத்து தெரிவித்துள்ள தீபிகா படுகோன், ஒரு நபரின் ஃபிட்னஸ் என்பது வெளியே நாம் பார்க்கும் அவரது உடல் தோற்றம் மட்டும்மல்ல. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஃபிட்டாக இருப்பதை பற்றியது. ஒரு நபரின் மனம், உடல் மற்றும் ஆன்மா உள்ளிட்டவை சமநிலையாக இருப்பதே உண்மையான ஃபிட்னஸ் என்று எப்போதுமே தாம் நம்புவதாக தீபிகா கூறி உள்ளார்.

ஃபிட்னஸ் பற்றி மேலும் கருத்து தெரிவித்துள்ள தீபிகா படுகோன், ஃபிட்னஸ் என்பது ஒவ்வொரு நாளும் சிறந்த தேர்வுகளை மேற்கொள்வது பற்றியது. ஃபிட்னஸின் இறுதி வடிவம் நம்மை ஒரு சிறந்த நபராக மாற்றுகிறது என்று கூறி இருக்கிறார்.



சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு நவீன அறிவியல் மற்றும் பண்டைய ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட சுத்தமான தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து பொருட்களை தயாரிக்கும் OZiva நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் தீபிகா படுகோன். சான்றளிக்கப்பட்ட சுத்தமான மற்றும் தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்துடன் ஒவ்வொரு நபரின் வாழ்க்கை பயணத்தையும் ஆரோக்கியமான மற்றும் சிறந்த வாழ்க்கைக்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘ஹார் தாரா சே எ பெட்டர் யூ’ (har tarah se a better you) என்ற OZiva பிராண்டின் தத்துவத்தை தீபிகா ஊக்குவிக்கிறார்.

சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோயை ஏற்படுத்துமா? பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

ஃபிட்னஸையும் OZiva நிறுவனத்தின் தயாரிப்புகளையும் தொடர்புபடுத்தி பேசிய தீபிகா, OZiva நிறுவன தயாரிப்புகள் மற்றும் தத்துவம் இரண்டும் ஒரே சிந்தனைப் பள்ளியிலிருந்து வந்தவை.மேலும் நான் முற்றிலும் தொடர்புபடுத்தும் ஒன்று என கூறினார்.

OZiva-வின் இணை நிறுவனரான ஆர்த்தி கில் பேசுகையில், சுத்தமான, தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமான, ஃபிட்டர் மற்றும் பெட்டர் வாழ்க்கையை வாழ அவர்களுக்கு உதவும் எண்ணத்தில் நாங்கள் OZiva-வை தொடங்கினோம். உடற்தகுதிக்கான பாரம்பரிய வரையறையை மாற்றி எழுதுவது எங்களைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த நல்வாழ்வு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் ஊக்கமளிக்கும் பார்வையை உருவாக்குவது என்றார்.



இந்திய மக்களின் வழக்கமான ஃபிட்னஸ் பார்வையை மாற்றும் எங்களது இந்த பயணத்தில் தீபிகா படுகோன் இணைந்து OZivaகுடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒட்டுமொத்த உடல்நலம், உடல் மற்றும் மனரீதியான ஒரு முழுமையான அணுகுமுறையை பின்பற்றும் தீபிகா படுகோன், மக்களிடம் எங்கள் தயாரிப்புகளை எடுத்து செல்வதற்கு சரியான நபராக இருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

 
Published by:Sivaranjani E
First published: