தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடும்போது, அவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மேம்படுத்தவும் உதவும். வாழைப்பழத்தில் அதிகமாக வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இன்னும் கூறவேண்டுமானால், ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்க வழி ஆகும்.
குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது:
ஒட்டுமொத்த உடலில் குடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். அது ஒரு வாழைப்பழத்துடன் தொடங்கலாம். ஊட்டச்சத்து 2017 ஆய்வு மதிப்பீட்டின்படி, வாழைப்பழத்தில் ஸ்டார்ச் உள்ளதால் இது குடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான கொழுப்பு அமிலங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே, நமது குடலை நிலைப்படுத்தி, நுண்ணுயிரிக்கான ஊட்டச்சத்துக்களை வழங்க வாழைப்பழங்கள் உதவுகின்றன.
Must Read | 60 வயதிலும் உடலை மாஸாக்கலாம்! இந்த உடற்பயிற்சிகள் போதும்!
உடல் எடை குறைப்பு:
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது நம் உடல் எடை குறைப்பு இலக்குகளை அடைய உதவும். நார் மற்றும் புரதத்தால் நிரம்பிய, வாழைப்பழங்கள் ஒரு துண்டுக்கு 100 கலோரிகளுக்கு மேல் இருந்தாலும் நீண்ட நேரம் உங்களை முழுமையாக வைத்திருக்கும்.
சருமத்தை மேம்படுத்தும்:
உங்கள் சருமத்தை மேம்படுத்தும் உணவுகளைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, வாழைப்பழங்கள் சரும ஆரோக்கியத்தில் பெறும் நன்மை பயக்கும். இவை அனைத்துக்கும் வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காரணமாகும். குறிப்பாக, கொலாஜன் அளவை அதிகரிக்கும், மாங்கனீஸ் உங்கள் சரும பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும்-- முகப்பரு, சுருக்கங்கள், வறண்ட சருமம் போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அவற்றை தடுக்க உதவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆற்றல் அளவை மேம்படுத்தும்:
உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் சாப்பிடும் போது, வாழைப்பழங்கள் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் நாள் முழுவதும் சோர்வடையாமல் இருக்கவும் உதவும். எனவே, வாழைப்பழம் சாப்பிடுவதற்கும் செயல்திறனில் ஆற்றல் அளவை அதிகரிப்பதற்கும் நேரடி தொடர்பு உண்டு.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.