Home /News /lifestyle /

கோவிட் தொற்றின் மூன்றாவது அலையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படலாம் : ஆய்வு

கோவிட் தொற்றின் மூன்றாவது அலையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படலாம் : ஆய்வு

தினமும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை டிசம்பர் உடன் ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது என்று அச்சுறுத்தக்கூடிய தகவல் தகவலை வெளியிட்டுள்ளது.

தினமும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை டிசம்பர் உடன் ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது என்று அச்சுறுத்தக்கூடிய தகவல் தகவலை வெளியிட்டுள்ளது.

தினமும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை டிசம்பர் உடன் ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது என்று அச்சுறுத்தக்கூடிய தகவல் தகவலை வெளியிட்டுள்ளது.

கோவிட் தொற்றின் மூன்றாவது அலையில், கொரோனா வைரஸ் வேரியன்ட்தான ஒமைக்ரான் நாடு முழுவதும் பரவி வருகிறது. அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு ஊரடங்கு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஒமைக்ரான் தோற்று எவ்வளவு வேகமாக பரவும் அதனால் எத்தனை நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதை பற்றியெல்லாம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Covid-19 மூன்றாவது அலை, ஜனவரி மத்தியிலிருந்து, பிப்ரவரியில் இரண்டு வாரங்கள் வரை உச்சத்தை எட்டலாம் என்று கணித்துள்ளனர்.

இது, மார்ச் மாதம் முதல் குறையத் தொடங்கும் என்றும் கூறியுள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது, எத்தனை நபர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை பேராசிரியர் சிவா ஆத்ரேயா, பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேசன், மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மற்றும் அவர்களுடைய குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

எத்தனை சதவிகிதத்தினர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்பதை பொறுத்துதான் எவ்வளவு பேருக்கு வைரஸ் பரவும் என்று இந்த மாடல் கணித்துள்ளது. ஆய்வின் கணிப்புபடி இந்த மாத இறுதிக்குள் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.



தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜனவரி மூன்றாம வாரம் முதல் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்றும், பிப்ரவரி முதல் வாரங்களில் உச்சத்தை தொடும் என்பதும் கணிக்கப்பட்டுள்ளது. அந்த சதவிகிதத்தின் அடிப்படையில், 100 சதவிகிதம், 60 சதவிகிதம், அல்லது 30 சதவிகிதம் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கோவிட் வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது கூட ஒரு சில குறிப்பிட்ட காலகட்டம் ‘பீக் வைரஸ் தொற்று காலம்’ என்று அழைக்கப்பட்டது. அதாவது அந்த காலகட்டத்தில் அதிகபட்ச நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மூன்றாம் அலையில் கொரோனாவின் பீக் காலமாக ஜனவரி இரண்டாம் வாரம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதை பின்பற்றினால் மூன்று மாதங்களுக்குள் கோவிட் பரவல் நீங்கி விடும் - புற்றுநோயியல் நிபுணர்கள் கருத்து

இந்த ஆய்வை உறுதிப்படுத்தும் விதமாக ஐஐடி கான்பூர் மற்றொரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதன்படி பிப்ரவரி 3 அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வைரசின் தாக்கம் உச்சத்தை அடையும் என்று கூறப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள மாடல்களின் கணிப்புப்படி, இந்தியா முழுவதுமே பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.



தினமும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை டிசம்பர் உடன் ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது என்று அச்சுறுத்தக்கூடிய தகவல் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலையோடு கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு நீங்கிவிடும் என்று நினைத்திருந்த போது எதிர்பாராதவிதமாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு டிசம்பர் மாத இறுதியிலிருந்து அதிகரித்து வருகிறது.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: CoronaVirus, Covid-19, Omicron

அடுத்த செய்தி