மென்ஸ்சுரல் கப் என்பது புனல் வடிவில் சிலிகான் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு கப் ஆகும். மாதவிடாய் காலத்தின்போது பெண்ணுறுப்பின் உள்ளே இதை பொருத்திக் கொள்வதன் மூலமாக உதிரப் போக்கை சேகரித்து சுத்தம் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.
பொதுவாக மாதவிலக்கு காலத்தில் அனேக பெண்கள் நேப்கின்களை பயன்படுத்துவது வழக்கம் என்றாலும், சிலருக்கு அது அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆகவே, அவர்களுக்கு பயனுள்ளதாகவும், எளிமையாகப் பொருத்தி சௌகரியமாக அன்றாடப் பணிகளை கவனிக்க ஏதுவாகவும் மென்ஸ்சுரல் கப் இருக்கிறது.
மென்ஸ்சுரல் கப் என்பது நீளமானதாக இருக்கிறது. விலை மலிவாகவும், மீண்டும் பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. இதை நீங்கள் முதல்முறை பயன்படுத்த இருக்கிறீர்கள் என்றால் சில டிப்ஸ்களை தெரிந்து கொள்வது அவசியமானது.
வழிகாட்டு நெறிமுறைகளை படிக்கவும்
மென்ஸ்சுரல் கப் பயன்படுத்த முடிவு செய்வதற்கு முன்பாக அதை எப்படி பயன்படுத்துவது, சுத்தம் செய்வது எப்படி, பாதுகாப்பாக வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பேக்கேஜில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முதலில் படிக்க வேண்டும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று லீஸா மங்கள்தாஸ் என்ற சமூக வலைதளப் பதிவாளர் இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
பயன்படுத்தும் முன்பாக கொதிக்க வைக்கவும்
முதல்முறை மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவதற்கு முன்பாக அதனை ஸ்டெர்லைஸ் செய்யும் விதமாக சுடு தண்ணீரில் சுமார் 6 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாகவும் இவ்வாறு கொதிக்கும் நீரில் அலச வேண்டும்.
கைகளை கழுவுங்கள்
மென்ஸ்சுரல் கப் பொருத்துவதற்கு முன்பு மற்றும் பின்பு ஆகிய இரண்டு சந்தர்பங்களிலும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அதே சமயம், கப் சேதமடைந்ததாக இல்லாமல், அதில் அழுக்கு மற்றும் கிருமி தொற்று இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
சிறிது நேரம் எடுக்கும்
முதல் முயற்சியிலேயே மென்ஸ்சுரல் கப்-ஐ சரியாக பொருத்திவிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதற்கு சில காலம் தேவைப்படும். ஒருசில முயற்சிகளில் சரியாக பொருத்தலாம். ஒருவேளை தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டீர்கள் என்றால் குளிக்கும் சமயத்திலேயே இதனை பொருத்துவதற்கு முயற்சி செய்யலாம். தண்ணீர் லூப்ரிகண்டாக செயல்படுவதாக எளிமையாக பொருந்தி விடும்.
வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதுதான் பெண்களுக்கு PCOS -ஐ அதிகரிக்கிறதா..?
உங்களுக்கான சரியான அளவை தேர்வு செய்யவும்
ஒவ்வொரு பெண்ணின் உடலும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டது. அதைப் போலவே ஒரு பெண்ணின் வயது, உதிரப் போக்கின் அளவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மென்ஸ்சுரல் கப் அளவு மாறும். கப்-ஐ எப்படி பொருத்துவது என்பது குறித்து இந்த அனிமேஷன் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Menstrual Cup, Periods