Home /News /lifestyle /

30 வயதில் கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

30 வயதில் கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

Sonam Kapoor

Sonam Kapoor

Women Health | பல பெண்கள் தங்கள் 30 வயதிற்கு மேல் கர்ப்பமடைய விரும்புகிறார்கள். இதில் உயிரியல் கடிகாரம் (biological clock) முக்கிய பங்கு வகிக்கும் ஒரு விஷயம் என்றாலும், சில நேரங்களில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கிறர்கள். எனினும் 35 வயதை தாண்டிய பெண்கள் கர்ப்பமடையாமல் போவதற்கு இருக்கும் அபாயங்களை புரிந்து கொள்ளவதும் அவசியம். பெண்களுக்கு வயது ஏற ஏற அவர்களின் கருமுட்டை தரம் மோசமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
தான் கர்ப்பமாக உள்ள தகவலை பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர், தனது கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் இணைந்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கிறார். 36 வயதான நடிகை சோனம் கபூர் தேசிய விருது பெற்றவர் ஆவார்.

இதுதொடர்பாக தம்பதியர் வெளியிட்டுள்ள சோஷியல் மீடியா போஸ்ட்டில் பிறக்க போகும் தங்கள் குழந்தைக்காக ஒரு சிறிய கவிதையை எழுதி உள்ளனர். "நான்கு கைகள். எங்களால் இயன்றவரை உன்னை உயர்த்துவோம். இரண்டு இதயங்கள். அது உன்னுடைய ஒவ்வொரு அடியிலும் ஒத்துப்போகும். உன் மீது அன்பையும் ஆதரவையும் மட்டுமே பொழிய போகிறது ஒரு குடும்பம். உன்னை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று கூறி இருக்கிறார்கள்.

சோனம் கபூர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்த அவரது உறவினர்களான ஜான்வி கபூர், குஷி கபூர், ஷனாயா கபூர் மற்றும் அன்ஷுலா கபூர் மற்றும் பல பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். 36 வயதில் சோனம் கபூர் கர்ப்பமாகி உள்ள நிலையில், 30 வயதிற்குப் பிறகு கர்ப்பத்தை திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். பல பெண்கள் தங்கள் 30 வயதிற்கு மேல் கர்ப்பமடைய விரும்புகிறார்கள். இதில் உயிரியல் கடிகாரம் (biological clock) முக்கிய பங்கு வகிக்கும் ஒரு விஷயம் என்றாலும், சில நேரங்களில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கிறர்கள். எனினும் 35 வயதை தாண்டிய பெண்கள் கர்ப்பமடையாமல் போவதற்கு இருக்கும் அபாயங்களை புரிந்து கொள்ளவதும் அவசியம். பெண்களுக்கு வயது ஏற ஏற அவர்களின் கருமுட்டை தரம் மோசமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இயற்கை முறையில் கருத்தரிக்க, பெண்கள் 35 வயதிற்குள் கர்ப்பமாக பரிந்துரைக்கப்படுகிறது.



 




View this post on Instagram





 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)






35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண் கர்ப்பத்தில் ஆபத்து உள்ளவராக கருதப்படுகிறார். ஏனென்றால் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது குரோமோசோம் பிரச்சனைகள் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். அதே போல 30-களின் பிற்பகுதியில் பெண்களை பாதிக்க கூடிய சில பொதுவான சிக்கல்களில் ப்ரீக்ளாம்ப்சியா, கர்ப்பகால நீரிழிவு, இறந்தே பிறக்கும் குழந்தை அல்லது கருச்சிதைவு ஆகியவை அடங்கும்.

Also Read : கருத்தடை முயற்சிகளை கொண்டால் பின்னாளில் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படுமா?

அதற்காக 30 வயதில் பெண்கள் கருத்தரிக்க கூடாது என்று அர்த்தமல்ல. 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பமடைவதில் கவலைகள் இருந்ததாலும் ஆரோக்கிய எடையை பராமரிப்பு, ஆரோக்கியமான டயட் மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்தல் போன்ற நல்ல பழக்கங்களை தம்பதிகள் கடைப்பிடித்தால் இருக்கும் ஆபத்துகளை குறைக்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Pregnancy, Sonam Kapoor, Women Health

அடுத்த செய்தி