ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Emotional Addiction | உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? இதிலிருந்து விடுபட இது தான் சிறந்த வழி!

Emotional Addiction | உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? இதிலிருந்து விடுபட இது தான் சிறந்த வழி!

Emotional Addiction

Emotional Addiction

ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கும், உணர்ச்சி அடிமைத்தனத்திலிருந்து விடுபது என்ன தொடர்பு என்ற கேள்வி பலருக்கும் ஏற்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்பிக்கையான நபர்களிடம் மனம் திறந்து பேசுதல், ஊட்டச்சத்து உணவுகள், டைரி எழுதுவது மற்றும் தியானம் செய்வது போன்ற வழிமுறைகளை நீங்கள் முறையாக பின்பற்றினாலே Emotional Addiction என்கிற உணர்ச்சி அடிமைத்தனத்திலிருந்து விடுபடலாம்.

இன்றைக்கு உள்ள இயந்திர வாழ்க்கையில் இளைஞர்கள் மட்டுமில்லை பெரிய ஆளுமைகள் கூட சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாத நிலை. இதுப்போன்று நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத காலக்கட்டத்தில் தான், சமூகத்தில் பேச்சுப்பொருளாக மாறிவிடுகின்றோம். குறிப்பாக சினிமா அல்லது அரசியல் பிரபலங்கள் மட்டுமில்லாது சாதாரண மக்களும் பொது இடங்களில் உணர்ச்சி வசப்படும் போது தேவையற்ற மீம்ஸ்களுக்கு சொந்தக்காரர் ஆகிவிடுகின்றோம்.

பொதுவாக உணர்ச்சிவசப்படுவது என்பது எதிர்மறையான விஷயம் இல்லை என்றாலும் வெளிப்படையாக உணர்ச்சிவசப்படும் போது வாழ்க்கையில் தேவையற்ற எதிர்மறை தாக்கத்தை சந்திக்க நேரிடுகிறது. இதோடு நீங்கள் நிதானமாக முடிவெடுக்கும் விஷயங்களைக் கூட எடுக்க முடியாத நிலைக்கு நம்மை ஆளாக்கிவிடும். அந்நேரத்தில் யார் என்ன அந்நேரத்தில் சொன்னாலும் நம்மால் காதுக் கொடுத்துக்கூட கேட்க முடியாது. கோபத்தில் கத்திவிடுவோம் அல்லது சண்டையிடுவோம்.

இப்பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுவதில்லை. உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், உணர்ச்சிக்கு அடிமையானவர்கள் தான் அதிகமாக பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடும். எனவே இதுப்போன்ற நீங்கள் இருந்தாலும் இல்லை உங்களுக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராக இருந்தாலும் உங்களின் எமோஷனல் அடிக்சனைக் கட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன வழிமுறைகள் உள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்.

Emotional Addiction யைக் கட்டுப்படுத்த உதவும் சில வழிமுறைகள்:

நெருக்கமானவர்களிடம் பேசுங்கள்:

உங்களது வாழ்க்கையில் நீங்கள் பல பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் எதிர்க்கொள்ள நேரிடும். பிரச்சனையே வாழ்க்கையாகப் பயணிக்கும் பலர் மனதில் உள்ளதை பிறரிடம் கூறினாலே ஒரளவிற்கு மன நிம்மதியுடன் இருப்பார்கள். ஆனால் பலரும் இதனை முறையாக மேற்கொள்வதில்லை. எனவே உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அப்போது தான் உங்களது வாழ்க்கையில் நீங்கள் என்ன மாறியுள்ளீர்கள்?என்பது தொடர்பான கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். இது நிச்சயம் மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகளில் அதீத கவனம் தேவை:

ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கும், உணர்ச்சி அடிமைத்தனத்திலிருந்து விடுபது என்ன தொடர்பு என்ற கேள்வி பலருக்கும் ஏற்படும். ஆனால் உணர்ச்சி வசப்படுவதிலிருந்து விடுபடுவதற்கு வலுவான மற்றும் ஆரோக்கியமான மனம் தேவை. நீங்கள் அதிகப்படியான சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடுது உங்களை உணர்ச்சிப்படுவதற்கு வாய்ப்பளிக்கும். இதோடு உங்களது மனதையும் உடலையும் சோர்வாக்கிவிடும். எனவே இறைச்சி, காய்கறிகள், பழங்கள், நெய், பருப்புகள் மற்றும் முட்டை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

Also Read : உங்களுக்கு மனச்சோர்வை உண்டாக்குகிறதா சோஷியல் மீடியாக்கள்? பாதிப்பை தவிர்க்கும் வழிகள் என்ன?

தியானம் மற்றும் டைரி எழுதுவது:

உங்களது மனதைக் கட்டுக்குள் வைத்திப்பதற்கு மன அமைதி தேவை. இதற்கு சிறந்த தீர்வு தியானம் ஒன்று தான். எனவே தினமும் தியானம் மேற்கொள்வதற்கு மறந்து விடாதீர்கள்.அடுத்தப்படியாக ஜெர்னலிங் அதாவது உங்கள் மனதில் பட்டதை டைரியாக எழுதுவது. நம் மனதில் உள்ள பல விஷயங்களை அனைவரிடம் நேரடியாக பகிர்ந்துக் கொள்ள முடியாது. எனவே தான் என்ன மனதில் படுகிறதோ? என்ன தவறு நீங்கள் செய்துள்ளீர்கள்? என்பதெல்லாம் குறித்து நீங்கள் எழுத ஆரம்பிக்க வேண்டும். இது உங்களது மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

இதோடு உங்களது வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறு என்ன? எதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து செயல்பட்டாலே உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது முதல் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்கின்றனர் மன நல மருத்துவர்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Depression, Health, Lifestyle