Home /News /lifestyle /

மனஅழுத்தம் ஆபத்து! கர்ப்பக் காலத்தில் தவிர்ப்பது எப்படி? ஃபாலோ செய்ய சில பயிற்சிகள்!

மனஅழுத்தம் ஆபத்து! கர்ப்பக் காலத்தில் தவிர்ப்பது எப்படி? ஃபாலோ செய்ய சில பயிற்சிகள்!

மன ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி இன்றியமையாததாக கருதப்படுகிறது. மேலும் அது மன அழுத்தத்தை குறைக்கும்.

மன ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி இன்றியமையாததாக கருதப்படுகிறது. மேலும் அது மன அழுத்தத்தை குறைக்கும்.

மன ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி இன்றியமையாததாக கருதப்படுகிறது. மேலும் அது மன அழுத்தத்தை குறைக்கும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகாலம் என்பது மிக முக்கியமான கட்டம். மிகவும் சந்தோஷமான தருணமும் கூட. இருப்பினும் குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன் அந்த 9 மாத கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் பல விதமான மனமாற்றங்களுக்கு ஆளாவார்கள். மூட் ஸ்விங் என்று சொல்லக்கூடிய மனநிலை மாற்றத்தால் சிலர் அடிக்கடி கோபப்படுதல், மன அழுத்தத்தை அனுபவிப்பது, சோகமாக உணர்வது போன்ற பல உணர்வுகளை கொண்டிருப்பர். இதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உங்கள் மூளையில் உள்ள ரசாயனங்களை பாதிக்கலாம். இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆனால், கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மகிழ்ச்சியின் நேரமாக இருக்க வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், அது உங்களில் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அதனை சமாளிக்கும் சில வழிகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

மனம்விட்டு பேசுங்கள்:

நீங்கள் உங்கள் கர்ப்பகாலத்தில் மிகவும் கவலையாக உணர்ந்தால், அதை பற்றி உங்கள் கணவர், நெருங்கிய நண்பர், உங்கள் பெற்றோர் அல்லது நீங்கள் மிகவும் நம்பும் குடும்ப உறுப்பினர் என யாராக இருந்தாலும் சரி, யாராவது ஒருவரிடம் அதை பற்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு ஆதரவை வழங்கலாம். உங்கள் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்திலிருந்து விடுபட உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பற்றி பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கலாம். ஒருவேளை உங்களுக்கு மனஅழுத்தத்தை சமாளிப்பது கடினமாக இருந்தால், பதட்டத்தை சமாளிக்க பயிற்சி பெற்ற ஒரு சிகிச்சையாளரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிங்க | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!

ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள்:

கர்ப்ப காலத்தில் ஆழ்ந்த சுவாச பயிற்சி என்பது மனஅழுத்தத்தை சமாளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் இருந்து கழிவுப் பொருட்களை திறம்பட அகற்றுவதையும், தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் போதுமான அளவு ஆக்ஸிஜனை வழங்குவதையும் உறுதி செய்கிறது. சுவாச நரம்பு மண்டலத்தை சுத்தப்படுத்துவதோடு அமைதிப்படுத்துகிறது. இனிமையான நல்வாழ்வின் உணர்வைத் தூண்டுகிறது. நீங்கள் தரையில் நிதானமாக படுக்கும்போது உங்கள் வயிற்றில் கையை வைத்து ஆழமாக சுவாசிக்க பயிற்சி செய்யுங்கள். நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது கையை மேலும் கீழும் நகர்த்துவதில் கவனம் செலுத்துங்கள். இந்த சுவாசம் கர்ப்பத்திற்கு சிறந்தது. ஏனெனில் இது மூன்றில் ஒரு பங்கு ஆக்ஸிஜனை உள்ளிழுக்க உதவும்.

உடற்பயிற்சி:

உங்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க பல்வேறு உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிக நல்லது. மன ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி இன்றியமையாததாக கருதப்படுகிறது. மேலும் அது மன அழுத்தத்தை குறைக்கும். சோர்வைக் குறைப்பதிலும், விழிப்புணர்வு மற்றும் செறிவை மேம்படுத்துவதிலும், ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. மன அழுத்தம் உங்கள் ஆற்றல் அல்லது கவனம் செலுத்தும் திறனைக் குறைக்கும் போது உடற்பயிற்சி மிக உதவியாக இருக்கும். மூளையும் அதன் பல நரம்பு இணைப்புகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது, ​​உடலின் மற்ற பகுதிகளும் அதன் தாக்கத்தை உணர்கின்றன. எனவே, உடற்பயிற்சிகளால் உங்கள் உடல் நன்றாக இருந்தால், உங்கள் மனமும் நன்றாக இருக்கும்.

இதையும் படிங்க | 20, 30, 40… வயதிற்கு ஏற்ப மாற்றம் காணும் பெண்ணுறுப்பு… நிச்சயம் அறிய வேண்டியவை..!

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பின்வருமாறு:

நடைபயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் நிதானமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க முடியும். நடைபயிற்சி உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளை அதிகம் பாதிக்காமல் உங்கள் இருதய அமைப்பு மிகவும் திறமையாக செயல்பட உதவும். கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி பாதுகாப்பான மற்றும் எளிதான செயலாக கருதப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை, கர்ப்ப காலம் முழுவதும் ஆரோக்கியமான எடை அதிகரிப்பை பராமரிக்க உதவுகிறது. உங்கள் தசைகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கலை எதிர்த்து உங்கள் குடல் இயக்கத்தை செயல்பட வைக்க உதவுகிறது. ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்திற்காக உங்கள் இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நாளங்களை பம்ப் செய்கிறது. தவறாமல் முறையாக யோகா பயின்று அதை பின்பற்றுங்கள்.
Published by:Archana R
First published:

Tags: Pregnancy, Pregnancy care

அடுத்த செய்தி