இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு மற்றும் இதய நோயால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, நமது அன்றாட வாழ்க்கை முறையும் ஒரு காரணம். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மருந்து மாத்திரைகளை மட்டுமே நாடுவார்கள்.
ஆனால், இயற்கையான முறையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மறந்து விடுகிறார்கள். இயற்கை நமக்கு அளிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் யாவும் நம் உடலை காக்கும் இயற்கை மருந்துகள். அந்தவகையில், நம் இன்று இதயத்தை ஆரோக்கியத்தை காக்கும் ஒரு சில பழங்கள் பற்றி இங்கு காணலாம்.
ஆப்பிள் :
தினமும் ஒரு ஆப்பிள் (Apple ) சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்வதில் இருந்து விலகி இருக்கலாம். ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. நாள் ஒன்றுக்கு 1 ஆப்பிள் சாப்பிடுபவர்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விலகி இருக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்ரிகாட்ஸ் :
ஆப்ரிகாட்ஸ் ( Apricot ) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்க்கரை பாதாமி வைட்டமின் A, C, E, K மற்றும் நார்ச்சத்தின் சிறந்த மூலமாக விளங்குகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த நாளங்களின் தளர்வுக்கு வழிவகுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இவை, சந்தைகளில் மே முதல் ஆகஸ்ட் வரை கிடைக்கும். இல்லையெனில், உலர்ந்த ஆப்ரிகாட்ஸ் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். அவை, அதே ஊட்டச்சத்தை நமக்கு வழங்குகிறது.
வாழைப்பழங்கள் :
வாழைப்பழங்களில் ( Bananas ) நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் சி அதிகளவு காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இயற்கையாகவே எல்லா சீசன்களிலும் கிடைக்கும் வாழைப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
பெர்ரி :
அவுரிநெல்லிகள், ப்ளாக்பெர்ரிகள், ராஸ்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் என அனைத்து விதமான பெர்ரி (Berries) பழங்களும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த பழங்கள் ஆகும். இவற்றில் உள்ள நார்ச்சத்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ் படி, அதிக நார்ச்சத்துள்ள உணவை உண்பது கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
திராட்சைப்பழம் :
வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தின் சிறந்த மூலமாக இருக்கும் திராட்சை பழங்கள் (Grapefruit), உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. திராட்சைப்பழத்தை தவறாமல் சாப்பிடுபவர்கள் அல்லது சாறு குடிப்பவர்கள் அதிக "நல்ல" HDL கொழுப்பு மற்றும் குறைந்த ட்ரைகிளிசரைடுகளைக் கொண்டிருந்தனர்.
Also Read : ஆண்கள் தங்களின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க இதை பின்பற்றுங்கள்!!
ஆரஞ்சு பழங்கள் :
சிட்ரஸ் பழமான ஆரஞ்சுகளில் (Oranges) உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் வைப்பதோடு, பெருந்தமனி தடிப்பு, அழற்சி போன்ற அபாயத்தையும் குறைக்கிறது. ஆரஞ்சுப் பழங்களில் உள்ள ஃபிளாவனாய்டுகள் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்திகளைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றனர். ஆரஞ்சு பழத்திலும் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
பீட்டா கரோட்டின் :
நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே ஆகியவற்றின் மூலமாக இந்த பழம் உள்ளது. இந்த குழிப்பேரி பழத்தில் காணப்படும் பீட்டா கரோட்டின் (Peaches), இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்கள், பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோயில் இருந்து நம்மை காக்கிறது. ரத்தத்தில் பீட்டா கரோட்டின் அதிக அளவு உள்ள ஆண்கள் இதய நோய் அல்லது பக்கவாதத்தால் இறப்பது குறைவு என்று 2018 இல் சர்குலேஷன் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
பட்டர் ஃபுரூட் :
வெண்ணெய் பழத்தில் (Avocado) மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பொட்டாசியம் பெருமளவு காணப்படுகிறது. இவை, உடலில் அதிகப்படியாக சேரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது. எனவே, இதய ஆரோக்கியத்தை பாதுக்காக்க நினைப்பவர்கள் இவற்றை உட்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health tips, Healthy Food, Heart health