உங்கள் இதயம் சீராக செயல்படுகிறதா..? இந்த அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்...!

இளம் வயதில் மாரடைப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உங்கள் இதயம் சீராக செயல்படுகிறதா..? இந்த அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்...!
இதயம்
  • Share this:
நவீன வாழ்க்கை முறையால் இதயப் பிரச்னை என்பது இளைஞர்களையும் தாக்குவதுதான் வேதனை. இளம் வயதில் மாரடைப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதாய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இதை முன்கூட்டியே அறிந்து செயல்படுவது அவசியம். உங்கள் இதயம் சீராக செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.

நெஞ்சு வலி : நெஞ்சை அழுத்தும் உணர்வு, வலி, எரிச்சல், குத்துதல் , அசௌகரியம் போன்ற உணர்வுகள் சில நிமிடங்களுக்கு நீடித்து விட்டாலும் அதை அலட்சியமாக விட்டுவிடாதீர்கள். அதேபோல் அந்த வலி, கைகள், உடல் என மற்ற பகுதிகளிலும் தொடர்ந்தால் பிரச்னை தீவிரத்தை அடைகிறது என உணருங்கள்.

படபடப்பு : இதயம் அடிக்கரி அதன் சீரான துடிப்பைக் காட்டிலும் அதிகமாகும். படபடப்பு அதிகரிக்கும். அதுபோன்ற நேரத்தில் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்து ஓய்வெடுங்கள், படுக்க முடிந்தால் படுத்துவிடுங்கள்.
மூச்சுத் திணறல் : இதயம் படபடப்பு அதிகரித்தால் மூச்சுத் திணறல் உண்டாகும். இதை தொடர்ந்து இறுமல் , சளியில் இரத்தம் வருதல் போன்றவை இருந்தால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

சோர்வு : அன்றாடம் செய்யும் வேலைகளையும் சில நாட்களாக செய்ய முடியாம் சோர்வாக உணர்ந்தால் அதுவும் இதயப் பிரச்னையின் அறிகுறிதான்.தலைச்சுற்றல் : மயக்கம் , தலை சுற்றல் போன்ற உணர்வுகள் அதோடு அடிக்கடி நெஞ்சு வலி அறிகுகளும் இருந்தால் தவிர்க்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

பார்க்க :

 
First published: April 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading