முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் 5 வழிமுறைகள்..!

உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் 5 வழிமுறைகள்..!

வளர்சிதை மாற்றம்

வளர்சிதை மாற்றம்

உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும்

  • Last Updated :

வளர்சிதை மாற்றம் அல்லது வளர்சிதை மாற்ற விகிதம் என்பது, நீங்கள் சாப்பிடும் உணவினை உங்கள் உடல் திடமாகவோ அல்லது திரவமாகவோ மாற்றும் வேகம் ஆகும். இது கலோரிகளை குறைப்பதை தீர்மானிக்கும் செயல்திறன் அளவு ஆகும். எனவே ஒருவரில் இருக்கும் அதிக வளர்சிதை மாற்றம், உடலின் கலோரி எரியும் திறனை அதிகமாக்கும். இதனால், ஒரு நபர் தனது கூடுதல் கிலோவைக் குறைத்து ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க முடியும்.

அதிக வளர்சிதை மாற்றம் உங்களை ஆற்றலுடன் வைப்பதோடு, உங்களை நன்றாக உணர வைக்கிறது. வளர்சிதை மாற்ற விகிதம் மரபியல், வயது, பாலினம், உடல் கொழுப்பு, தசை நிறை மற்றும் உடல் செயல்பாடு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தைக் கட்டுப்படுத்தும் பல காரணிகள் உள்ளன. எனவே, உங்கள் வளர்சிதை மாற்றத்தை நல்லமுறையில் செயல்படுத்த சில முக்கிய வழிகள் குறித்து பின்வருமாறு காண்போம்.

உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் ஐந்து வழிகள்:

1. அதிகமாக சாப்பிடுதல்:

அதிகமாக உணவினை, அதுவும் அதிகமான எண்ணைக்கையில் (பல்வேறு வகை உணவுகள்) சாப்பிடுவதன் மூலம், உங்கள் உணவு முறைக்கு சில ஒழுங்குமுறைகளை கொண்டு வர முடியும். மேலும் சீரான வளர்சிதை மாற்ற சமநிலையை பராமரிக்க உதவும். அதிகமாக உணவுகளை சாப்பிடும் போது, அவை குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், உங்கள் வளர்சிதை மாற்றம் கலோரிகளை மெதுவாக எரிக்கும், மேலும் உடல் அதிக கொழுப்பை சேமிக்கும்.

2. தசை மற்றும் வலிமை பயிற்சி

உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், உடற்பயிற்சியைத் தவிர, நீங்கள் அதிக தீவிரம் கொண்ட பயிற்சியையும் செய்ய வேண்டும். பொதுவாக தசை நிறை அதிக வளர்சிதை மாற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. அதாவது தசையைத் தக்கவைக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதனால், உங்கள் தசைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்திக்கொள்ள முடியும்.

3. நிறைய தண்ணீர் பருகுதல்:

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தண்ணீர் ஒரு தேவையான மூலப்பொருள் ஆகும். தண்ணீர் குடிப்பது கொழுப்பை குறைக்க உதவும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன..?

4. போதுமான அளவு தூக்கம்:

மிகக் குறைவான தூக்கம், கிரெலின் மற்றும் லெப்டின் போன்ற ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இது உங்களை பசியுடனும் நிறைவாகவும் உணர வைக்கிறது. மேலும், போதுமான தூக்கம் உங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். எனவே தூக்கத்தை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.

5. நீண்ட நேரம் உட்காருவதைத் தவிர்க்கவும்:

top videos

    வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியமாகவும், தற்போதைய நடைமுறையாகவும் மாறி வருவதால், நம் உடல்கள் முன்னெப்போதையும் விட நிலையானதாகிவிட்டன. காரணம் ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்திருப்பது. இதுபோன்ற நேரத்தில் சற்று நேரத்திற்கு நிற்பது நடப்பது போன்ற செயல்முறையை செய்ய வேண்டும். அதிக நேரம் உட்கார்ந்திருப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை பெரிதும் பாதிக்கும்.

    First published:

    Tags: Metabolism