Home /News /lifestyle /

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 5 உணவுகள் - பெண்களுக்கான ஸ்பெஷல் கைட்லைன்ஸ்!

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 5 உணவுகள் - பெண்களுக்கான ஸ்பெஷல் கைட்லைன்ஸ்!

இனிக்காத, குறைந்த கொழுப்புள்ள யோகர்ட் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவும்.

இனிக்காத, குறைந்த கொழுப்புள்ள யோகர்ட் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவும்.

இனிக்காத, குறைந்த கொழுப்புள்ள யோகர்ட் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் கர்ப்பமாக இருப்பதைப் பற்றி கவலைப்படுவார்கள். ஏனெனில், அவர்களின் குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரவும் வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியமான, நன்கு சமநிலையான உணவை உட்கொள்வது, எடை அதிகரிப்பை நிர்வகித்தல் மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவை இரத்த குளுக்கோஸைக் கட்டுப்படுத்தவும், சிக்கலற்ற கர்ப்பத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் வழங்கவும் உதவும். கொரோனா யுகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஏற்படும் ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது. ஆகவே சத்தான உணவை உட்கொள்வது அவசியம்.

நீரிழிவு உணவு: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 5 உணவுகள்

ஆப்பிள்கள்:

ஆப்பிள்கள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்தவை. அவற்றை உட்கொள்வது ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டியாக அமைகிறது. அவற்றில் பாலிபினால்கள், தாவர அடிப்படையிலான கலவைகள் உள்ளதால் அவை டைப் 2 நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். ஆப்பிளில் உள்ள சர்க்கரை உள்ளடக்கம், அதாவது பிரக்டோஸ் பற்றி கவலைப்படுபவர்களுக்கு, உண்மை என்னவென்றால், இது இரத்த சர்க்கரையில் மிகக் குறைவான விளைவைக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க | ‘40 வயதினிலே’… 40 வயதிலும் உங்கள் எடையை குறைப்பது சாத்தியமே… 5 எஃபெக்டிவ் டிப்ஸ்!

கேரட்:

கேரட் பொதுவாக இனிப்பாக இருக்கும்போதிலும், இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் சுவையானது மட்டுமல்ல, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

முழு தானியங்கள்:

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை தானியங்களுடன் ஒப்பிடும்போது முழு தானியங்களில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஃபைபர் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது, ஊட்டச்சத்துக்கள் மெதுவான வேகத்தில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது. முழு தானியங்களான பழுப்பு அரிசி, தினை, ஓட்ஸ், பார்லி மற்றும் குயினோவா ஆகியவை நீரிழிவு நோயாளிகளின் சாய்ஸ் ஆகும்.

கொழுப்பு நிறைந்த மீன்:

சால்மன், ஹெர்ரிங், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு நோயாளிகளை பல்வேறு நீரிழிவு தொடர்பான சிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் புரதங்களால் நிறைந்துள்ளன. பெண்கள் நீண்ட நேரம் முழுதாக உணர உதவுகிறது. அதுமட்டுமின்றி அவர்களின் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைக்கிறது.

இதையும் படிங்க | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!

தயிர்:

தயிர் புரதம், கால்சியம் மற்றும் புரோபயாடிக் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இனிக்காத, குறைந்த கொழுப்புள்ள யோகர்ட் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவும். உணவுடன் தயிர் அல்லது பெர்ரி, நட்ஸ் மற்றும் விதைகளும் உணவுக்கு இடையில் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டும்.

உடல் எடையை பராமரிக்க பெண்கள் வாரத்திற்கு 4 முதல் 5 முறை யோகா, தியானம் அல்லது வேறு சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். சரிவிகித உணவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் இரத்த சர்க்கரையை சீராக்க ஒரு முக்கியமான வழியாகும். வீட்டில் சமைத்த உணவை அதிகம் உட்கொள்ளுங்கள், உணவைச் சரிபார்த்து, அதிக சர்க்கரை இல்லாத டீ மற்றும் காபியை அருந்த முயற்சிக்கவும். உணவில் கூடுதல் சுவைகளைச் சேர்க்க, அவற்றின் இடத்தில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
Published by:Archana R
First published:

Tags: Diabetes, Healthy Food, Women Health

அடுத்த செய்தி