Home /News /lifestyle /

சங்கு பூக்கள் (கருவிளை மலர்கள்) தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

சங்கு பூக்கள் (கருவிளை மலர்கள்) தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

சங்கு பூக்கள்

சங்கு பூக்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட் கூறுகளின் எண்ணிக்கை இந்த பூக்களின் நீல நிறத்தில் அதிகம் இருக்கிறது இது கவலை மற்றும் மன அழுத்தம் முதல் மலச்சிக்கல் வரையிலான பிரச்சனைகளை நீக்குகிறது.

பொதுவாக அபராஜிதா பூக்கள் என்று அழைக்கப்படும் சங்குப்பூக்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். நீல நிறத்தில் காட்சியளிக்கும் இது அழகான பூக்களில் ஒன்றாகும். இந்த மலர்கள் நீலம் மற்றும் வெள்ளை என 2 நிறங்களில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

இன்னும் குறிப்பாக சொன்னால் சங்கப் பாடல்களில் இதை கருவிளை மலர் என்று குறிப்பிட்டு உள்ளார்கள். சங்க காலத்தில் கருவிளை என்று குறிப்பிடப்பட்ட சங்குப்பூக்கள் பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் கூறுகளின் எண்ணிக்கை இந்த பூக்களின் நீல நிறத்தில் அதிகம் இருக்கிறது இது கவலை மற்றும் மன அழுத்தம் முதல் மலச்சிக்கல் வரையிலான பிரச்சனைகளை நீக்குகிறது.

கருவிளை பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நமது ஆரோக்கியத்திற்கு அது தரும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்..

இதில் உள்ள சத்துக்கள்:

US stylesatlife.com-ல் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின் படி, இந்த கருவிளை பூவில் (Butterfly Pea Flowers) பல வகை ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இதில் p-coumaric acid, delphinidin-3, kaempferol, 5-glucoside போன்றவை அடங்கும். மேலும் இவை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.



இந்த பூவில் அடங்கி உள்ள நன்மைகள்...

நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும்:

இந்த மலர்கள் அழற்சி எதிர்ப்பு கூறுகளை கொண்டுள்ளது, இது அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ஸிற்கு பொறுப்பாகும். வீக்கத்தை குறைப்பதன் மூலம் பல வகையான நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இது உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

கருவிளை பூவின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் டீ-யை குடிப்பது வீக்கம் மற்றும் வலியைப் போக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஃபிளாவனாய்டுகள் இருப்பதால், இது உடலில் உள்ள உள் மற்றும் வெளிப்புற வீக்கத்தை திறம்பட குறைக்க உதவுகிறது.

அளவுக்கு அதிகமாக இஞ்சி சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

எடையை குறைக்க உதவுகிறது:

சில ஆய்வுகளின்படி கருவிளை பூ சாறு குடிப்பது உடலில் கொழுப்பு செல்கள் உருவாகும் செயல்முறையை மெதுவாக்குகிறது. இந்த பூவில் காணப்படும் டெர்னாடின்கள் உடலில் உள்ள கொழுப்பு செல்களின் தொகுப்பை தடுக்கலாம் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனினும் இந்த மலர்கள் உடல் எடையை குறைக்க எப்படி உதவுகின்றன என்பது குறித்து இன்னும் மேலதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.



செரிமானத்தை சரியாக பராமரிக்கிறது:

இந்த பூவின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் வயிற்று தசைகளை தளர்த்துவதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் ஆன்டெல்மிண்டிக் (anthelmintic) பண்புகள் குடலில் புழு வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. இது குடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது மற்றும் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.

இந்த பூவில் டீ தயாரிப்பது எப்படி?

ஒரு கப் தண்ணீர், மூன்று முதல் நான்கு கருவிளை மலர்கள் மற்றும் சுவைக்காக சிறிது தேன் எடுத்து கொள்ளுங்கள் கொதிக்கும் நீரில் கழுவப்பட்ட பூக்களை சேர்த்து, அதை மூடி, 4-5 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் ஒரு கப் எடுத்து அதை வடிகட்டி சிறிது தேன் சேர்க்கவும். இந்த டீயை காலை உணவு மற்றும் மதிய உணவுக்குப் பிறகு எடுத்து கொள்வது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health

அடுத்த செய்தி