நீங்கள் உபயோகிக்கும் சானிடைசர்கள் உண்மையில் 99.9% கிருமிகளை அழிக்கிறதா? உண்மை என்ன..?

கிருமிநாசினி

பல தூய்மைப்படுத்தும் தயாரிப்புகள் தங்கள் லேபிளில் வைத்திருக்கக்கூடிய 99.99 சதவிகித கிருமி கொல்லல் என்ற கூற்று உண்மையில் உறுதியான வாக்குறுதியாக இருக்காது.

  • Share this:
பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஸ்போர்ஸ் போன்ற பல்வேறு வகையான தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளன. அவற்றின் தனிப்பட்ட செயல்திறன் என்று வரும்போது, பல தூய்மைப்படுத்தும் தயாரிப்புகள் தங்கள் லேபிளில் வைத்திருக்கக்கூடிய 99.99 சதவிகித கிருமி கொல்லல் என்ற கூற்று உண்மையில் உறுதியான வாக்குறுதியாக இருக்காது. அந்த பொருட்கள் ஏதேனும் ஒரு வகை கிருமிக்கு எதிராக மட்டுமே 99.99 சதவிகிதம் செயல்திறனுடன் போராடும். மேலும் அந்த தயாரிப்புகள் மற்ற ​​கிருமிகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்காது.

அதன்படி, "99.99% கிருமியை கொல்லும்" என்ற கூற்றைச் சுமக்கும் சில பிரபலமான தயாரிப்புகள் கிருமிகள் மற்றும் நோய்க்கிருமிகளின் ஒரு சிறிய நிறமாலையில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மேலும் சில தயாரிப்புகள் உண்மையில் கொல்லும் கிருமிகளை பாட்டிலின் எதாவது ஒரு இடத்தில் பட்டியலிட்டிருக்கும். இந்த பட்டியலில் ஒரு சில அல்லது அனைத்து வைரஸ்களும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இதன் பொருள் 100 சதவிகித ஸ்பெக்ட்ரம் ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே அதன் நோக்கமாக இருக்கும். அனைத்து கிருமிநாசினிகளும் மருத்துவ திரவங்களும் ஒரே மாதிரியாக உருவாக்கப்படுவதில்லை.

பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, கிருமிநாசினி சொலுஷன் தயாரிப்புகள் ஒன்றுக்கொன்று வெவ்வேறு வழிகளில் வேறுபடலாம். மேலும் அவை வெவ்வேறு செயல்திறன் கோரிக்கைகள் மற்றும் நீர்த்தல் விகிதங்களைக் கொண்டிருக்கலாம்.வசதி பராமரிப்பு அல்லது ஆழமான கிருமி கொல்லும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான கிருமிநாசினி சொலுஷன்கள், சோடியம் ஹைபோகுளோரைட் (ப்ளீச்), குவாட்டர்னரி அம்மோனியம் (குவாட்), ஹைட்ரஜன் பெராக்சைடு, வெள்ளி அயனிகள், ஆல்கஹால் அல்லது அமிலங்கள், அயோடின் போன்ற செயலில் உள்ள பொருட்களால் ஆனவை. இவை சொந்த கிருமி விரட்டும் பண்புகள், மற்றும் மற்ற சேர்மங்களுடன் கலக்கும்போது ஒரு சொலுஷனாக உருவாக்கப்படுகின்றன. ​​அவை நோய்க்கிருமிகளின் பல்வேறு விகாரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் சரியான தயாரிப்புகளை தான் வாங்குகிறீர்கள் என்று எப்படி சரிபார்ப்பது?

* மூன்றாம் தரப்பு சான்றிதழ்களைத் பாருங்கள்: எந்த ஒரு தயாரிப்புகளை நீங்கள் வாங்குவதற்கு முன்னதாக அவை ISO தரசான்றிதழ் பெற்றவையா என்பதை சரிபார்ப்பது அவசியம். அவை இல்லாமல் ஒரு தயாரிப்பு உரிமை கோர வாய்ப்பில்லை. இந்த விவரங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருட்களின் லேபிள்களில் காணலாம். எனவே, வெறுமனே விளம்பரங்கள் மற்றும் கண்கவரும் வாக்கியங்களை கண்டு மயங்காமல் துரிதமாக செயல்பட்டு தயரிப்புகளின் லேபிள்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சான்றிதழை கவனியுங்கள்.

ஜைகோவ்-டி தடுப்பூசி மூன்றாம் அலையிலிருந்து நம்மை பாதுகாக்குமா..? குழந்தைகளுக்கு பலன் தருமா? மருத்துவரின் விளக்கம்

* பயன்பாட்டு சூழ்நிலையில் விழிப்புடன் இருங்கள்: ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​கிருமிநாசினிக்கு முக்கிய காரணமான செயலில் உள்ள பொருட்களைப் பாருங்கள். அதாவது Domex Surface மற்றும் Floor Disinfectant போன்ற பிராண்டுகளில் சோடியம் ஹைபோகுளோரைட் ஒரு செயலில் உள்ள பொருளாக உள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த கிருமிநாசினிகளில் ஒன்றாகும். மேலும் இது பாக்டீரியா (கிராம்-பாசிட்டிவ் மற்றும் கிராம்-நெகடிவ் இரண்டும்), வைரஸ்கள் ( கிருமி நீக்கம் செய்ய மிகவும் கடினமான மூடப்பட்ட வைரஸ்கள் மற்றும் சுற்றப்படாத வைரஸ்கள்), பூஞ்சை மற்றும் ஸ்போர்ஸ் போன்ற பரந்த அளவிலான கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. பல்வேறு அறிவியல் சான்றுகளின்படி சோடியம் ஹைபோகுளோரைட் கிருமிகள் மீது வேகமாக செயல்படுகிறது மற்றும் கடின நீரால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

hand sanitizer

* ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் தயாரிப்புகளில் எச்சரிக்கையாக இருங்கள்: புத்துணர்ச்சி மற்றும் கிருமிநாசினி ஏஜெண்ட் என்று கூறி விற்பனை செய்யும் 10-ல் 8 தயாரிப்புகள் உண்மையில் நீர்த்துப்போகலாம். எனவே, ஒரு பொருள் தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் நல்ல நறுமணத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும் என்றால் அந்த தயாரிப்புகளை வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

* முக்கியமாக நீங்கள் வாங்கும் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்/அறிவியலைப் படிக்கவும்.

* இ-காமர்ஸ் தளங்கள், லேபிள்கள் அல்லது அந்த தயாரிப்பு இணையதளத்தில் நீங்கள் வாங்கும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் குறித்த விளக்கப் பிரிவுகள் மூலம் உங்களுக்கு தேவையான தகவலை பெற முடியும்.தற்போதைய சூழலில் தினசரி கிருமிநாசினி தயாரிப்புகளை பயன்படுத்துவது அவசியமாக இருக்கிறது. குறிப்பாக அன்றாட சுகாதாரம் முழுமையான முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில் சானிடைசர்கள், பாத்ரூம் கிளீனர், ஹாண்ட் வாஷ் போன்றவற்றின் தேவை அதிகரித்திருக்கிறது. எவ்வாறாயினும், நீங்கள் வாங்கும் தயாரிப்பின் பிரத்தியேகங்கள் மற்றும் அதன் சான்றிதழ்களை மதிப்பிடுவதில் நாம் சிறிது நேரம் ஒதுக்குவதும் மிக அவசியமாகும். நுகர்வோர் என்ற முறையில், நாம் வாங்கும் தயாரிப்புகளின் விவரங்களை பற்றி அறிந்திருக்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: