முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எச்சரிக்கை... தோலில் மருக்கள் ஏற்படுவது நீரிழ்வு நோய்க்கான அறிகுறியா..?

எச்சரிக்கை... தோலில் மருக்கள் ஏற்படுவது நீரிழ்வு நோய்க்கான அறிகுறியா..?

தோலில் மருக்கள்

தோலில் மருக்கள்

தோல் நிறமி குறைபாட்டால் உருவாகும்,அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் என்பது உடலின் மடிப்புகளில் இருண்ட வெல்வெட்டி பகுதிகளின் தோற்றத்தால் வகைப்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட தோல் கெட்டியாகலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நம்முடைய தோல் உடலின் பாதுகாப்பு அரணாக மட்டுமின்றி, உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வெளிக்காட்டும் எச்சரிக்கை அமைப்பாகவும் செயல்படுகிறது. உதாரணமாக உங்கள் கழுத்தில் சிறிய தோல் பகுதி புடைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?. அவை ஒருபோதும் வலியை ஏற்படுத்தாது. ஆனால் அத்தகைய அறிகுறியை தோல் வெளிப்படுத்துவதும் நீரழிவு நோய்க்கான எச்சரிக்கையாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உடலில் தோன்றும் ஒரு மென்மையான, சிறிய மேல்தூக்கிய பரு போன்ற சதை அமைப்பு மரு அதாவது ஸ்கின் டேக் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கின் டேக் தோன்றுவது தோல் வியாதியா? அல்லது பிற நோய்க்கான அறிகுறியா? என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. அதற்கான விரிவான விளக்கத்தை பார்க்கலாம்.

முதலில் ஸ்கின் டேக் எனப்படும் மருக்கள் உண்மையில் என்ன என்பது பற்றி புரிந்துகொள்ள வேண்டும். கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையின் தோல் மருத்துவர் சௌமியா ஜெகதீசனின் இதுகுறித்து கூறுகையில் “அக்ரோகார்டான்கள் என்றும் அழைக்கப்படும் ஸ்கின் டேக்குகள் கருமையாக தோலில் இருந்து வரும் தீங்கற்ற வளர்ச்சியாகும். அவை பொதுவாக கழுத்து, அக்குள் மற்றும் பிறப்புறுப்பு, தொடை ஆகிய பகுதிகளில் வர வாய்ப்புள்ளது. அடித்தளத்தின் நிறம், அமைப்பு, அளவு மற்றும் அகலம் மாறுபடலாம். பொதுவாக அவை எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது மற்றும் வளர்ச்சியும் மிகவும் மெதுவாக இருக்கும்” என்கிறார்.

குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலைமை எண்டோகிரைனாலஜி மருத்துவரான தீரஜ் கபூர் கூறுகையில் "கழுத்து மற்றும் அக்குள் ஆகிய பகுதிகள் மருக்கள் உருவாகும் பொதுவான தளங்கள் ஆகும். அப்பகுதிகளில் இன்சுலின் செயல்பட முடியாத போது மருக்கள் உருவாகிறது. எனவே அவற்றின் இருப்பு வரவிருக்கும் நீரிழிவு நோயைக் குறிக்கிறது. நீரழிவு நோய் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தோல் மீது மருக்கள் தோன்றும், எனவே அவை எதிர்கால நீரிழிவுக்கான எச்சரிக்கை அறிகுறியாகும். அவை மோசமான சர்க்கரைக் கட்டுப்பாட்டைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை.

சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா..? இந்த 5 வகையான உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்!

தோல் நிறமி குறைபாட்டால் உருவாகும்,அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் என்பது உடலின் மடிப்புகளில் இருண்ட வெல்வெட்டி பகுதிகளின் தோற்றத்தால் வகைப்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட தோல் கெட்டியாகலாம். பெரும்பாலும், அகாந்தோசிஸ் நிக்ரிகன்கள் அக்குள், இடுப்பு மற்றும் கழுத்தை பாதிக்கிறது. இவை பொதுவாக அதிக எடை கொண்டவர்களிடம் காணப்படும். ஒருவருக்கு ஸ்கின் டேக் தோன்றியவுடன் பரிசோதனை செய்யப்பட வேண்டும். நோயாளிக்கு நீரிழிவு நோய் இல்லை என்றால், அவருக்கு விரைவில் நீரழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம் கொள்ள வேண்டும். எனவே அந்த குறிப்பிட்ட நபர் ஆண்டுதோறும் நீரழிவு நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது நல்லது” என்கிறார்.

சிவப்பு நிற மருக்கள்:

தோலில் சிவப்பு நிற மருக்களை பெறும் நோயாளிகளில் பெரும்பாலானோர் உடல் பருமன், நீரழிவு நோய், ப்ரீ டயாபெட்டீஸ் போன்ற இணை நோய்க்களுக்கான அறிகுறிகள் ஆகும். இதனை தவிர்க்க வேண்டும் எனில் ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலமாக முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சில வகையான மருக்கள் மரபுவழி நோய்க்குறியின் ஒரு பகுதியாக அல்லது பாசல் செல் கார்சினோமாவின் மாறுபாட்டின் ஒரு பகுதியாக ஏற்படும் சில தீங்கற்ற கட்டிகளிலிருந்து பிரித்தறிய முடியாததாக இருக்கலாம். எனவே சருமத்தில் ஸ்கின் டேக் உருவானால் உடனடியாக மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

First published:

Tags: Diabetes