இன்றைய உலகில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய பெரும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருக்கிறது. புற்றுநோய்களில் பல வகைகள் உண்டு. அதில், மிக முக்கியமானதாக கருதப்படும் காஸ்ட்ரிக் கேன்சர் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
கேஸ்ட்ரிக் கேன்சர் என்றால் என்ன..?
வயிற்று புற்றுநோயைத் தான் கேஸ்ட்ரிக் கேன்சர் என்றும் குறிப்பிடுகின்றனர். நமது வயிற்றின் உள்சுவர் பகுதியில் இயல்புக்கு மாறாக தீய செல்கள் அபரிமிதமாக வளருவதையே நாம் கேன்சர் என்று குறிப்பிடுகிறோம். என்ன மாதிரியான புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது அல்லது எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து இதன் தீவிரத்தன்மை மாறுபடுகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் வயிற்று புற்றுநோய் பெரும்பாலும் அறிகுறிகளை காட்டுவதில்லை. அதே சமயம் முகத்தில் ஏற்படக் கூடிய வெடிப்புகளைக் கொண்டு வயிற்று புற்றுநோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.
சருமத்தில் உள்ள அறிகுறிகள்
கேஸ்ட்ரிக் கேன்சர் ஏற்படும்போது அரிதிலும் அரிதாக Papuloerythroderma of ofuji (PEO) என்னும் பாதிப்பு முகத்தில் ஏற்படக் கூடும். அதாவது முகத்தில் வீக்கம் இருக்கலாம் அல்லது சரும வெடிப்பு அல்லது தோல் உரிந்து வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதேபோன்ற அறிகுறிகளை உடல் முழுவதிலும் கூட காண முடியும்.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் பேரிச்சை... ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்..?
பிற அறிகுறிகள்
சரும ரீதியிலான அறிகுறிகளை தாண்டி, பசி இல்லாமை, திடீர் எடை இழப்பு, வயிற்று வலி, வயிற்றில் அசௌகரியம் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். இது மட்டுமல்லாமல் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, குமட்டல், ரத்தத்துடன் கூடிய அல்லது சாதாரண வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படலாம். கொஞ்சம் சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதும் புற்றுநோயின் அறிகுறி தான்.
புற்றுநோய் எப்படி வளர்கிறது?
வயிற்று புற்றுநோய் பல ஆண்டுகளாக வளரக் கூடியது ஆகும். கேன்சர் வளர்வதற்கு முன்பாகவே வயிற்றின் உட்புறச் சுவர்களில் மாற்றம் ஏற்படத் தொடங்கும். பெரும்பாலும் இந்த அறிகுறியை கண்டறிய இயலாது. வயிற்றில் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து அறிகுறிகள் மாறும்.
பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் மோசமான உணவுப் பழக்கங்கள்... அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்..
அபாயங்கள்
இந்த நோய் ஏற்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். பெரும்பாலும் உணவுப் பழக்க வழக்கம் தான் இதற்கு காரணமாக இருக்கிறது. உப்பு, புகையூட்டப்பட்ட உணவுகள் மற்றும் ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவையும், காய்கறி மற்றும் பழங்களை குறைவாக உட்கொள்வதும் புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைகிறது.
தடுப்பு முறைகள்
வண்ணமயமான பல வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்வதன் மூலமாக இதை தடுக்க முடியும். முழு தானிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மது மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட இறைச்சி, மீன் போன்ற உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சிகிச்சை செய்ய முடியுமா
உங்கள் வயது, ஒட்டுமொத்த உடல் நலன், எந்த இடத்தில் நோய் பாதிப்பு உள்ளது, எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். அறுவை சிகிச்சை, ரேடியோ தெரஃபி, ஹிமோதெரஃபி, இமியூனோதெரஃபி போன்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.