அதிக தண்ணீர் குடித்தாலும் பக்கவிளைவுகள் உண்டாகுமா..? அறிகுறிகளும்..சிகிச்சை முறைகளும்..!

அதிக தண்ணீர் குடித்தாலும் பக்கவிளைவுகள் உண்டாகுமா..? அறிகுறிகளும்..சிகிச்சை முறைகளும்..!

தண்ணீர்

உணவுப் பொருட்கள் மூலம் கிடைக்கும் சத்துகளை உறிஞ்சுவதற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.

  • Share this:
நீரின்றி அமையாது உலகு என்ற பொன்மொழி உடலுக்கும் பொருந்தும். நமது உடலானது 60 விழுக்காடு நீரால் ஆனது. நாம் குடிக்கும் குடிநீர் செல்களுக்கு தேவையான சத்துக்களை எடுத்துச் செல்லவும், உடலில் தேங்கும் கழிவுகளை அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உணவுப் பொருட்கள் மூலம் கிடைக்கும் சத்துகளை உறிஞ்சுவதற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலின் இயக்கத்துக்கு பெரிதும் அத்தியாவசியமாக இருக்கும் நீரை தேவைக்கு அதிகமாக பருகும்போது உடல் உபாதைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரின் நிறத்தில் இருந்து உடலில் தண்ணீரின் தேவையை உணர்ந்து கொள்ள முடியும்.

சிறுநீர் கலர்

நீங்கள் குடிக்கும் தண்ணீர் உங்கள் உடலுக்கு போதுமானதா? அல்லது தேவைக்கு அதிகமாக குடிக்கிறீர்களா என்பதை உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். இளம் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், தண்ணீரை போதுமான அளவில் எடுத்துக்கொள்கிறீர்கள். அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உங்கள் உடலில் தண்ணீர் தேவை அதிகமிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி. வெள்ளையாக வெளியேறினால் நீங்கள் அளவுக்கு அதிகமான தண்ணீரை குடித்திருக்கிறீர்கள் என புரிந்து கொள்ளலாம்.

தண்ணீர் அளவு

ஒவ்வொருவரின் உடலின் அமைப்புக்கு ஏற்ப தண்ணீரின் தேவை மாறுபடும். அதனை தெரிந்து கொண்டு தேவையான குடிநீரை நாள்தோறும் அருந்த வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும்போது ரத்த நாளங்களில் அதிகளவு தண்ணீர் சேரும் அபாயம் உள்ளது. சோடியத்தின் அளவு குறைந்து உடலியல் மாற்றங்கள் ஏற்படும். சோடியத்தின் அளவில் மாற்றம் ஏற்படும்போது பிற சத்துகளின் அளவில் மாற்றத்தை உணரும் அதே வேளையில், உடல் உபாதைகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.அதிக தண்ணீர் பருகுதல்

நீங்கள் தேவைக்கு அதிகமாக தண்ணீரை பருகுகிறீர்கள் என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கூறிவிடலாம். வெளியில் செல்லும்போது அல்லது அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்பட்டுவிடுமோ? என்ற பயத்தில் அதிக தண்ணீர் குடிப்பீர்கள். ஒரு சிலர் இரவு நேரத்தில் குறைந்தது ஏழு முறைக்கு மேல் சிறுநீர் செல்வார்கள். அவர்கள் உடலில் தண்ணீர் அதிகம் சேர்ந்திருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். சிலருக்கும் உடல் எடையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். கைகள்,பாதங்கள், உதடு ஆகியவை வெளிறிக் காணப்படும்.

இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பது நல்லதா..?

சோடியத்தின் அளவு

நம் உடலில் சோடியத்தின் அளவு குறையும் பட்சத்தில் அவை உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சோடியம் தான் நம் உடலிலிருக்கும் செல்களுக்கு தகவல்களை அனுப்புகிறது. செயல்பாடுகளை நினைவூட்டுகிறது. அதன் அளவு குறையும் பட்சத்தில் உடல் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படும். மேலும், அளவுக்கதிகமாக தண்ணீர் குடிக்கும் போது ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு அதீத வேலைப்பளு ஏற்பட்டு அவற்றின் செயல்பாடு குறையத் தொடங்கும். கிட்னியில் இருக்கக்கூடிய Glomeruli எனும் கேப்பிலரி பெட் சேதமடைந்திடும். மேலும், உட்சபட்சமாக, அதிக தண்ணீரை பருகும்போது மூளை வலுவிழந்து கோமா நிலைக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கின்றன.ஆபத்து காரணிகள்

அதிக தண்ணீர் குடித்தால் ஒரு சிலருக்கு உடல் எடை கூடும். தசைகள் வலுவிழந்து காணப்படும். அதிகப்படியான தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்டின் அளவு குறையத்துவங்கும். இதனால் தசை வலி ஏற்படும். நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது கிட்னியின் வேலையும் அதிகரிக்கிறது. இதனால் கிட்னி தொடர்ந்து செயலாற்றிக் கொண்டேயிருப்பதால் உங்கள் உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்ககூடிய ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் எப்போதும் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

 
Published by:Sivaranjani E
First published: