Home /News /lifestyle /

தைராய்டு மருந்துகளை நிறுத்தினால் என்ன ஆகும்..? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்..? மருத்துவரின் பதில்கள்

தைராய்டு மருந்துகளை நிறுத்தினால் என்ன ஆகும்..? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்..? மருத்துவரின் பதில்கள்

தைராய்டு

தைராய்டு

இன்றைக்கு ஒரு நாள் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாம்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
நம் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் சீராக வைத்திருக்க உதவுவதில் முக்கியமான பங்கு தைராய்டு சுரப்பிக்கு உள்ளது. சமீப காலமாக தைராய்டு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தைராய்டு சுரப்பி குறைபாடு ஆகியவை பலரையும் பலவிதமாக பாதித்து வருகிறது. தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தாலும் சரி அல்லது குறைவாக சுரந்தாலும் சரி, உடல்நலத்தை பாதிக்கிறது.

எடை குறைவு அல்லது எடை அதிகரிப்பு, ரத்த சோகை, தூக்கமின்மை, அடிக்கடி எரிச்சலான மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை தைராய்டு குறைபாட்டால் உண்டாகும் பிரச்சினைகள் ஆகும்.

தைராய்டு ஹார்மோன் அளவுகளை சீராக வைத்திருப்பதற்கு அதற்கான மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம். தைராய்டு ஹார்மோன் குறைபாட்டிற்கு உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் தீவிரமான மாதவிடாய் குறைபாடு, கருத்தரிப்பதில் சிக்கல் முதல் இதய நோய் பாதிப்பு வரை அபாயங்கள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளது.

தைராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு சரியான நேரம் என்ன?

பெரும்பாலான மருந்துகளை உணவுக்கு பின்பு உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகளுக்கு உணவுக்கு முன்பு சாப்பிட சொல்லி பரிந்துரைக்கப்படும். ஆனால் தைராய்டு கோளாறு பொருத்தவரை அதிகாலையிலேயே இதற்கான மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எல்லா நாட்களிலுமே, எதுவும் சாப்பிடுவதற்கு முன்பு அதிகாலையில் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் மருந்து ரத்தத்தில் கலந்து தைராய்டு ஹார்மோனை சரியான அளவில் நிர்வகிக்க இருக்க உதவும், என்று ஆகாஷ் ஹெல்த்கேர் மட்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலின் மூத்த கன்சல்டன்ட் மற்றும் துறை தலைவரான டாக்டர் ராஜேஷ் பண்டிட் தெரிவித்துள்ளார். தாமதமாக தைராய்டு மருந்து எடுத்துக் கொண்டால் அது உடலில் உறிஞ்சப்படும் தன்மை குறைந்து மருந்து சிறப்பாக வேலை செய்யாமல் போகும் அபாயம் இருக்கிறது.



நீங்கள் கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள் :

இன்றைக்கு ஒரு நாள் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாம் என்ற உங்கள் விருப்பம் போல நீங்கள் தைராய்டுகான மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது. இந்த குறைப்பாட்டைப் பொருத்தவரை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக இன்று அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு மருந்து உட்கொண்டால், தொடர்ச்சியாக நீங்கள் அதே நேரத்தில் தினமும் மருந்து உட்கொள்ள வேண்டும்.

கன்சிஸ்டன்சி என்பது தான் தைராய்டு சிகிச்சையின் முக்கிய பங்கு. நீங்கள் ஒரே நேரத்தில் மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது, அதை காபி அல்லது டீயுடன் சேர்த்து சாப்பிட கூடாது. காபி அல்லது டீ குடிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நீங்கள் தைராய்டு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தைராய்டு பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்து மருத்துவரே நீங்கள் எந்த நேரத்தில் மருந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவார்.



தைராய்டு பாதிப்புக்கான மருந்துகள் :

ஹைப்போ தைராய்டு: உங்களுக்கு ஹார்மோன் குறைவாக சுரக்கும்போது, சுரப்பியை செயல்படுவதற்கு தூண்டும் வகையில் குறைவான டோஸ் முதலில் கொடுக்கப்படும். ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் அதிக டோஸ் மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது இது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும்.

ஹைப்பர் தைராய்டு: தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது ரேடியோ ஆக்டிவ் அயோடின் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இது கூடுதலாக சுரக்கும் ஹார்மோனை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் நீண்ட நாட்களுக்கு கொடுத்தால் ஆண் மற்றும் பெண் இருவருமே தீவிரமான மலட்டுத் தன்மையை உருவாக்கும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

குளிர்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம் : ஏன் தெரியுமா..?

நான் மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்?

ஒவ்வொரு நாளும் தவறாமல் தைராய்டுக்கான மருந்தை எடுத்துக் கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். என்றாவது ஒருநாள் நீங்கள் மறந்து விட்டால் அது பெரிய சிக்கலை விளைவிக்காது. ஆனால், நீங்கள் அடுத்த நாள் தவறாமல் எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ளும்போது மருந்தின் விளைவு உடலில் நீண்ட நேரம் வேலை செய்யும். எனவே என்றாவது ஒருநாள் தவறுவது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

மருத்துவர் பரிந்துரைக்கும் வரை, நீங்கள் மருந்துகளின் டோஸ் அல்லது நீங்கள் எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியையும் மாற்றவே கூடாது. நீங்கள் அதை முறைப்படி பின்பற்றவில்லை என்றாலோ அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் மாறினாலோ மருந்து வேலை செய்யாது. அதுமட்டுமின்றி தைராய்டு பாதிப்பால் உண்டாக்கும் அறிகுறிகள் தீவிரமாகும். எனவே உங்கள் மருந்து சரியாக வேலை செய்வதை உறுதி செய்வதற்கும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மருத்துவர் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்.



வாழ்நாள் முழுதும் தைராய்டு மருந்து சாப்பிட வேண்டுமா?

தைராய்டு குறைபாடு ஒரு நோய் அல்ல இது ஒரு சுரப்பியின் குறைபாடாகும். எனவே ஒவ்வொரு நபரின் உடல் நலம் மற்றும் குறைபாட்டின் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளலாம், மருந்து எடுத்துக்கொள்ளும் இடைவெளி மற்றும் அளவு ஆகியவை மாறும். ஒரு சிலர் எடை அதிகரிப்பு மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல் ஆகியவற்றை எதிர்கொள்வார்கள். இந்த சிக்கல் சரியாகும் வரும்வரை மருத்துவர் மருந்துகளை பரிந்துரைக்கலாம். ஒரு சிலருக்கு நீண்ட காலத்திற்கு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். அறிகுறிகள் குறைவாக இருப்பவர்கள் குறிப்பிட்ட காலம் வரை மருந்து எடுத்துக் கொண்டாலே போதும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Thyroid

அடுத்த செய்தி