• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடல் எடையை குறைக்க உதவும் கிரீன் டீ : தினமும் எவ்வளவு குடிக்க வேண்டும் தெரியுமா?

உடல் எடையை குறைக்க உதவும் கிரீன் டீ : தினமும் எவ்வளவு குடிக்க வேண்டும் தெரியுமா?

கிரீன் டீ

கிரீன் டீ

சாதாரணமான தேநீரை விட, கிரீன் டீயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

  • Share this:
எப்படி எல்லாம் எடை குறைக்கலாம் என்று உலகின் கணிசமான மக்கள்தொகை முயற்சி செய்து கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளாக, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள பலரும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் தொடங்கியுள்ளனர். அவற்றில் முக்கியமானது கிரீன் டீ. பால் சேர்க்காமல் அப்படியே சூடான நீரில் கலந்து கிரீன் டீயை பருக வேண்டும். சாதாரணமான தேநீரை விட, கிரீன் டீயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

பெரும்பாலான எடை குறைக்கும் முயற்சிகளில், கிரீன் டீக்கு முக்கிய பங்கு உள்ளது. கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிய முழு விவரங்களை, ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு அறிக்கையாக மார்ச் 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் கிரீன் டீ உடல் பருமனைக் குறைத்து, உடலில் அழற்சி (inflammation) ஏற்படுத்தும் காரணிகளை குறைக்கிறது என அந்த ஆய்வில் தெரியவந்தது. பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு, சயின்ஸ் டெய்லியில் (Science Daily) வெளியிடப்பட்டது.

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிய ஆய்வு :

இந்த ஆய்வு இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட பெரிய எலிகள் மீது நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் காலம், எட்டு வாரங்களாகும். மொத்த விலங்குகளின் எண்ணிகையில் பாதி விலங்குகளுக்கு, உடல் பருமனை உண்டாக்கும் அதிக கொழுப்புள்ள உணவுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள விலங்குகளுக்கு, வழக்கமான உணவு வழங்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும், 50% விலங்குகளுக்கு அதன் உணவுகளில் கிரீன் டீ எக்ஸ்ட்ராக்ட் சேர்க்கப்பட்டன.

ஆய்வில் பங்கெடுத்த அனைத்து விலங்குகளின் கொழுப்பு திசுக்களின் எடை, அவைகளின் இன்சுலின் தாங்கும் திறன் மற்றும் பல்வேறு காரணிகளும் கணக்கிடப்பட்டன. எட்டு வாரங்கள் முடிந்த பிறகு, விலங்குகளின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து பின்வரும் முடிவுகள் வெளியிடப்பட்டன.



அதிக கொழுப்பு உணவுகள் வழங்கப்பட்ட விலங்கை விட, கிரீன் டீ சேர்க்கப்பட்டு அதிக கொழுப்பு உணவுகள் வழங்கப்பட்ட விலங்குகள், 20 சதவிகிதம் குறைவான அளவு எடை அதிகரித்திருந்தன.

அது மட்டுமின்றி, கிரீன் டீ சப்ளிமென்ட் உண்ட விலங்குகளில் கொழுப்பு திசுக்கள் மற்றும் குடல்பகுதியில் குறைவான அழற்சியே காணப்பட்டன. மேலும் எண்டோடாக்சின் எனப்படும் உடலுக்குள் நச்சுத்தன்மை வாய்ந்த பாக்டீரியாவின் பரவலை எதிர்த்து பாதுகாப்பு வழங்கியதோடு மட்டுமில்லாமல், அது ரத்தத்தில் கலக்காமலும் தடுத்தது. அதிக கொழுப்புள்ள உணவை சாப்பிட்டாலும், வயிற்றுப்பகுதியில் ஆரோக்கியமான நுண்கிருமிகள் உருவாக உதவி செய்தது.

தொப்பையை குறைக்க உதவும் சுரைக்காய் ஜூஸ்.. ட்ரை பண்ணி பாருங்க..

இதே போல, குடல் பாதிப்பு, குடலில் ஓட்டை என்று கூறப்படும் லீக்கி கட் (Leaky Gut) என்ற வளர்சிதை மாற்ற பாதிப்புக்கு உள்ளான மனிதர்கள் மீதும் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.



குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது என்றும், குடல் பகுதிகளில் உடலுக்குத் தேவையான மைக்ரோப்கள் உருவாகவும், குடலின் சுவர்களைவலுப்படுத்தவும் கிரீன் டீ உதவுகிறது என்று ஆய்வின் முடிவு தெரிவித்தது. குடலில் ஆரோக்கியமான பாக்டீரியா வளர கிரீன் டீ உதவுவதால், உடல் பருமனைக் குறைப்பதோடு பல விதங்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதை ஆய்வு தெரிவிக்கின்றது.

எடை குறைப்பதற்கு எவ்வளவு கிரீன் டீயை குடிக்க வேண்டும்?

கிரீன் டீயை நீங்கள் தண்ணீர் போல குடிக்க குடிக்கக் கூடாது என்று ஓஹியோ பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, நாள் முழுவதும், குறிப்பிட்ட நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உணவுடன் கிரீன் டீ குடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: