• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • நீங்கள் குளித்த பின்பும் வியர்வை துர்நாற்றம் வீசுகிறதா..? அதற்கு காரணம் இதுவாக இருக்கலாம்..!

நீங்கள் குளித்த பின்பும் வியர்வை துர்நாற்றம் வீசுகிறதா..? அதற்கு காரணம் இதுவாக இருக்கலாம்..!

1. சரியான வெப்பநிலை : சூடான நீருக்கும், வெதுவெதுப்பான நீருக்கும் இடையிலான வேறுபாடு அதிகம். உங்கள் சருமத்தில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளால் பராமரிக்கப்படும் இயற்கை நுண்ணுயிரியல் மற்றும் pHன் (Natural Microbiota and pH) அளவு உள்ளது. சூடான நீரில் குளிப்பது இந்த ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை அழித்து, சருமத்தை உலர வைக்கும், அரிப்பு மற்றும் தடிப்பை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் சருமத்தை கூட சிதைக்கும். எனவே, மந்தமான நீர் அல்லது சற்று வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்கவும். வேம்பு இலையை தண்ணீரில் சேர்த்து குளிக்கும் போது அம்மை, அலர்ஜி, போன்ற தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

ஆடைகளை வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகள், லூஸாக இருக்கும் ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகளை தவிருங்கள்.

 • Share this:
  மூன்றில் ஒருவர் குளித்த பின்பும் துர்நாற்றம் வீசும் பிரச்னையைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த துர்நாற்றத்தை மறைக்க வாசனை திரவியங்கள் பயன்படுத்தினால் போதுமா..? அதன் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வதே தீர்வாகும்.

  மரபு ரீதியான வளர்சிதை மாற்றக் கோளாறு காரணமாக டிரைமெத்திலாமினூரியா (Trimethylaminuria ) உருவாவதாக அமெரிக்க மருத்துவ இதழ் ஆய்வு வெளியிட்டுள்ளது. இது கோலின் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உண்டாகுமாம். அதாவது மீன், பால், முட்டை , ஆட்டு மூளை, இதயம், நுரையீரல் வேர்க்கடலை போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உண்டாகும் எனக் கூறுகிறது. இந்த துர்நாற்றம் வியர்வை மட்டுமலாது நீங்கள் கழிக்கும் சிறுநீரிலும் வரும் என்கிறது.

  சல்ஃபர் நிறைந்த பூண்டு, வெங்காயம் , புரோட்டின் நிறைந்த உணவு, புரக்கோலி , முட்டைகோஸ் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தாலும் வியர்வை துர்நாற்றம் அதிகம் இருக்கும்.

  மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற தருணங்களில் உடலின் அக்குள் போன்ற இடங்களில் 20 சதவீதம் கொழுப்புடன் சேர்ந்த வியர்வை வெளியேறுவதாலும் துர்நாற்றம் வீசும்.

  sleeveless ஆடைகளை அணியும்போது அக்குள் கருமை சங்கடத்தை ஏற்படுத்துகிறதா..? இதோ இருக்கு தீர்வு..!

  அதேபோல் விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கும் அதிகம் வியர்வை வடிவதும் அதனால் துர்நாற்றம் அதிகம் இருப்பது இயல்பு.

  அதிக மதுப்பழக்கமும் துர்நாற்றம் வீசக் காரணமாக உள்ளது. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் வியர்வை அதிகம் வெளியேறும். அளவுக்கு அதிகமாக வெளியேறினால் மருத்துவரை அணுகி பிரச்னையை கூறுவது நல்லது.  இதை சரி செய்ய என்ன வழி..?

  அதிக அளவிலான சுகாதாரப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். அதாவது இரண்டு முறை குளிப்பது, நார் தேய்த்து குளிப்பது, வாசனை நிறைந்த பாடி வாஷ் அல்லது சோப்பு பயன்படுத்துதால் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

  வியர்வைக் கிருமிகள் சருமத்தை பாதிக்காமல் பாதுகாக்க ஆண்டிபாக்டீரியல் சோப் பயன்படுத்துவது நல்லது.

  குளித்தவுடன் அரைகுறையாக துடைத்துவிட்டு ஆடைகளை அணியாமல் நன்கு ஈரப்பதம் காய்ந்து நீர் வற்றியபின் ஆடைகளை அணியுங்கள்.

  ஆடைகளை வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகள், லூஸாக இருக்கும் ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகளை தவிருங்கள்.

  வாசனை கமழும் பவுடர், வாசனை எண்ணெய் , வாசனை திரவியங்கள் பயன்படுத்தலாம்.

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  பார்க்க :

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: