உயர் இரத்த அழுத்தம் என்னும் நாள்பட்ட குறைபாடு இதயத்திற்கு அசௌகரியத்தை தருவது மட்டுமன்றி இதய நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. உங்கள் உடல் உழைப்பை பொருத்து இதயத் துடிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆனால் நீங்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் இயல்பை விட இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
மையோ க்ளீனிக்கின் கூற்றுப்படி இரத்த அழுத்ததை உறுதி செய்ய systolic pressure 120 முதல் 129 வரை இருக்க வேண்டும். diastolic pressure 80க்கும் குறைவாக இருக்க வேண்டும். சாதாரண இரத்த அழுத்தம் என்பது 120/80 mmHg இருக்க வேண்டும். அதேசமயம் உங்கள் இரத்த அழுத்தம் 180/120 mm Hg-க்கும் அதிகமாக இருந்தால் அது உயர் இரத்த அழுத்தமாக கருதப்படும்.
பொட்டாசியம் என்னும் மினரல் சத்துதான் உடல் செல்களுக்கு தேவையான நீரேற்றத்தை நிர்வகிக்க உதவுகிறது. Health Harvard கூற்றுப்படி, இதயத்துடிப்பை சீராக்க தசைகள் மற்றும் நரம்புகளின் வேலைகள் சீராக இருக்க வேண்டும். அதோடு புரதத்தை ஒருங்கிணைப்பதற்கும் கார்போஹைட்ரேட்டுகளை வளர்சிதைமாக்குவதற்கும் இன்றியமையாதது. மேலும் மினரல் சத்துக்கள் உடலில் உள்ள கூடுதலான சோடியத்தை பிரித்து வெளியே அனுப்புவதால் அது உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது.
ஆரோக்கியமான உடலில் இரத்த நாளங்களின் சுவர்களை இலகுவாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதோடு தசைப்பிடிப்புகளையும் தவிர்க்க உதவுகிறது. எனவே இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டுமெனில் பொட்டாசியம் அவசியம். அது குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று பார்க்கலாம்.
பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறிகள் :
மலச்சிக்கல், சோர்வு, தசை வலி, தசைகள் பலவீனம், இதயத்துடிப்பு வேகமாகுதல் அல்லது நின்று போனது போல் படபடப்பான உணர்வு போன்றவை முக்கிய அறிகுறிகளாக இருக்கும்.
Also Read : PCOS உள்ள பெண்கள் கருத்தரிப்பதற்கான வழிகள் என்ன..? உங்களுக்கான கைட்லைன்..!
உங்கள் உடலில் பொட்டாசியம் குறைவாக இருப்பதை கண்டறிய டிப்ஸ் :
உங்களுக்கு மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் அடிக்கடி வருகிறது எனில் மருத்துவரை அனுகி உறுதி செய்துகொள்வது நல்லது. மருத்துவரின் அறிவுரைப்படி இரத்த பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பெரியவர்களுக்கு சாதாரணமாக பொட்டாசியம் அளவு 3.5 முதல் 5.2 mEq/L இருக்க வேண்டும். ஒருவேளை பொட்டாசியம் அளவு 3 மற்றும் 3.5 mEq/L என இருந்தால் பொட்டாசியம் குறைபாடு இருப்பதாக அர்த்தம். இதற்கு hypokalemia என்று பெயர்.
பொட்டாசியம் ஏன் தினம் தினம் அவசியம் : மையோ கிளீனிக் படி பொட்டாசியம் குறைபாடு ஏற்படுவது மிகவும் அரிதான விஷயம்தான். எனவேதான் இந்த மினரல் சத்துக்கென தனியாக உணவு பரிந்துரைகளும் கொடுப்பதில்லை. ஒரு நாளைக்கு 1600 to 2000 mg (40 to 50 milliequivalents [mEq]) பொட்டாசியம் போதுமானதாக கருதப்படுகிறது.
பொட்டாசியம் நிறைந்த உணவுகள் : பெரும்பாலும் நாம் உண்ணும் உணவு வகைகளில் பொட்டாசியம் நிறைவாகவே இருக்கும். அந்த வகையில் கீரை, பீன்ஸ் , நட்ஸ், நீன் வகைகள், காய்கறி கொதிக்க வைத்த தண்ணீர் ஆகியவற்றில் பொட்டாசியம் நிறைவாக இருக்கும்.
பழ வகைகளில் வாழைப்பழம், ஆரஞ்சு திராட்சை, ஆப்ரிகோட் போன்ற பழங்களை சாப்பிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: High Blood Pressure, Minerals