குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டா..? அதன் விளைவு என்ன தெரியுமா..?

குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டா..? அதன் விளைவு என்ன தெரியுமா..?
வெளியே சென்று வந்தால் கைகளைக் கழுவுங்கள். முடிந்தால் குளித்துவிட்டு குழந்தைகளோடு விளையாடுங்கள்.
  • Share this:
குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?

உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.

அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.
அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.

சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.

இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.


பார்க்க :
First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading