பெண்கள் தங்களை உயரமாகவும், கவர்ச்சிகரமான ஆளுமை தோற்றத்துடன் காண்பிக்க ஹீல்ஸ் அணிகின்றனர். எனவே தான் ஒவ்வொரு பெண்களும் விரும்பும் வகையிலான தனித்துவமான அளவுகள், வடிவமைப்புகள் மற்றும் நிறங்களில் ஹீல்ஸ்கள் கிடைக்கின்றன.
ஹீல்ஸ் அணிவது தனித்துவமான ஸ்டைலாக இருந்தாலும், இதனால் கால்கள் மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகள் கடும் பாதிப்புக்கு ஆளாவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது ஹை ஹீல்ஸ் எந்த அளவுக்கு அழகாக உள்ளதோ, அதே அளவுக்கு ஆபத்தானது ஆகும்.
ஹீல்ஸை தவிர்க்க முடியாத பெண்கள், குறைந்தபட்சம் கால்களுக்கு போதுமான சப்போர்ட் கொடுக்கும் படியும், அதிக அழுத்தம் கொடுக்காதவாறும் இருக்கும் படி தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் முதுகு மற்றும் கால்களில் பிரச்சனைகள் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் ஹீல்ஸ் அணிவது நல்லதல்ல என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தல் ஆகும்.
தற்போது நீண்ட நேரம் ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறித்து விரிவாக பார்க்கலாம்..
1. கீழ் முதுகில் தீராத வலி:தட்டையான செருப்புகளை அணியும் போது நமது முதுகு தண்டால் உடல் எடையை ஈசியாக சமநிலைப்படுத்த முடியும். ஆனால் ஹீல்ஸ் எனப்படும் குதிக்கால் செருப்புகளை அணியும் போது குதிக்கால் பகுதி சற்றே உயரமாக இருப்பதால் இது முதுகு எலும்பின் சமநிலையை பாதிக்கிறது. இதனால் முதுகு, கீழ் முதுகுப்பகுதியில் அதிக வலி ஏற்படுகிறது.
2. கால் வலி:குதிக்கால் பகுதியை உயர்த்திக் காட்ட பயன்படும் ஹீல்ஸ் ஆனது, பாதத்தில் தீவிரமான வலியை ஏற்படுத்துகிறது. ஹீல்ஸ் அணியும்போது உடலின் முழு எடையையும் கணுக்கால் தாங்க வேண்டியிருக்கும். இதனால் கணுக்காலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு கடும் வலியை ஏற்படுத்துகிறது. எனவே தினமும் ஹீல்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும்.
3. நரம்புகளில் சேதம்:ஹை ஹீல்ஸ் அணிவது கணுக்காலில் உள்ள நரம்புகள் சேதமடைய வழிவகுக்கிறது. குதிக்கால் மற்றும் கணுக்காலை இணைக்கக்கூடிய அக்கிலீஸ் டென்டன் என்ற நெகிழ்வுத் தன்மை கொண்ட தசையானது, ஹீல்ஸ் அணிவதால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் சாதாரணமாக காலை கீழே உன்றினாலே கடும் வலி ஏற்படக்கூடும். இது கணுக்காலில் மட்டுமல்ல கால் முழுவதும் உள்ள நரம்புகளையும் பாதித்து தீவிர பிரச்சனைக்கு வழிவகுக்கக்கூடும்.
4. கணுக்கால் வலி:அடிக்கடி ஹை ஹீல்ஸ் அணிவது கணுக்கால்களை கடுமையாக பாதிக்கும். ஏனெனில் தட்டையான காலணிகளை விட ஹை ஹீல்ஸ்கள் சற்றே முன்னோக்கி வளைத்து இருக்கும். இதனால் உடல் எடையைத் தாங்கிக் கொண்டிருக்கும் கணுக்காலில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் எலும்பு முறிவு, கணுக்காலில் தீராத வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
குதிக்கால் மற்றும் விரல்களுக்கு இடையே ஏற்படும் அழுத்தமானது சுளுக்கு போன்ற பிரச்சனைகளை உருவாக்கூடும் என்றும், விரல்களை இறுக்கிப்பிடித்த படி குதிக்காலுக்கு அழுத்தம் கொடுக்காமல் நடப்பதால் முதுகு தண்டு பாதிக்கப்பட்டு கூன் விழக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அழகு எப்போதுமே ஆபத்தானது என்பதை உணர்ந்து அதிக நேரம் ஹைஹீல்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.