உடல் எடை குறைப்புக்கு எண்ணற்ற டயட் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவர்கள் கடைப்பிடிப்பதும், உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதும் கீடோ டயட் ஆகும். மாவுச்சத்து நிறைந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது அல்லது மிக குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொள்வது இந்த உணவு முறையின் அடிப்படை ஆகும். அதாவது, உடலுக்கு தேவையான ஆற்றலை மாவுச்சத்தில் இருந்து பெறாமல், கொழுப்புச் சத்து மூலமாக பெற்றுக் கொள்வது.
இதனால், உடலில் கிடோசிஸ் அளவுகள் சற்று அதிகரிக்கும். இதன் எதிரொலியாக உடல் எடை குறையத் தொடங்கும். கீடோ டயட் முறையிலேயே வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளுடன் உணவுப் பழக்க, வழக்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நபரின் தேவைகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் கீடோ டயட் அமைகிறது.
உடல் எடையை குறைக்க கீடோ டயட் முறை உண்மையிலேயே உதவிகரமாக இருக்கிறது என்றாலும், அதில் சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிக முக்கியமான பாதிப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.
எண்ண ஓட்டங்கள் மாறும்
உடல் எடை சீராக இல்லாமல் ஏற்ற, இறக்கமாக இருப்பது கீடோ டயட் முறையின் பொதுவான பின்விளைவு ஆகும். இதுபோல உடல் எடை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பது நமது மன நலனை பாதிக்கும். குறிப்பாக, மாவுச்சத்து உணவை முற்றிலுமாக தவிர்ப்பதன் மூலமாக ஹார்மோனால் மாற்றங்கள் நிகழும். இதன் காரணமாக எண்ண ஓட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படும்.
மூச்சுக்காற்றில் துர்நாற்றம்
கீடோ டயட் முறையை பின்பற்றும்போது, உடலில் கீடோன் என்ற உப பொருள் உற்பத்தி ஆகும். இந்த கீடோன் என்பது நமது மூச்சுக்காற்றில் கலந்து வெளியேறும்போது துர்நாற்றம் கொண்டதாக இருக்கும். குறிப்பாக, வாய் துர்நாற்றம் அதிகரித்து விடும். இதனால், மவுத் பிரெஷ்னர் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
40 வயதை கடந்த பெண்களுக்கான உணவுப் பட்டியல் : ஆரோக்கியத்திற்கு இதை கடைபிடியுங்கள்
மயக்க உணர்வு
நீங்கள் எந்தவொரு டயட் திட்டத்தை பின்பற்றினாலும், நாள் முழுவதும் உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறதா என்பது முக்கியமான விஷயம் ஆகும். எனினும், கீடோசிஸ் என்பது நம் உடலில் உள்ள ஆற்றலை உறிஞ்சிவிடும். இந்த ஆற்றல் இழப்பு காரணமாக உங்களுக்கு அவ்வபோது மயக்க உணர்வு ஏற்படலாம்.
செரிமாணக் கோளாறுகள்
வயிறு நலன் சார்ந்த நல்ல விஷயங்கள் கீடோ டயட் முறையில் கிடையாது. ஆகவே, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். ஆகவே, கீடோ டயட் முறையை பின்பற்றும்போது உடல் செரிமானத்திற்கு தேவையான உணவுகளை அவ்வபோது எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் செயல்திறன் குறையும்
உங்கள் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கின்ற காரணத்தால் போதுமான அளவுக்கு செயல்திறன் இருக்காது. கீடோ டயட் உங்களை சோர்வாக வைத்திருக்கும். இதனால், உங்கள் வேலைத்திறன் குறைந்து எப்போதும் சோம்பல் உணர்வு மேலோங்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.