வீட்டிலேயே ஆக்ஸிஜன் சிலிண்டரை எவ்வாறு செட் செய்வது? புதிய App அறிமுகம்!

ஆக்சிஜன்

கோவிட் -19 நோயாளிகளுக்கு வீட்டிலேயே ஆக்ஸிஜனை நிறுவவும் நிர்வகிக்கவும் அவர்களது உறவினர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

  • Share this:
IOS மற்றும் Android இயங்குதளங்களில் கிடைக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர் செட்அப் கைடு App ஒன்றை புனேவை தளமாகக் கொண்ட டிசைன் டெக் என்ற பொறியியல் சேவைகள் மற்றும் தீர்வுகள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பெரிதாக்கப்பட்ட ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் ‘ஆக்ஸிஜன் சிலிண்டர் செட்அப் கைடு’ App, கோவிட் -19 நோயாளிகளுக்கு வீட்டிலேயே ஆக்ஸிஜனை நிறுவவும் நிர்வகிக்கவும் அவர்களது உறவினர்களுக்கு பெரிதும் உதவுகிறது. கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வரும் நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டர் என்பது பெரும் உயிர் காக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் நாடு முழுவதும் இன்னும் பல இடங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் ஏராளமான நோயாளிகள் தங்களது வீடுகளுக்குள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைத்தாலும் கூட அந்த முழு அமைப்பை வீடுகளுக்குள் எவ்வாறு செட் செய்வது, நோயாளிக்கேற்ப மருத்துவர் கூறும் சரியான அளவு ஆக்ஸிஜனை எவ்வாறு கொடுப்பது போன்ற பல சிக்கல்கள் ஏற்பட்டு உறவினர்களை தவிப்பில் ஆழ்த்துகின்றன.

தனது கோவிட் பாசிட்டிவ் மனைவியின் SpO2 நிலை 85-ஆக குறைந்த போது, வீட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டரை அமைப்பதற்கான தனது 2 மணி நேர போராட்டத்தை அதுல் மர்வாஹா என்பவர் விவரிக்கிறார். அதிகாலை 4 மணிக்கு ஒரு நண்பரிடமிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைத்தது. ஆனால் சிலிண்டரை பெற போராடியதை விட உண்மையான போராட்டம் ஆக்ஸிஜன் சிலிண்டரை வீட்டில் சரியான வழியில் நிறுவுவதில் தான் இருந்தது என்றார்.

தனிப்பட்ட முறையில் இந்த கஷ்டத்தை அனுபவித்த மார்வாஹா தான் புனேவைச் சேர்ந்த டிசைன் டெக் சிஸ்டம்ஸின் (DesignTech Systems Pvt Ltd) நிர்வாக துணைத் தலைவராவார். ஆக்ஸிஜன் சிலிண்டரை வீட்டில் அமைக்கும் செயல்முறையை எளிதாக்கும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented Reality) அடிப்படையிலான மொபைல் App கண்டறியும் யோசனையை இவரது சொந்த அனுபவம் தூண்டியுள்ளது. வசிக்கும் வீட்டில் ஆக்சிஜன் சிலண்டரை செட்டப் செய்வது ஒரு சவாலான பணி. இதற்கு உதவும் வேலையை Augmented Reality செய்கிறது என்கிறார் அதுல் மர்வாஹா.உங்கள் சொந்த பார்வையில் இருந்து முழு செயல்பாட்டையும் காட்சிப்படுத்த ஆக்மென்ட் ரியாலிட்டி உங்களை அனுமதிக்கிறது. இது உங்கள் முன் இயல்பாக இருப்பதை போன்ற தோற்றத்தை காட்சிப்படுத்துகிறது. சிக்கல்களைத் தீர்க்க AR-க்கு ஆற்றல் உள்ளது என்பதை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர் என்கிறார். ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் குறித்து சுருக்கமாக சொன்னால் கற்பனையை உண்மையில் புகுத்துதல் எனலாம். இந்த நவீன தொழிநுட்பம் உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இது நிஜம் மற்றும் கற்பனை கலந்த ஒரு கலப்பு காட்சியை வழங்குகிறது.

புதிய செயற்கை சூழலை உருவாக்க தகவல்களை சேர்க்கிறது. இந்த App ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், AR-ன் அதிவேக அம்சம் நுகர்வோர் அனுபவத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்ப்பதாக கூறுகிறார் மார்வாஹா. அடுத்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து இடங்களிலும் இந்த தொழில்நுட்பத்தை பெருமளவில் ஏற்று கொள்வதை பார்க்க முடியும் என்கிறார். இந்த இலவச App-ஐ பயன்படுத்துவது மிகவும் எளிதானது. AR இன் உதவியுடன் சுற்றியுள்ள இடத்தில் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் 3D மாதிரியை நீங்கள் எளிதாக கற்பனை செய்யலாம். அவசர காலங்களில் வீட்டில் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரை அமைப்பது, ஃப்ளோமீட்டரை இணைப்பது மற்றும் இதனையொட்டிய மக்கள் எளிதாக அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

https://youtu.be/XyqhdyT3qD0

இந்த App ஏற்கனவே சாதனங்களின் பொருந்தக்கூடிய தன்மை (compatibility of devices) விரிவாக்கப்பட்ட முதல் புதுப்பிப்பைக் கடந்துவிட்டது. மிக விரைவில வர கூடிய இரண்டாவது அப்டேட் ஆக்ஸிஜன் சிலிண்டரை கையாளும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட இன்னும் சில முறைகளை கொண்டு வரும். ஆனால் ஆக்சிஜன் சிலிண்டர்களை நிறுவ மிகவும் சிக்கலான பல்வேறு வகையான ஃப்ளோமீட்டர்களை எவ்வாறு சேர்ப்பது என்பதற்கான வழிமுறைகளை சேர்ப்பதில் கவனம் செலுத்தப்படும். புதிய அப்டேட் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் தடுப்பூசி எடுத்தபிறகு கொரோனா வந்தால் 2வது தடுப்பூசி எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

இந்த App உள்நாட்டிலேயே 8-10 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய மார்வாஹா,பொதுவாக மெடிக்கல் App-கள் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதால் ஆப்பிள் மற்றும் கூகுள் ஒப்புதல் பெறுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றார். நாங்கள் இந்த App-ஐ கல்வியின் கீழ் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் மருத்துவத்தின் கீழ் இதை வகைப்படுத்துவதே சரியான செயலாக இருக்க முடியும் என கருதி சிரமத்தை எதிர்கொண்டதாக குறிப்பிட்டார். 5 லிட்டர் கொள்ளளவுக்கு மேல் இருக்கும் ஒவ்வொரு ஆக்ஸிஜன் சிலிண்டருடனும் தங்களது App செயல்படும் என்றும், ஆக்ஸிஜன் சிலண்டரை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் விரிவான காட்சி படிப்படியான வழிமுறைகளை வழங்கும் என்று மார்வாஹா கூறி உள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: