ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீங்கள் இந்த பொசிஷனில் படுத்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சனையை தவிர்க்கலாமா..?

நீங்கள் இந்த பொசிஷனில் படுத்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சனையை தவிர்க்கலாமா..?

நெஞ்சு எரிச்சல்

நெஞ்சு எரிச்சல்

நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்காக நமது வயிற்றில் ஆசிட் சுரக்கிறது. இந்த அமிலமானது வயிற்றிலிருந்து மேல்நோக்கி புறப்பட்டு உணவுக் குழாயை அடைவதை தான் நெஞ்செரிச்சல் என்று குறிப்பிடுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்காக நமது வயிற்றில் ஆசிட் சுரக்கிறது. இந்த அமிலமானது வயிற்றிலிருந்து மேல்நோக்கி புறப்பட்டு உணவுக் குழாயை அடைவதை தான் நெஞ்செரிச்சல் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு உணவை சுவைப்பதில் சிரமம், இருமல், வீசிங், நெஞ்சுவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.பொதுவாக நாம் மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது என்றாவது ஒரு நாள் நெஞ்செரிச்சல் ஏற்படுவது எல்லோருக்கும் இயல்பான விஷயம்தான். ஆனால் அதுவே தினசரி சாதாரண சமயங்களிலும் ஏற்படுகிறது என்றால் நீங்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நெஞ்செரிச்சல் எப்படி இருக்கும்..?

உங்கள் நெஞ்சு பகுதியில் மிகுந்த எரிச்சல் ஏற்படும். குறிப்பாக சாப்பிட்ட பிறகு இந்த வலி உண்டாகலாம். மாலை நேரத்தில் அல்லது சாய்ந்து படுத்திருக்கும் சமயத்தில் இதுபோன்ற எரிச்சல் மிகுதியாக ஏற்படும். நெஞ்செரிச்சல் காரணமாக தொண்டையிலும் எரிச்சல் உணர்வு சிலருக்கு ஏற்படும் சூழலில் உணவை சவைப்பதில் சிரமம் ஏற்படும்.

அடிப்படை காரணம் என்ன..?

நம் வயிறும் உணவு குழாயும் இணையும் பகுதியில் ஈஸோஃபோகஸ் ஸ்பின்ஸ்டர் என்னும் வால்வு இடம்பெற்றிருக்கும். இந்த வால்வானது, நாம் சாப்பிடும்போது உணவு உள்ளே செல்ல அனுமதிக்கும். பின்னர் தாமாகவே மூடிக் கொள்ளும். புரியும்படி சொன்னால், இது ஒரு சுருக்குப்பை போல செயல்படும். இந்த வால்வில் தளர்வு ஏற்படுவதன் காரணமாக அமிலமானது வயிற்றிலிருந்து மேல்நோக்கி வரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. பொதுவாக சிலவகை உணவுகள் நெஞ்செரிச்சலை தூண்டுகின்றன. அதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு நெஞ்செரிச்சல் இயல்பாகவே ஏற்படக்கூடும்.

Also Read : PCOS உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

எப்படி தூங்கினால் நிவாரணம் கிடைக்கும்..?

நாம் சாய்ந்து படுத்திருக்கும் சமயங்களில் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது என்று குறிப்பிடும் அதே வேளையில், நாம் தூங்கும் பொசிஷன்களை மாற்றும்போது அதிலிருந்து நாம் நிவாரணம் பெறலாம். குறிப்பாக, இடது பக்கமாக சாய்ந்து தூங்கினால் இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். அதேபோன்று இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வரிசையாக வைத்து நம் தலைப்பகுதி உயரமான இடத்தில் அமைகிறார் போல் தூங்கினால் இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நெஞ்செரிச்சலை விரட்டுவதற்கான உணவுகள்..

எப்படி மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள் நெஞ்செரிச்சலை தூண்டுகின்றனவோ, அதேபோல இந்த பிரச்சனைக்குமான தீர்வும் உணவுகளிலேயே இருக்கிறது. குறிப்பாக சிவப்பு அரிசி, வேர் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பீட்ரூட் மற்றும் பாலக்கீரை போன்றவற்றை எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சலை தவிர்க்கலாம். வெங்காயம், தக்காளி, சிட்ரஸ் பழங்கள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.

Also Read : பேலியோ டயட்டால் இறந்த நடிகரின் மனைவி... பக்கவிளைவுகளும்... காரணங்களும்..!

வாழ்வியல் மாற்றங்கள்

சீரான சத்தான உணவை சாப்பிடுவது நல்ல பலனை தரும். எப்போதுமே வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது. சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லக் கூடாது. குறைந்தபட்சம் 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். உணவை நன்றாக சவைத்து, சுவைத்து சாப்பிட வேண்டும். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சிகள் செய்வது அவசியம். இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Heartburn