முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு இருக்கிறதா? நீங்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு இருக்கிறதா? நீங்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

தைராய்டு ஹார்மோன்கள் சமநிலையற்ற நிலையில் இருந்தால் இந்த கோளாறு நம்முடைய உடலில் பல்வேறு அன்றாட செயல்பாடுகளைப் பாதிக்கும். இதற்கு சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை.

தைராய்டு ஹார்மோன்கள் சமநிலையற்ற நிலையில் இருந்தால் இந்த கோளாறு நம்முடைய உடலில் பல்வேறு அன்றாட செயல்பாடுகளைப் பாதிக்கும். இதற்கு சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை.

தைராய்டு ஹார்மோன்கள் சமநிலையற்ற நிலையில் இருந்தால் இந்த கோளாறு நம்முடைய உடலில் பல்வேறு அன்றாட செயல்பாடுகளைப் பாதிக்கும். இதற்கு சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி செயல்பாட்டுக் குறைவினால் ஏற்படுவதாகும். T3, T4 அல்லது TSH என்ற தைராய்டு ஹார்மோன்கள் சமநிலையற்ற நிலையில் இருந்தால் இந்த கோளாறு நம்முடைய உடலில் பல்வேறு அன்றாட செயல்பாடுகளைப் பாதிக்கும். இதற்கு சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை. நீங்கள் இந்த தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால், என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும், என்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

உணவும், ஹைப்போ தைராய்டிசமும் :

ஹைப்போ தைராய்டிசத்தை நிர்வகிக்க, சிகிச்சையின் முக்கியப் பங்கு வகிப்பது மருந்துகள் அல்ல. அது உங்கள் வீட்டு சமையலறையில் தொடங்குகிறது. தைராய்டு கோளாறுகளுக்கு மேஜிக் போன்ற தீர்வுகள் கிடையாது. இருப்பினும், சரியான உணவுகளை உட்கொள்வது தைராய்டு கோளாறால் ஏற்படும் உடல் குறைபாடுகளை சீர் செய்ய உதவும், நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும். எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

ஹைப்போ தைராய்டு இருந்தால் உங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் என்ன?

பொதுவாக ஊட்டச்சத்துகள் என்று வரும் போது, கால்ஷியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஆகிய சத்துகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் மினரல்கள் எனப்படும் தாதுக்களின் முக்கியத்துவம் உணரப்படுவதில்லை. தைராய்டு சுரப்பி சீராக செயல்படுவதற்கு, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி ஆக, தாதுக்கள் மிகவும் முக்கியம்.

அவற்றில், அயோடின் என்பது மிகவும் இன்றிமையாத கணிமமாகக் கருதப்படுகிறது. அயோடின் குறைபாடு தைராய்டு பாதிப்பை ஏற்படுவத்துவதில் முக்கியக் காரணியாக இருக்கிறது.

அயோடின் தவிர்த்து, செலினியம், வைட்டமின் டி, ஸின்க், மற்றும் டைரோசின் ஆகிய தாதுக்கள் தைராய்டு செயல்பாட்டில் முக்கியப்பங்கை வகிக்கின்றன.

தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அல்லது சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் அதனால் ஏற்படும் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும்.

தைராய்டு பிரச்சனையை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்...

நீங்கள் என்ன உணவுகளை உட்கொள்ளலாம் :

தைராய்டு குறைபாட்டுக்கு முழுமையான தீர்வு இல்லை. வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஆரோக்கியமான தைராய்டு செயல்பாட்டைத் தக்கவைக்க ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன.

உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், நீங்கள் தாதுக்கள் நிறைந்த பச்சை இலை காய்கறிகள், கடல் உணவுகள், கொட்டைகள் மற்றும் விதைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றைச் உண்பது உதவியாக இருக்கும்.

இந்த வகையான தைராய்டு ஹார்மோன்களான T3 மற்றும் T4 உற்பத்தியை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சுத்திகரிக்கப்படாத உப்பு (அயோடின் நிறைந்தது) உணவில் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் தைராய்டு சுரப்பியை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி, ஆப்பிள், கீரை போன்ற உணவுகளும் எடை அதிகரிக்காமல் தடுக்கின்றன.

தினமும் 10 கிராம் வெந்தயம் சாப்பிட்டால் நல்லதா..? எப்போது.. எப்படி சாப்பிட வேண்டும்..?

என்ன வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும்?

பொதுவாக ஹார்மோன் குறைபாடு இருந்தாலே, ஜன்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. எனவே, தைராய்டு குறைபாட்டுக்கும் அது பொருந்தும்.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மற்றும் தாவர அடிப்படையிலான ஈஸ்ட்ரோஜன் மூலங்கள் உடலில் என்சைம் மற்றும் அயோடின் உற்பத்தியைத் தடுக்கின்றன. சோயா, டோஃபு, சோயா பால், சாஸ்கள், சோடா பானங்கள், உள்ளிட்ட உணவுகள் கண்டிப்பாக குறைக்கப்பட வேண்டும் அல்லது தவிர்க்கப்பட வேண்டும்.

அதே போல, முட்டை கோஸ், பிரஸ்ஸில் ஸ்ப்ரௌட்ஸ், காலிஃபிளவர், பீச், பிளம்ஸ், உள்ளிட்ட காய்கறிகளை, பழங்களைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை, பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு ஏற்ற சரியான உணவு எதுவென்று கண்டறிய முடியவில்லை என்றால், மருத்துவரை ஆலோசித்து தைராய்டு கோளாறுக்கு ஏற்ற உணவுப்பட்டியலின் பரிந்துரையை பெறவும்.

First published:

Tags: Diet Plan, Healthy Lifestyle, Thyroid