உறுப்பு மாற்று நோயாளிகளுக்கு பாதுகாப்பு தரும் மாடர்னா தடுப்பூசி - ஆய்வில் தகவல்

மாடர்னா தடுப்பூசி

பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை தடுப்பூசிகள் மூலம் புதுப்பிப்பது கடினமானது என்ற நிலையில், தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் அந்த வே

  • Share this:
கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே பல நாள்பட்ட நோய்களை கொண்டவர்கள், புற்றுநோய் அல்லது பிற தீவிர நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் ஒரு பகுதியாக நோய்யெதிர்ப்பு ஆற்றலை அடக்கும் மருந்துகளை எடுத்து கொள்பவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் என பல்வேறு நோயாளிகள் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட லட்சக்கணக்கான நோயாளிகள் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் உண்மையில் கொரோனா வைரஸிடமிருந்து எவ்வளவு பாதுகாப்பு பெறுகிறார்கள் என்பது குறித்து சந்தேகங்கள் எழுகின்றன.

இந்நிலையில் மாடர்னா கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கணிசமான பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் பெரும்பாலும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பை கொண்டுள்ளதால் எப்போதும் வழக்கமாக கொடுக்கப்படும் தடுப்பூசியின் 2 ஷாட்கள் போதுமானதாக இல்லை என்று இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட கனேடிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் (New England Journal of Medicine) இதழிலில் இந்த சிறிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை தடுப்பூசிகள் மூலம் புதுப்பிப்பது கடினமானது என்ற நிலையில், தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் அந்த வேலையில் கணிசமான பங்கு வகிப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள மாடர்னா மற்றும் இன்னும் சில தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களுக்கு வலுவான பாதுகாப்பை வழங்கி வந்தாலும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை, புற்றுநோய் அல்லது பிற தீவிர உடல்நல பாதிப்புகள் உள்ள மில்லியன் கணக்கான நோயாளிகளுக்கு தடுப்பூசியின் முழுநன்மையையும் கிடைப்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

இதற்கு காரணம் நாம் முன்பே கூறியபடி குறைபாடுகளால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இல்லாதவர்களுக்கு தடுப்பூசியை கொண்டு அதை மீண்டும் வலுவாக மாற்றுவது சற்றே கடினம். இப்படிப்பட்ட சூழலில் இவர்களில் சிலருக்கு வழக்கமானான 2 டோஸை தவிர்த்து, கூடுதல் டோஸ் உதவுகிறது என்பதற்கு வரையறுக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஏற்கனவே கூடுதல் டோஸை இந்த வகையினருக்கு பரிந்துரைத்த நிலையில் அமெரிக்கா தற்போது பரிசீலித்து வருகிறது. டொரான்டோஸ் பல்கலைக்கழக ஹெல்த் நெட்வொர்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் 120 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

Also Read :கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு ஹார்மோன் பிரச்சனை ஏற்படுகிறதா ?

120 பேரும் முழுமையாக 2 டோஸ் மாடர்னா தடுப்பூசி போட்டு கொண்டிருந்த நிலையில், அவர்களில் பாதி பேருக்கு கூடுதல் டோஸ் (மூன்றாவது டோஸ்) தடுப்பூசி செலுத்தப்பட்டது. சிறிது நாள் கழித்து அவர்களை பரிசோதித்த போது இரண்டு டோஸ் மற்றும் சிகிச்சை விளைவைக் கொண்டிருக்காத போலி மருந்தை மூன்றாவதாக பெற்ற 18% நோயாளிகளை விட, மூன்றாவது டோஸ் மாடர்னா தடுப்பூசி போட்டு கொண்ட உறுப்பு மாற்று நோயாளிகளில் சுமார் 55% பேர் தங்கள் ரத்தத்தில் அதிக அளவு வைரஸ்-எதிர்ப்பு ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்தனர்.

மேலும் மூன்றாவது டோஸ் பெற்றவர்களுக்கு அதிக டி செல்கள் காணப்பட்டன. இவை கடுமையான நோயைத் தடுக்க உதவுகின்றன. இந்த கண்டுபிடிப்பு மூலம் உறுப்பு மாற்று சிகிச்சை நோயாளிகள் மாடர்னா தடுப்பூசியின் கூடுதல் டோஸிலிருந்து பயனடையலாம் என்பதற்கான ஆதாரங்களுக்கு வலு சேர்த்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். டோரி சேகவ் கூறி இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: