ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டெர்மினல் கேன்சர் என்றால் என்ன..? அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

டெர்மினல் கேன்சர் என்றால் என்ன..? அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

டெர்மினல் கேன்சர்

டெர்மினல் கேன்சர்

புற்றுநோய் நம் உடலில் பரவத் தொடங்கிய நிலையில், அதை அட்வான்ஸ்டு கேன்சர் என்கின்றனர். இதுவும் கூட உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதுதான் என்றாலும், இதற்கு சிச்சை உண்டு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புற்றுநோய் இறுதிக்கட்டத்தை எட்டுவதைத் தான் ஆங்கிலத்தில் டெர்மினல் கேன்சர் என்று குறிப்பிடுகின்றனர். புற்றுநோய் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது? ஆனால், டெர்மினல் கேன்சர் என்றொரு நிலையை நீங்கள் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆகவே, இந்த இறுதிநிலை புற்றுநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? இதற்கு சிகிச்சை உண்டா என்ற பல தகவல்களை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

புற்றுநோய் நம் உடலில் பரவத் தொடங்கிய நிலையில், அதை அட்வான்ஸ்டு கேன்சர் என்கின்றனர். இதுவும் கூட உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதுதான் என்றாலும், இதற்கு சிச்சை உண்டு. சிகிச்சை மூலமாக உயிரிழப்பை தள்ளிப்போட முடியும். ஆனால், டெர்மினல் கேன்சர் இப்படியல்ல. எந்தவொரு சிகிச்சையும் இங்கு செல்லுபடியாகாது.

சுருக்கமாக சொன்னால், நோயாளி மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆனால், நோயாளிக்கு ஏற்படும் உடல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் அசௌகரியங்களை குறைப்பதற்கு மட்டும் மருந்து கொடுக்கலாம்.

டெர்மினல் கேன்சரின் அறிகுறிகள்

இறுதிநிலை புற்றுநோயின் அறிகுறிகளை நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நோயாளியின் வயதுக்கு ஏற்ப இது மாறுபடும். வலி, தூக்கமின்மை, கவலை, மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும். பெண் நோயாளிகளாக இருந்தால் வாந்தி, வீக்கம் போன்ற பிரச்சனைகள் கூடுதலாக இருக்கும்.

Also Read : கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் தாமதம் ஆகிறது : ஆய்வில் உறுதி..!

அட்வான்ஸ்டு கேன்சர் தான் டெர்மினலாக மாறுகிறதா?

நிச்சயமாக, அட்வான்ஸ்டு கேன்சர் என்பது டெர்மினல் கேன்சராக மாறக் கூடும். ஆனால், எல்லா சமயத்திலும் இது நிகழும் என்று கூற முடியாது. அட்வான்ஸ்டு கேன்சருக்கு ஹீமோதெரஃபி சிகிச்சை கொடுத்தால் கொஞ்சம் பலன் கிடைக்கும். ஆனால், டெர்மினல் கேன்சர் எந்தவொரு சிகிச்சைக்கும் கட்டுப்படாது. நிச்சயமாக உயிரிழப்பு ஏற்படும்.

இருப்பினும், நோயாளிகளுக்கு ஏற்படும் இதரப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அட்வான்ஸ்டு கேன்சர் மற்றும் டெர்மினல் கேன்சர் ஆகிய இரண்டும் ஒரே தன்மை உடையதாக தோன்றினாலும், மருத்துவ நிபுணர்கள் இதனை வெவ்வேறாக வேறுபடுத்துகின்றனர்.

ஆயுள் உத்தரவாதம் இல்லை

டெர்மினல் கேன்சர் பாதிப்பு உறுதியானால் நோயாளியின் ஆயுள் குறைந்து கொண்டிருக்கிறது என்று பொருள். முடிந்தபட்சம் ஹீமோதெரஃபி மற்றும் ரேடியேசன் போன்ற சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்ள முயற்சி செய்வார்கள். இயலாத பட்சத்தில் இதர சிகிச்சைகள் மட்டும் தொடரும்.

என்னதான் தீர்வு

டெர்மினல் கேன்சர் ஏற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது அல்லது வீட்டிலேயே பார்த்துக் கொள்வது ஆகிய இரண்டுமே ஏறக்குறைய ஒன்றுதான். முடிந்த வரையிலும் நோயாளிக்கு தெம்பூட்டும் நடவடிக்கைகளை தான் நாம் மேற்கொள்ள முடியும். இறக்கும் வரையில் அவர்கள் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் பராமரித்துக் கொள்ளலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cancer