• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா பாதிப்புடையவரின் கண்ணீர் வழியாக கொரோனா வைரஸ் பரவாது..! ஆய்வு

கொரோனா பாதிப்புடையவரின் கண்ணீர் வழியாக கொரோனா வைரஸ் பரவாது..! ஆய்வு

கண்ணீர்

கண்ணீர்

பாதிக்கப்பட்டவர்கள் கண், மூக்கு, வாய் என கை வைத்துவிட்டு மேற்பரப்பில் வைத்தாலோ, மற்றவர்களைத் தொட்டாலோ வைரஸ் பரவும் என்று கூறியுள்ளார்.

  • Share this:
    COVID-19 பாதிக்கப்பட்ட நபரின் கண்களிலிருந்து வழியும் கண்ணீர் மூலம் கொரோனா பரவாது என புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆய்வாளர்கள், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் சளி , இருமல் மற்று வியர்வை வழியாக பரவும் அபாயம் இருக்கிறது என்று கூறி வந்த நிலையில் அவர்களின் கண்களிலிருந்து வரும் கண்ணீர் வைரஸை பரப்பாது என்று கூறியுள்ளனர்.

    சிங்கப்பூரில் உள்ள தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்ட 17 நோயாளிகளின் கண்ணீரை சேமித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்ட நாள் தொடங்கி குணமாகி சென்ற 20 நாட்கள் வரை அவர்களின் கண்ணீர் சேமிக்கப்பட்டு ஒவ்வொரு நிலையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் ஆசிரியர் இவாங் சேஹா தான் மேற்கொண்ட வரையில் கண்ணீரில் வைரஸ் இருப்பது கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார். அதேசமயம் மூக்கு மற்றும் தொண்டைகளை ஆய்வு செய்தபோது முற்றிலும் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது என்று கூறுயுள்ளார்.

    அதேபோல் அவர்களின் எச்சில், சளி மூலம் பரவுவது மட்டுமன்றி அவர்கள் ஏதேனும் மேற்பரப்பில் கை வைத்தால் கூட அங்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கண், மூக்கு, வாய் என கை வைத்துவிட்டு மேற்பரப்பில் வைத்தாலோ, மற்றவர்களைத் தொட்டாலோ வைரஸ் பரவும் என்று கூறியுள்ளார்.

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: