• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Tamannaah Fitness : உடல் எடை ஏறாமல் இருக்க தமன்னா செய்யும் ட்ரிக்ஸ் இதுதான் : இன்ஸ்டாவில் பகிர்ந்துகொண்ட சீக்ரெட்

Tamannaah Fitness : உடல் எடை ஏறாமல் இருக்க தமன்னா செய்யும் ட்ரிக்ஸ் இதுதான் : இன்ஸ்டாவில் பகிர்ந்துகொண்ட சீக்ரெட்

தமன்னா

தமன்னா

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா, பார்ப்பதற்கு எப்போதும் ஸ்லிம்மாக கியூட்டாகவே இருக்கிறார்.

  • Share this:
டயட் பின்பற்றுவர்கள், உடல் எடை அதிகமாகிவிடக்கூடாது என நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை தவறாமல் கடைபிடிப்பார்கள். தங்களுக்கு பிடித்த உணவுகள் கமகமவென சமைத்து கண்முன்னே வைக்கப்பட்டிருந்தாலும் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு இக்கட்டான சூழலில் இருப்பார்கள். விரும்பிய நொறுக்குத்தீனிகள் சாப்பிட முடியாது.

எச்சில் ஊறவைக்கும் இனிப்புகளை சுவைக்க முடியாது. இது என்ன கொடுமை சார்..? என்ற பீலிங்கிலேயே இருப்பார்கள். அவர்கள் செய்யக்கூடிய விஷயம் என்னவென்றால், பின்பற்றும் டயட்டுக்கு சேதாரமில்லாமல், பிடித்த உணவுகளையும் சாப்பிடுவதற்கு ஏதாவதொரு டிரிக் இருக்குமா? என இணையத்தை அலசி ஆராய்கின்றனர்.

அப்படியான ஒரு டிரிக்கை நடிகை தமன்னாவும் பின்பற்றுகிறார் என்றால் நம்புவீர்களா? தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா, பார்ப்பதற்கு எப்போதும் ஸ்லிம்மாக கியூட்டாகவே இருக்கிறார். இப்போதும் படு பிஸியாக இருக்கும் அவரிடம், உங்களின் அழகின் ரகசியம் என்ன? டையட் சிக்ரெட்ஸ்-ஐ கூறுங்கள்!, இனிப்புகளை சாப்பிடுவீர்களா? என்ற கேள்விகளை எல்லாம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.

குறிப்பாக, ஒரே நேரத்தில் ஸ்லிம்மாகவும், அழகாகவும் தன்னை எப்படி மெயின்டெயின்ட் செய்கிறீர்கள்?, டையட் மற்றும் வொர்க் அவுட் சீக்ரெட்ஸை ஒருமுறையாவது சொல்லுங்கள்? பிடித்த உணவுகளை எப்படி தவிர்க்கிறீர்கள்? அல்லது பிடித்த உணவுகளை எப்படி சாப்பிடுகிறீர்கள்? என கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.



 




View this post on Instagram





 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)






அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, முதன்முறையாக தனக்கு பிடிக்கும் இனிப்பு வகைகளை, என்ன டிரிக்குகளை பயன்படுத்தி சாப்பிடுகிறேன்? என தமன்னா கூறியுள்ளார். பிட்னஸில் மிகவும் கான்சியஸாக இருப்பவர் என்றால், சரியான டயட் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது மனதும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிடுவற்கு உங்களுக்கு சலிப்பாக இருக்கிறதென்றால், சிறிய டிரிக்குகளை பயன்படுத்தி அதனை வித்தியாசமாக சாப்பிடலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை பாதாம் சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியுமா..? பல நன்மைகள் இருக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!

எடையும் கூடாது, அதேநேரத்தில் பிடித்த உணவுகளையும் சாப்பிடலாம். அந்தவகையில், தனக்கு பிடித்த இனிப்பு உணவுகளை சாப்பிடுதவதன் ரகிசயத்தை தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களாக பகிர்ந்துள்ளார். காலையில் ஒரு கேக் மற்றும் காஃபியை குடிக்கும் தமன்னா, அந்த காஃபி எதில் செய்யபட்டது எனவும் கூறியுள்ளார். அவர் குடிக்கும் காஃபியானது தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் லவங்கபட்டையில் உருவாகியது எனக் கூறியுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)






பிடித்த உணவுகளை இந்த டிரிக்கை பயன்படுத்தியே சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் சமோசா உள்ளிட்ட ஜங்க் உணவுகளை சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு பதிலளித்த தமன்னா, சமோசாவை சாப்பிடும்போது பின்பற்றும் டயட்டை புகைப்படமாக வெளியிட்டார். மிக நீளமாக இருக்கும் அந்த புகைப்படத்தை பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: