ஆம், நீங்கள் படித்தது சரியான தலைப்புதான். உயரமான ஆண்களுக்கு முதுமையில் தோன்றக் கூடிய டைமென்ஷியா அதாவது முதுமை மறதி, மனச்சோர்வு , அறிவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகள் வராது என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது eLife என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களிடம் ஆய்வு செய்துள்ளது. அதில் ஒவ்வொரு 6 செ.மீ உயரத்திற்கும் 10% டைமென்ஷியா நோய் தாக்குதல் அறிகுறி குறைவதாகத் தெரிவித்துள்ளனர். அதேசமயம் குட்டையான உயரம் கொண்ட ஆண்களுக்கு டைமென்ஷியா வருமா என்பதை இவர்கள் கண்டறியவில்லை.
இந்த டைமென்ஷியா என்பது முதுமையில் மறதி, அறிவாற்றல் குறைதல், மனச்சோர்வு, மனநோய் போன்றவற்றைக் குறிக்கிறது.
அதாவது இந்த ஆய்வில் புத்திக்கூர்மை என்பது கல்வியின் வழியாக அதிகரிக்கும் அந்த பண்பைப்போல, உயரத்தையும் மறதி நோய்க்கான குறைந்த அபாயத்தையும் தொடர்புபடுத்திக்கொள்ளலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.