Home /News /lifestyle /

கொத்து கொத்தாக முடி கொட்டுதா..? உயிருக்கே ஆபத்தாகும் சிபிலிஸ் நோயின் அறிகுறியாக இருக்கலாம்...

கொத்து கொத்தாக முடி கொட்டுதா..? உயிருக்கே ஆபத்தாகும் சிபிலிஸ் நோயின் அறிகுறியாக இருக்கலாம்...

சிபிலிஸ் நோய் அறிகுறி

சிபிலிஸ் நோய் அறிகுறி

Syphilis Symptoms | சிபிலிஸ் நோய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் நாளடைவில் இதயம் செயலிழப்பு மற்றும் இதர தீவிரவமான பிரச்சினைகள் உண்டாகலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சிபிலிஸ் என்பது பாலியல் ரீதியாக பரவக் கூடிய தொற்றுநோய் ஆகும். ஏற்கனவே பாதிப்பு உள்ள ஒருவருடன், முறையான பாதுகாப்பு இன்றி உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இதனை சாதாரணமாகக் கருதி விட்டுவிட முடியாது. ஏனென்றால் சிபிலிஸ் நோய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் நாளடைவில் இதயம் செயலிழப்பு மற்றும் இதர தீவிரவமான பிரச்சினைகள் உண்டாகலாம்.

மூன்றாம் நபருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்பவர்கள் கட்டாயம் ஆணுறைகளை பயன்படுத்தினால் மட்டுமே இந்த நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சிபிலிஸ் நோயின் ஆரம்பகால அறிகுறிகள் மிக சாதாரணமாக இருக்கும். அவற்றை உணருவது கடினம். இன்னும் சொல்லப்போனால், அவற்றை வேறு பிரச்சினையின் அறிகுறி என்று நினைப்பவர்களும் உண்டு.

இந்த நோயின் அறிகுறிகள் அவ்வபோது வந்து, வந்து போகும். அவை என்னென்ன அறிகுறி, எப்படி வரும் என்பதை இப்போது பார்க்கலாம்.

வாயில் வெள்ளை திட்டுக்கள்:

உங்கள் வாயில் வெள்ளை திட்டுக்கள் இருக்கின்றது என்றால், உங்களுக்கு சிபிலிஸ் நோய் இருக்கிறது என்று அர்த்தம். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 4 முதல் 12 சதவீதம் பேருக்கு இந்த அறிகுறி வருவது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.



கொத்து, கொத்தாக முடி உதிருவது:

சிபிலிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு தலை, தாடி மற்றும் கண் புருவம் ஆகிய பகுதிகளில் நிறைய முடிகள் உதிரும். குறிப்பாக, இரண்டாம் நிலை சிபிலிஸ் பாதிப்பு கொண்டவர்களுக்கு முடி உதிர்ந்த பகுதிகள் மோசமாக காட்சியளிக்கும்.

Also Read : இந்த காரணங்களால்தான் மாரடைப்பு உண்டாகிறது : இந்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

புண்:

உடலில் சின்ன, சின்ன புண்கள் ஏற்படுவதும் இதன் அறிகுறியாகும். பாக்டீரியா முதலில் எந்தப் பகுதியில் நுழைந்ததோ அங்கு இந்த புண் முதலில் வரும். பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்ட 3 வாரங்களுக்குள் இந்த அறிகுறி தென்பட தொடங்கும். ஆனால், இது வலி இல்லாதது என்பதால் பலரும் உணருவதில்லை. தொற்று ஏற்பட்ட 3 முதல் 6 வாரங்களில் இந்த புண் தாமாகவே சரியாகக் கூடிய வாய்ப்பும் உள்ளது.



தடிப்பு:

ஏற்கனவே புண் எங்கு இருந்து குணமாகியதோ, அதே பகுதியில் இந்த தடிப்புகள் வரும். முதலில் ஒரு இடத்தில் மட்டுமே தென்படும். அதன் பிறகு உள்ளங்கை, பாதம் உள்பட உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிவிடும்.

Also Read : எந்த வயதில்  கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிக்க வேண்டும் தெரியுமா..? 

சளி போன்ற அறிகுறிகள்:

சிப்லிஸ் பாதிப்பு இரண்டாம் நிலையை எட்டிவிட்டது என்றால் சிலருக்கு சளி இருப்பதைப் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். லேசான காய்ச்சல், அதிக சோர்வு, கரகரப்பான தொண்டை, தலைவலி, தசைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த அறிகுறிகள் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் அவ்வபோது வந்து கொண்டே இருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Health, Lifestyle

அடுத்த செய்தி