சம்மர் வந்தாச்சு, எனவே கொளுத்தும் வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், மலச்சிக்கல், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதை போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது நல்லது. உடலை ஹைட்ரேட்டாக வைத்திருந்தால் சருமத்தை இளமையாகவும் பிரகாசமாகவும் பராமரிக்க உதவும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் நீரிழப்பை சந்திப்பது உள் உறுப்புகளை பாதிப்பதோடு, மிகப்பெரிய பிரச்சனைகளுக்கும் காரணமாக அமையும் என்பதால் அறிகுறிகளை தெரிந்துவைத்திருப்பது மிகவும. முக்கியமான ஒன்றாகும்.
உங்களுக்கு தாகம் எடுக்கிறது என்றாலே உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என அர்த்தம், அதையும் கடந்து நீங்கள் டீ-ஹைட்ரேட் ஆகிக்கொண்டிருப்பதை புரிய வைக்கும் சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. வியர்க்காமல் இருப்பது:
மிகவும் வெப்பமான, காற்றோட்டமே இல்லாத இடத்தில் இருத்தும் துளி வியர்வை கூட வரவில்லை என்றால், இது நிச்சயம் உடல் நீரிழப்பை சந்திப்பதற்கான அறிகுறியே ஆகும். உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உடல் சூட்டை தணிக்க பயன்படுகிறது. அதேசமயம் உங்களது உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றால், வியர்வை வராது, இது மோசமான விளைவுகளை உருவாக்கும்.
also read : உடல் சூட்டை தணிக்க உதவும் நெல்லிக்காய் ஜூஸ் : செஃப் சஞ்சீவ் கபூர் பகிர்ந்துகொண்ட ரெசிபி இதோ..
ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து படி, வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்போது, ஒருவருக்கு வியர்ப்பது இயற்கையானது, ஏனெனில் இதன் மூலமாக உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், ஒருவர் நீரிழப்பை சந்திக்கும் போது வியர்வை இருக்காது, இது டி ஹைட்ரேஷன் பிரச்சனையின் முக்கிய அறிகுறியாகும்” எனத் தெரிவிக்கின்றனர்.
2. இதயத்துடிப்பு அதிகரிப்பது:
இதயத்துடிப்பு அதிகரிக்க நீரிழப்பு ஒரு பொதுவான காரணியாக உள்ளது. உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், அது இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தில் அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதனால் இதயத்துடிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைப்பதை தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
also read : இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 5 உணவுகள் - பெண்களுக்கான ஸ்பெஷல் கைட்லைன்ஸ்!
3. சருமத்தை கவனியுங்கள்:
வானிலை வெயில் மற்றும் ஈரப்பதத்துடன் இருக்கும் போது, சன்ஸ்கிரீன் லோஷன்களை பூசி பிறகும் உங்களுடைய சருமம் வறண்டு போய் காட்சியளிக்கிறது, அரிப்பு, தோல் உரிதல் போன்றவற்றை கண்டால், உடல் நீரிழப்பு அபாயத்தில் உள்ளது என்பதற்கான எச்சரிக்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே சருமம் வறட்சி அடைகிறது என்றால், உடனடியாக குளிர்ச்சி மற்றும் நீரேற்றம் தரக்கூடிய பானங்கள், ஜூஸ், தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை உடனடியாக பருகுவது நல்லது.
ரீ ஹைட்ரேஷனுக்கு எதைக் குடிக்கலாம்?
பொதுவாக தண்ணீரை அடிப்படையாக கொண்டிருக்கும் எந்த பானமும் உடலை மீண்டும் நீரேற்றம் செய்ய உதவும். எனவே உங்களுக்கு தண்ணீர் பிடிக்கவில்லை என்றால் மகிழ்ச்சியுடன் சர்க்கரை சேர்க்காத தேநீர் அருந்தலாம். அதாவது க்ரீன் டீ, எலுமிச்சை சாறு கலந்த பிளாக் டீ குடிக்கலாம். காபி மற்றும் டீ-யில் கட்டாயம் சர்க்கரையை தவிர்த்து, தேனைச் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dehydration, Summer tips