குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலைவலி என்பது பொதுவான பிரச்சனை. தலைவலி பெரும்பாலும் குறைவான காரணங்களால் தான் ஏற்படுகிறது. இருப்பினும், தலைவலி சில கடுமையான நோய்களின் அறிகுறியாகும். இந்த சந்தர்ப்பங்களில், தலைவலிக்கு சரியான சிகிச்சை தேவைப்படுகிறது. தலைவலிக்கான முக்கிய காரணங்கள் உடல் மற்றும் மன அழுத்தம், பதட்டம் மற்றும் தசையில் ஏற்படும் பிரச்சனைகள். தலைவலி ஏற்படும் முக்கிய பகுதிகள் நெற்றி, நெற்றியின் பக்கவாட்டு பகுதிகள் மற்றும் தலையின் பின்புறம் ஆகிய இடங்கள்.
மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி ஒரு நாளுக்கு மேல் நீடிக்காது, பொதுவாக சில மணி நேரங்களிலோ அல்லது இரவு நன்றாகத் தூங்குவதன் மூலமோ குறையும். இருப்பினும், ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலி போன்ற பிற வகையான தலைவலிகள் குணமடைய அதிக நேரம் எடுக்கும் மற்றும் நீண்ட நேரத்துக்கு கடுமையான வலியை ஏற்படுத்தும்.
சைனஸ் தலைவலி என்பது சைனஸில் ஏற்படும் தொற்று காரணமாக ஏற்படும் தலைவலி. பாராநேசல் சைனஸ்கள் உங்கள் கண்கள், கன்னங்கள், நெற்றி மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள காற்றோட்டமான பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் மியூக்கஸ் சவ்வுகள் உள்ளன. பொதுவாக இந்த தோலில் சிலியா எனப்படும் முடி போன்ற அமைப்புக்கள் உள்ளன, அவை சளியை உங்கள் மூக்கிற்குள் தள்ளும். ஆனால் சைனசிடிஸ் விஷயத்தில், சைனஸ் சவ்வுகளின் வீக்கம் காரணமாக இந்த ஓட்டம் தடைபடுகிறது. இது சைனஸ் தொற்று மற்றும் தலைவலி, மூக்கு ஒழுகுதல், இருமல் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
சைனஸ் தலைவலிக்கான முக்கிய அறிகுறிகள்
வலி மற்றும் மன அழுத்தம் ஆகியவை சைனஸ் தலைவலியின் முதன்மையான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் பொதுவாக அதிகரித்த வீக்கம் மற்றும் சைனஸ்-பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து திரவ ஓட்டம் குறைவதால் ஏற்படுகின்றன.
சைனஸ் தலைவலி, சைனஸ் மீது ஏற்படும் அதிக அழுத்தத்தால் ஏற்படுகிறது. இது கன்னங்கள் மற்றும் நெற்றியைச் சுற்றி அழுத்தத்தை உருவாக்குகிறது.
சைனஸ் பாதிக்கப்பட்ட முகத்தின் பகுதிகள் மென்மையாக இருக்கும். சிவப்பு நிறத்திலும் தோன்றலாம்.
சைனஸ் தலைவலி ஏற்படும் போது முக வீக்கம்
சைனஸ் பேசெஜ்களில் அழுத்தம் அதிகரிப்பதால், தலையின் அசைக்கும் போது, நிலையை மாற்றும்போது அல்லது படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளும் போது வலி அதிகரிக்கும்.
மூக்கடைப்பு: சைனஸ்கள் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டால், நாசிப் பாதைகள் பொதுவாக சளியால் நிரப்பப்படும். நோய்த்தொற்றின் போது சளி சற்று மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில், மற்றும் தடிமனாக இருக்கலாம்.
சைனஸில் இத்தனை வகைகளா..? அதற்கான காரணங்களும்... அறிகுறிகளும்...
பெரும்பாலும், மூடிய மூக்கு முகத்தின் முன்புறத்தில் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் தலைவலி உருவாகிறது.
சோர்வு: மேல் பற்கள் மற்றும் காதுகளில் வலி ஏற்படலாம். சைனஸ்கள் வீக்கமடைவதால், அது காதுகள் மற்றும் பற்கள் போன்ற சுற்றி அருகிலுள்ள உறுப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சைனஸ் அழற்சி எப்போதும் பற்கள் மற்றும் காதுகளில் வலியை ஏற்படுத்தும்.
லேசான காய்ச்சல் தோன்றும், பிற வகையான தலைவலிகள் பொதுவாக காய்ச்சலை ஏற்படுத்தாது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சைனஸ் தலைவலி மிகவும் பொதுவானது. சைனஸ் அடைப்பைக் கண்டறிய எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், நாசி எண்டோஸ்கோபி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
சைனஸ் தலைவலி மற்றும் மைக்ரேன்
மைக்ரேன் என்பது இன்று பெரும்பாலானோரை தாக்கும் ஒரு நோயாகும். தலையின் ஒரு பகுதியில் ஆரம்பித்து தலை முழுவதும் பரவும் இவ்வகை தலைவலிகளை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். பார்வை குறைபாடு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளாலும் மைக்ரேன் ஏற்படலாம்.
தூக்கமின்மை, தவறான உணவுப்பழக்கம் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலிக்கான முக்கிய காரணங்கள். இது முழுவதுமாக குணப்படுத்த முடியாவிட்டாலும், ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும் சூழ்நிலைகளில் இருந்து விலகி நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலியின் சில அறிகுறிகள் மிகவும் ஒத்தவை. தலைவலி, முன்னோக்கி சாய்ந்தால் தீவிரமான வலி, மூக்கு ஒழுகுதல், முக தசைகளில் கடுமையான அழுத்தம் மற்றும் மார்பு இறுக்கம் ஆகியவை இரண்டு தலைவலிகளின் பொதுவான அறிகுறிகளாகும். தலைவலிக்கான காரணத்தைப் புரிந்துகொள்வது சிகிச்சைக்கு முக்கியமானது. எனவே இரண்டு வகையான தலைவலிகளுக்கு இடையிலான வேறுபாடுகளை முதலில் கண்டறிய வேண்டும்.
சைனஸ் பிரச்சனை இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்...
ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்
குமட்டல் மற்றும் வாந்தி: ஒற்றைத் தலைவலி பொதுவாக குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலி மிகவும் கடுமையானது மற்றும் முக தசைகள் மற்றும் தலையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஒளி மற்றும் சத்தம் தொந்தரவாக இருக்கும்: ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட நபருக்கு அடிக்கடி பளிச்சென்ற விளக்குகள் மற்றும் சூரிய ஒளியில், அதாவது வெய்யிலில் செல்லும் போது கடுமையான அசௌகரியத்தை ஏற்படும். இந்த அசௌகரியம் பலரால் தலைவலியாக கருதப்படுகிறது. அதேபோல், ஒற்றைத் தலைவலியின் போது டெசிபலில் சற்றே அதிகமாக இருக்கும் சத்தமும் தலைவலியை அதிகரிக்கும்.
நாசிப் பாதை சுருங்குதல்: தலைவலிக்கான காரணத்தைக் கண்டறிவதில் நாசிப் பாதைகளின் நிறம் மற்றும் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு இருந்தால்,நாசிப் பாதை சுருங்கி, அது ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
ஒற்றைத் தலைவலியை எதிர்த்துப் போராட ஆப்பிள் உதவும். உடலில் அமில-கார சமநிலையை பராமரிக்க ஆப்பிள் உதவுகிறது. பச்சை ஆப்பிளின் வாசனை கூட ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும். காலையில் நீங்கள் தலைவலியுடன் எழுந்தால், ஒரு சிட்டிகை உப்பை ஒரு ஆப்பிள் துண்டில் தெளிக்கவும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். மாற்றத்தை உணருங்கள்.
மூன்று முதல் நான்கு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை வெந்நீரில் சேர்த்து குடிக்கவும். தலைவலிக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஆப்பிள் சைடர் வினிகருடன் இரண்டு துளி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம். தலைவலியைப் போக்க இது நல்லது. ஆப்பிள் சைடர் வினிகர் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற இடங்களில் கிடைக்கும்.
சைனஸ் தலைவலியைத் தடுக்க சில வீட்டு வைத்தியங்கள்
உங்களுக்கு சைனஸ் தலைவலி இருந்தால், வலி உள்ள பகுதியை உப்பு நீரில் அடிக்கடி ஈரப்படுத்தவும்.
நீராவி: வலியுள்ள பகுதியில் ஈரமான துணியை வைப்பது மூக்கிலிருந்து சளி வெளியேறவும், அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
சைனஸ் அழுத்தம் உணரப்படும் பகுதிகளில் மெதுவாக அழுத்தி, சைனஸ் திரவ ஓட்டத்தை அதிகரிக்க முயற்சிக்கவும். கண்களுக்கு இடையில் மூக்கின் பாலத்திலிருந்து தொடங்குங்கள். ஒரு நிமிடம் தொடர்ந்து அழுத்தவும். இது உங்கள் சைனஸில் சிக்கியுள்ள சளியால் ஏற்படும் அடைப்பை நீக்கலாம்.
சைனஸ் தலைவலியை எவ்வாறு தடுப்பது?
சைனசிடிஸ் அல்லது பருவகால ஒவ்வாமையின் அறிகுறியாக உங்களுக்கு சைனஸ் தலைவலி இருந்தால், மருத்துவரை சந்தித்து தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், ஒவ்வாமைகளைத் தவிர்ப்பதற்கும், ஏரோபிக் உடற்பயிற்சியை உங்கள் வாடிக்கையில் சேர்ப்பதற்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள். இது சைனஸ் தலைவலியை குறைக்க உதவும். நாள்பட்ட சைனசிடிஸ் நிகழ்வுகளில், பலூன் சைனஸ் பிளாஸ்டி போன்ற நாசி அறுவை சிகிச்சை மட்டுமே சைனஸ் தலைவலியைத் தடுக்க ஒரே வழி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sinus, Sinus Symptoms