முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட என்ன காரணம்..? இயல்பு நிலைக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும்..?

குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட என்ன காரணம்..? இயல்பு நிலைக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும்..?

குறைந்த இரத்த அழுத்த அளவு

குறைந்த இரத்த அழுத்த அளவு

தலைசுற்றல் என்பது குறைந்த இரத்த அழுத்தத்தின் ஒரு பொதுவான அறிகுறியாகும். ரத்த அழுத்தம் மிகக் குறைவாக இருந்தால், அந்த நபர் மயக்கம் அடையலாம்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹைப்பர்டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்த பிரச்சனை பெரும்பாலும் ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற சுகாதார சிக்கலுக்கு வழிவகுக்கும். அதேபோல, குறைந்த இரத்த அழுத்தம் அல்லது ஹைபோடென்ஷன் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

நாம் செய்யும் செயல்பாட்டைப் பொறுத்து நமது இரத்த அழுத்தம் நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால் இரத்த அழுத்தத்தின் அளவு திடீரெனக் மிகக் குறைந்த அளவிற்கு செல்லும்போது அது மயக்கத்திற்கு வழிவகுக்கும். சில கடுமையான சந்தர்ப்பங்களில், குறைந்த இரத்த அழுத்தம் உயிருக்கு கூட ஆபத்தானதாக முடிவடையும். இரத்த அழுத்த அளவு குறைவதற்கு மரபணு அல்லது கர்ப்பம் அல்லது நீரிழப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம். குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் அடிக்கடி அவதிப்பட்டால், அடிப்படை காரணத்தை அறிய உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

குறைந்த இரத்த அழுத்தம் எப்படி மதிப்பீடு செய்வது..?

இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம்-சிஸ்டாலிக் (மேல் எண்) மற்றும் டயஸ்டாலிக் (கீழ் எண்) ஆகியவற்றில் காட்டப்படும் இரண்டு எண்களின் அடிப்படையில் இரத்த அழுத்த நிலை மதிப்பீடு செய்யப்படுகிறது. சிஸ்டாலிக் எண் என்பது இதயம் சுருங்கும்போது உள்ள இரத்த அழுத்தத்தைக் குறிக்கிறது. அதே நேரத்தில் இதய தசைகள் ஓய்வெடுக்கும் போது டயஸ்டாலிக் அழுத்தத்தை சித்தரிக்கிறது. இரத்த அழுத்தத்தின் அளவு எப்போதும் மில்லிமீட்டர் பாதரசத்தில் (மிமீ எச்ஜி) அளவிடப்படுகிறது.

இரத்த அழுத்த நிலை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது :

குறைந்த இரத்த அழுத்த அளவு : சிஸ்டாலிக் 90 மிமீ Hg-க்கு குறைவாக அல்லது டயஸ்டாலிக் 60 மிமீ Hg-க்கு குறைவாக இருந்தால் அது ஹைபோடென்ஷனை குறிக்கிறது.

இயல்பானது ரத்த அழுத்த அளவு : சிஸ்டாலிக் 120 மிமீ Hg-க்கும் குறைவாக இருக்கும், மற்றும் டயஸ்டாலிக் 80 மிமீ Hg க்கும் குறைவாக இருக்கும்.

உயர் இரத்த அழுத்த அளவு : சிஸ்டாலிக் 120 மிமீ எச்ஜிக்கு மேல் அல்லது டயஸ்டாலிக் 80 மிமீ எச்ஜிக்கு மேல்.

உங்கள் இரத்த அழுத்த அளவு குறைவாக இருந்தால் இயல்பு நிலைக்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, முதலில் நீங்கள் குறைந்த இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன என்பதை அடையாளம் காண வேண்டும், அவை பின்வருமாறு.

குறைந்த இரத்த அழுத்தத்தின் சில அறிகுறிகள்:

1. பலவீனம்

குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும்போது நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வீர்கள். திடீரென இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி ஏற்பட்டால் ஆதரவின்றி இரண்டு-மூன்று அடிகள் சரியாக எடுத்து வைப்பது கூட உங்களுக்கு வலிமை இல்லாதது போல இருக்கும்.

2. மயக்கம் அல்லது தலைசுற்றல்

தலைசுற்றல் என்பது குறைந்த இரத்த அழுத்தத்தின் ஒரு பொதுவான அறிகுறியாகும். ரத்த அழுத்தம் மிகக் குறைவாக இருந்தால், அந்த நபர் மயக்கம் அடையலாம்.

3. நீரிழப்பு

குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் நீரிழப்புக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இரத்த அழுத்த அளவு குறையும் போது, ​​நீங்கள் அதிக வறட்சியை உணரலாம்.

குறைந்த இரத்த அழுத்தத்தின் பிற அறிகுறிகள் :

1. கவனம் செலுத்துவதில் சிக்கல் மற்றும் மங்கலான பார்வை

உடலின் உறுப்புகளுக்கு இரத்த அழுத்தம் போதிய அளவில் இல்லாமல் இருந்தால் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். உங்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை நீங்கள் தெளிவாகப் பார்க்கவோ அல்லது உங்கள் வேலையில் கவனம் செலுத்தவோ முடியாது.

Also Read : கண்புரை அறுவை சிகிச்சை செய்த பின் நாம் பின்பற்ற வேண்டியது என்ன..?

2. குளிர்ந்த தோல் மற்றும் விரைவான சுவாசம்

குறைந்த இரத்த அழுத்தம் உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், வியர்வையாகவும் மாற்றக்கூடிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் சுவாசிக்கும் விகிதம் கூட அதிகரிக்கும் மற்றும் உங்கள் இதயத்துடிப்பு பலவீனமடையும். இந்த அறிகுறியை நீங்கள் கண்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

இதுதவிர, கீழ்காணும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியதும் அவசியம்.

* தடிப்புகள்

* இறுக்கமான ஒரு உணர்வு

* மூச்சுத் திணறல்

* மயக்கம், அல்லது குழப்பம்

* வாய், நாக்கு, தொண்டை அல்லது உதடுகளின் வீக்கம்

* உணவு விழுங்குவதில் சிக்கல்

* நடுக்கம்

* வியர்வை அல்லது மிருதுவான தோல்

* தீவிர அசௌகரியம்

* அதிக இதய துடிப்பு

இந்த பிரச்சனையை தடுக்க வீட்டிலேயே எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் என்ன?

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா என்றால் நீங்கள் கட்டாயம் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். அதற்கேற்ப மருந்துகளை உங்களுக்கு பரிந்துரைப்பார்கள். ஹைபோடென்ஷனால் அவதிப்படும்போது நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில விஷயங்களால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். அவை என்ன என்பது குறித்து காண்போம்.

* எப்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* மது அருந்துவதை தவிர்க்கவும்

* ஆரோக்கியமான மற்றும் சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

* தக்காளி சாற்றை தவறாமல் குடிக்க வேண்டும்.

* இரத்த ஓட்டத்தைத் தூண்ட படுக்கையில் இருந்து எழுவதற்கு முன்பு உங்கள் கால்களுக்கு சிறுது அசைவு கொடுக்க வேண்டும்.

* மருத்துவரின் ஆலோசனையை எப்போதும் பெற வேண்டும்.

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாவிட்டால், அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

First published:

Tags: Blood Pressure, Low Blood Pressure