சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்ட இயலாமல் போகும் நிலையே சிறுநீரக செயலிழப்பு ஆகும். இந்நிலையில் சிறுநீரகங்கள் வடிகட்டும் செயலை செய்ய முடியாமல் போவதால் கழிவுகளின் சேர்க்கை அதிகரித்து இரத்தத்தின் கெமிக்கல்கள் சமநிலையை இழந்து ஆபத்தை உண்டாக்குகிறது.
சிறுநீரக செயலிழப்பு பொதுவாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகழ்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் மருத்துவ பாதுகாப்பும் அவசியமாகிறது. சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளை அவ்வளவு எளிதாக கண்டறிவதும் கடினம். அதன் வீரியம் அதிகரித்த பின்னரே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
எனவேதான் சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய முடியாமல் போகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. எனவே எப்போதும் விழிப்புடன் இருக்க சிறுநீரக செயலிழப்பின் சில அறிகுறிகளையும், சிகிச்சை முறைகள் மற்றும் காரணங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் :
சில நேரங்களில் சரியான அறிகுறிகளை வெளிப்படுத்தாது என்பதால் சந்தேகம் இருப்பின் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொண்டு உறுதி செய்வது நல்லது.
எப்போது மருத்துவரை அனுக வேண்டும்..?
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் அல்லது கடுமையான அறிகுறிகளை அனுபவிக்கிறீர்கள் எனில் சற்று தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட காரணங்கள் :
- சிறுநீரகங்களுக்கு செல்ல வேண்டிய இரத்தம் குறையும்போது
- சிறுநீரகத்திற்கு நேரடியான பாதிப்புகள் நிகழும்போது
- சிறுநீர் வடிகால் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனால் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற முடியாமல் போகும்போது என இந்த மூன்று காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.
சிறுநீரகத்திற்கு இரத்த ஓட்டம் ஏன் குறைகிறது..?
ஏதேனும் நோய் தாக்கம் அல்லது தீவிர உடல்நல பாதிப்புகள் இருக்கும்போது சிறுநீரகத்திற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறையும். அப்படி சிறுநீரகத்திற்கு இரத்த ஓட்டம் குறைய கீழே உள்ள இந்த நோய் பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம்..
- இரத்தம் அல்லது நீர் இழப்பு
- இரத்த அழுத்தம்
- மாரடைப்பு
- இதய நோய்
- நோய் தொற்று
- கல்லீரல் செயலிழப்பு
- ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் (அட்வில், மோட்ரின் ஐபி, மற்றவை), நாப்ராக்ஸன் சோடியம் (அலீவ், மற்றவை) அல்லது தொடர்புடைய மருந்துகளின் பயன்பாடு
- கடுமையான ஒவ்வாமை எதிர்வினை (அனாபிலாக்ஸிஸ்)
- கடுமையான தீக்காயங்கள்
- கடுமையான நீரிழப்பு
இந்த பிரச்சனைகள் இருந்தாலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்..!
சிறுநீரகத்தை சுற்றியுள்ள நரம்புகளில் இரத்தம் உறைதல்
சிறுநீரகத்திற்கு செல்லக்கூடிய இரத்தக்குழாயில் கொழுப்புகள் தேங்கி அடைத்துக்கொள்ளுதல்
குளோமெருலோனெப்ரிடிஸ் Glomerulonephritis (gloe-mer-u-loe-nuh-FRY-tis) பாதிப்பி. அதாவது சிறுநீரகங்களில் உள்ள சிறிய வடிகட்டிகளின் வீக்கம் (குளோமருலி)
ஹீமோலிடிக் யூரிமிக் சிண்ட்ரோம், இது இரத்த சிவப்பணுக்களை முன்கூட்டியே அழிப்பதன் விளைவாகும்.
தொற்று பாதிப்பு அதாவது கொரோனா போன்ற வைரஸ் தாக்குதல்கள்
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
சில கீமோதெரபி மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இமேஜிங் சோதனைகளின் போது பயன்படுத்தப்படும் மருந்துகள்
ஸ்க்லெரோடெர்மா (Scleroderm), தோல் மற்றும் இணைப்பு திசுக்களை பாதிக்கும் அரிய நோய்களின் குழு
த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புரா (Thrombotic thrombocytopenic purpura) எனும் அரிதான இரத்தக் கோளாறு
ஆல்கஹால், போதை பழக்கம் போற்ற நச்சு நிறைந்த பழக்கங்கள்
தசை திசு சிதைவு (ராப்டோமயோலிசிஸ்,rhabdomyolysis) இது தசை திசு அழிவிலிருந்து உருவாகும் நச்சுகளால் சிறுநீரக சேதத்திற்கு வழிவகுக்கிறது
கட்டி உயிரணுக்களின் முறிவு (tumor lysis syndrome, இது சிறுநீரக காயத்தை ஏற்படுத்தும் நச்சுகளின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது.
சிறுநீர் அடைப்புக்கு காரணம் :
* சிறுநீர்ப்பை புற்றுநோய்
* சிறுநீரகப் பாதையில் இரத்தம் உறைவு
* கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
* பெருங்குடல் புற்றுநோய்
* சிறுநீரகத்தில் கல் உருவாக்கம்
* சிறுநீர்ப்பையை ஆற்றலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகளில் பாதிப்பு
* புரோஸ்ட்ரேட் புற்றுநோய்
சிறுநீரக செயலிழப்பின் தீவிரத்தை அதிகரிக்கும் நோய் பாதிப்புகள் :
1. தீவிர மருத்துவ பாதுகாப்பு கொண்ட நோய் பாதிப்புகளால் மருத்துவமனையில் இருத்தல்
2. வயது அதிகரிப்பு
3. கை அல்லது கால் இரத்தக்குழாய்களில் அடைப்பு
4. நீரிழிவு நோய்
5. உயர் இரத்த அழுத்தம்
6. இதய செயலிழப்பு
7. சிறுநீரக பாதிப்பு
9. கல்லீரல் பாதிப்பு
10. சில புற்றுநோய் தாக்கம் மற்றும் அதற்கான சிகிச்சைகள்
சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் என்னென்ன..?
நீர் கோர்த்துக்கொள்ளுதல் : சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் நுரையீரலில் நீர் சேர்க்கை அதிகரிக்கும். இதனால் மூச்சுத்திணறல் உண்டாகும்.
மார்பு வலி : இதயத்தை சுற்றியுள்ள புறணியில் வீக்கம் ஏற்பட்டு மார்பு வலியை அனுபவிப்பீர்கள்.
தசை பலவீனம் : உடலின் திரவம், எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் இரத்ததின் வேதியியல் மாற்றங்கள் சீராக இல்லாதபோது சமநிலையை இழக்கும். இதனால் தசை பலவீனம் ஏற்படும்.
நிரந்தரமான சிறுநீரக பாதிப்பு : செயற்கையான முறையில் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் அளவுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
இறப்பு : சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடலின் அன்றாட வேலைகள் தடைப்படுவதால் இறந்துபோகும் அபாயம் ஏற்படலாம்.
தடுக்கும் வழிகள் என்ன..?
சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது அல்லது யூகிப்பது என்பது மிகவும் கடினம். இருப்பினும் சிறுநீரக செயலிழப்பின் அபாயத்தை தடுக்க சில விஷயங்களை கடைப்பிடிக்கலாம்.
அதிக டோஸ் கொண்ட மாத்திரைகளை தவிர்த்தல் : ஆஸ்பிரின், அசெட்டமினோஃபென் (டைலெனோல், மற்றவை), இப்யூபுரூஃபன் (அட்வில், மோட்ரின் ஐபி, மற்றவை) மற்றும் நாப்ராக்ஸன் சோடியம் (அலேவ், மற்றவை) போன்ற வலி மருந்துகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் சிறுநீரக பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு , நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருப்பின் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மருத்துவரிடம் தொடர்பில் இருத்தல் : உங்களுக்கு ஏதேனும் சிறுநீரக பிரச்சனை , நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைகள் , சிகிச்சைகளை தவறாமல் பின்பற்றுங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை : எப்போதும் ஆக்டிவாக இருங்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். சமநிலையான உணவு , மதுவை குறைத்துக்கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kidney Disease, Kidney Failure