Home /News /lifestyle /

புற்றுநோயுடன் தொடர்புடைய வலியின் வகைகள் மற்றும் அறிகுறிகள் என்ன?  

புற்றுநோயுடன் தொடர்புடைய வலியின் வகைகள் மற்றும் அறிகுறிகள் என்ன?  

காட்சி படம்

காட்சி படம்

நரம்புகள் மற்றும் உறுப்புகள் உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கும் புற்றுநோய் பரவியிருப்பதை உடல்வலி வெளிப்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

உயிரை கொல்லும் ஒரு நாள்பட்ட கொடூர நோய் கேன்சர் ஆகும். கேன்சர் எனப்படும் புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்த முடியும். எனினும் பல சந்தர்ப்பங்களில் புற்றுநோய்கள் ஏற்கனவே தீவிர பாதிப்புகள் ஏற்படுத்திய நிலையில் அல்லது நன்கு பரவிய பின் தான் கண்டறியப்படுகின்றன, இதனால் சிகிச்சையளிப்பது கடினமாகிறது.

சில நேரங்களில் உடல் வலி கூட புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை குறிக்கலாம். நரம்புகள் மற்றும் உறுப்புகள் உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கும் புற்றுநோய் பரவியிருப்பதை உடல்வலி வெளிப்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இருப்பினும் ஒருவர் எவ்வளவு வலியை அனுபவிக்கிறார் என்பது அவருக்கு எந்த வகை புற்றுநோய் உள்ளது, அது எவ்வளவு முன்னேறி உள்ளது மற்றும் அது அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்தது.

புற்றுநோய் வலிக்கு காரணம் என்ன..? புற்றுநோய் வலி  பல காரணங்களால் ஏற்படலாம். பெரும்பாலான புற்றுநோய் வலிக்கு எலும்புகள், நரம்புகள் அல்லது உடலில் உள்ள மற்ற உறுப்புகளில் கேன்சர் கட்டியால் ஏற்படும் அழுத்தம் காரணமாகிறது. வேறு சில சமயங்களில், நோய்க்கு ஒருவர் பெறும் மேம்பட்ட சிகிச்சையால் புற்றுநோய் வலி தூண்டப்படலாம். எடுத்துக்காட்டாக சில கீமோதெரபி மருந்துகள் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை மற்றும் கூச்சத்தை ஏற்படுத்தும். இதே போல் ரேடியோ தெரபி சிகிச்சையானது தோல் எரிச்சல் மற்றும் தோல் சிவந்து போதல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்.



also read : பிரசவத்திற்கு பிறகு வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க கூடிய 5 சூப்பர் பயிற்சிகள் இதோ..

புற்றுநோய் வலியின் வகைகள்..

சோமாடிக்: இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுபவிக்கும் மிகவும் பொதுவான வலி வகை ஆகும்.இந்த வகை வலி துடித்தல் அல்லது தசைப்பிடிப்பு வலி ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

நியூரோபதிக்: இது புற்றுநோயால் ஏற்படும் நரம்பு சேதம் அல்லது கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும்/அல்லது அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் காரணமாக ஏற்படும் மற்றொரு வகை புற்றுநோய் வலி ஆகும்.

விசெரல்: மார்பு, வயிறு அல்லது இடுப்பு போன்ற உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் வலி வகை இது. தமிழில் இது உள்ளுறுப்பு வலி என்று அழைக்கப்படுகிறது. புற்றுநோய் கட்டி இந்த உறுப்புகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அழுத்தம் கொடுக்கும் போது இவ்வலி ஏற்படும்.



கடும் மற்றும் நாள்பட்ட வலி: இந்த வகை வலி பொதுவாக காயம் போன்ற அடையாளம் காணக்கூடியவற்றால் ஏற்படும் குறுகிய கால வலி ஆகும். இது அவ்வப்போது வந்து போகலாம்.

புற்றுநோய் வலிக்கான அறிகுறிகள்: புற்றுநோயுடன் தொடர்புடைய வலி மந்தமாக, லேசாக அல்லது கடுமையானதாக இருக்கலாம். புற்றுநோயானது அருகிலுள்ள திசுக்களில் வளர்ந்தால் அல்லது அழிக்கப்பட்டால் வலி ஏற்படலாம். மேலும் கேன்சர் கட்டி வளரும் போது அது நரம்புகள், எலும்புகள் அல்லது உள்உறுப்புகளை அழுத்தலாம். சோர்வு, காய்ச்சல், சருமத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களுடன் கேன்சர் வலி ஏற்படலாம். சில நேரங்களில் கேன்சர் கட்டி வலியை ஏற்படுத்தும் கெமிக்கல்களை வெளியிடலாம்.

வலியை மருத்துவர் புரிந்து கொள்ள உதவும் காரணிகள்: ஒருவருக்கு கடுமையான, தொடர்ச்சியான வலி தினசரி வழக்கத்தில் தலையிடும் வலி இருந்தால் மருத்துவரைத் தொடர்பு கொள்வது அவசியம். வலியின் தீவிரம், வலிக்கும் பகுதி, என்ன வகையான வலி, வலியை அதிகரிக்கச் செய்யும் ஏதாவது உள்ளதா, வலியை மோசமாக்குவது அல்லது நிவாரணம் தருவது எது, எந்த வலி நிவாரண நடவடிக்கை வலியை குறைக்க உதவியது உள்ளிட்ட காரணிகள் ஒருவரது வலியை பற்றி மருத்துவர் புரிந்து கொள்ள உதவும் காரணிகள் ஆகும்.

also read : கோபமான மனநிலையில் அடிக்கும், உடைக்கும் குழந்தையை சமாளிப்பது எப்படி?



புறக்கணிக்க கூடாத சில கேன்சர் அறிகுறிகள்: அதீத சோர்வு, ரத்தப்போக்கு, விவரிக்க முடியாத காயங்கள், காரணமின்றி ஏற்படும் எடை இழப்பு, கட்டிகளின் திடீர் வளர்ச்சி, சருமத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்.

சிகிச்சை: வலியின் தீவிரத்தைப் பொறுத்து புற்றுநோய் வலிக்கு சிகிச்சை பெற முடியும். மருத்துவர்கள் ஓவர்-தி-கவுண்டர் வலி நிவாரணிகள், opium-லிருந்து பெறப்பட்ட மருந்துகள் அல்லது பிற பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பரிந்துரைக்கலாம்.கூடுதலாக, மசாஜ், பிஸிக்கல் தெரபி, அக்குபஞ்சர், தளர்வு பயிற்சிகள், தியானம் மற்றும் ஹிப்னாஸிஸ் போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சைகள் உள்ளன.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Cancer

அடுத்த செய்தி