உலகெங்கிலும் 415 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் அவதியடைந்து வருகின்றனர். இனப் பாகுபாடு இல்லாமல் ஆண், பெண், குழந்தைகள் என எல்லோருமே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சர்க்கரை நோய் எதிரொலியாக கால் பாதங்கள் பாதிக்கப்படும் என்பது பலருக்கு தெரிவதில்லை அல்லது அந்த விஷயத்தை அலட்சியம் செய்கின்றனர்.
பொதுவாக ரத்த சர்க்கரை அளவுகள் மிகுதியாக இருந்தால் அது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை பாதிக்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நம் கால் பாதங்களையும் அது பாதிக்கும் என்ற தகவல் ஒரு சிலருக்கு தெரிந்திருந்தாலும் பரவலாக அறியப்படவில்லை. ஆம், சர்க்கரை மிகுதியாக இருந்தால் கால் பாதங்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும்.
குறிப்பாக, ரத்த ஓட்டம் தடைபடக் கூடிய பிரச்சினைகள் மற்றும் பாதங்களில் காயங்கள் போன்றவை ஏற்பட கூடும். சிலருக்கு கால் பாதம் வீக்கம் அடையும். இந்தப் பிரச்சினையை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு சார்ந்த நியூரோபரதி
* கால்கள் மற்றும் பாதங்களில் வலி, எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
* காலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் அது அவ்வளவு சீக்கிரம் ஆறாது. ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் புண்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ரத்த நாளங்கள் சுருங்கி, கடினமாகிவிடுவதால் ரத்த ஓட்டம் தடைபடும்.
* நமது பெரும் பாதத்தை ஒட்டிய பகுதியில் அல்சர் என்று சொல்லக் கூடிய திட்டு, திட்டான புண்கள் தென்படும். வலியே இல்லாவிட்டாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..?
* திசுக்கள் இறந்து அழியத் தொடங்கும். இதனால் கால் விரல்களை வெட்டியெடுக்கும் நிலை கூட ஏற்படலாம்.
* சருமத்தில் வறட்சி, வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு, தோல் உரிவது போன்றவை ஏற்படும்.
* பாதங்கள் தான் நம் உடலின் மொத்த எடையையும் தாங்குகிறது. அங்கு சிறு கொப்பளங்கள் வந்தாலும் அது பெரும் புண்ணாக மாறும்.
அபாயங்களை குறைப்பது எப்படி
* ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.
* மருந்துகளை முறையாக உட்கொள்வதுடன், உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.
* கால்களில் ஏதும் காயங்கள், வெடிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
* குளித்த பிறகு, கால்களை கழுவிய பிறகு பாத இடுக்குகளில் உள்ள ஈரம் முழுமையாக காய வேண்டும்.
* கால்களை கழுவ நினைத்தால் வெந்நீரில் கழுவலாம்.
* புகைப்பிடித்தல் கூடாது.
* வெறும் கால்களுடன் நடப்பது, சேறு, சகதியில் இறங்கி வேலை செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* சுய சிகிச்சை கூடாது.
* நகங்களை முறையாக வெட்ட வேண்டும்.
* சுத்தமான, உலர்ந்த சாக்ஸ்களை மட்டுமே அணிய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Sugar, Diabetes, Leg Pain