முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் கை, கால் வீக்கம் ஏற்படுவது இயல்பானதா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்..!

கர்ப்ப காலத்தில் கை, கால் வீக்கம் ஏற்படுவது இயல்பானதா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்..!

கர்ப்ப காலத்தில் கை, கால் வீக்கம்

கர்ப்ப காலத்தில் கை, கால் வீக்கம்

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடை அதிகரிக்கும் போது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்துவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும் இயல்பான ஒன்று தான் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடை அதிகரிக்கும் போது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்துவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும் இயல்பான ஒன்று தான் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

தாய்மை பெண்களுக்கு கிடைத்துள்ள அற்புதமான வரம். இருந்தப் போதும் 10 மாதங்கள் தூக்கமில்லாமல் இருப்பது, உடல் சோர்வடைவது என பல உடல் நலப்பிரச்சனைகளை சந்தித்து தான் மழலைச் செல்வத்தைப் பெற்றெடுக்க முடியும். பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்துப் பெண்களும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது கை, கால்களில் நீர்த்தேக்கம் ஏற்படுவது கூறப்படுகிறது. ஏன் இது இயல்பான ஒன்றா? இதனை சரி செய்ய என்ன வேண்டும்? இதோ மருத்துவர்கள் தரும் விளக்கம் உங்களுக்காக…

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கை, கால் வீக்கம் ஏற்படுவதற்கானக் காரணங்கள்:

கர்ப்பமான முதல் 3 மாதங்களில் கை, கால் வீக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. குழந்தையின் எடை அதிகரிக்கும் போது அடி வயிற்றில் உள்ள இரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுக்கும். அதில் inferior vena cava அழுத்தப்படும் போது கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இவை தான் பாதங்களிலிருந்து இரத்தத்தை மேல எடுத்துச் செல்லும். ஆனால் எடை அதிகரிப்பினால் அழுத்தம் ஏற்படும் போது சரியாக இரத்தத்தை மேலே கொண்டு செல்ல முடியாது. இதனால் இரத்தம் கால்களில் தேங்க ஆரம்பிக்கும் பொழுது வீக்கம் ஏற்படுகிறது.

இதோடு கர்ப்ப காலத்தில் உடலில் கூடுதல் திரவம் சேரும் போது, கருப்பையில் அழுத்தம் ஏற்பட்டு கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட்டு கருவுற்ற பெண்கள் நடப்பதற்கே சிரமத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு கால்கள் மட்டுமில்லாது கைகளிலும் வீக்கம் ஏற்படும். மேலும் முகம், கண்களைச் சுற்றி பாதிப்படைய செய்கிறது. ஆனால் இதுப் போன்ற பிரச்சனைகள் அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. 5-8 சதவீத பெண்களை மட்டும் பாதிப்பிற்குள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே இதுப்போன்ற நேரங்களில் பெண்கள் பாதுகாப்போடும், கை, கால் வீக்கத்தைக் குறைப்பதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

top videos

    கர்ப்ப காலத்தில் கை, கால் வீக்கத்தை சரிசெய்வதற்கான வழிமுறைகள்:

    கை, கால் வீக்கம் ஏற்படும் போது மிதமான சூட்டில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஒத்தனம் அல்லது மசாஜ் செய்ய வேண்டும்.
    நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.
    கர்ப்ப கால சமயத்தில் பெண்கள் உட்காரும் போதும், படுக்கும் பொழுதும் தசைப்பிடிப்பைத் தவிர்க்க உங்களது கால்களுக்குக் கீழே எப்போதும் ஒரு தலையணையை வைத்திருங்கள்.
    வயிற்றில் குழந்தை இருக்கும் போது உப்பு அதிகம் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். இதோடு காஃபின் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்களது உடலை நீரழிப்பு செய்வதால் உடலை மேலும் மோசமாக்குகிறது.
    படுக்கும் போது எப்போதும் வலது புறம் திரும்பிப் படுக்க வேண்டும்.
    சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
    இதுப்போன்ற நடைமுறைகளை தொடர்ச்சியாக செய்து வந்தாலே கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படுவதைக் குறைக்க முடியும். இந்த வீக்கம் கூட குழந்தை பிறந்த2-3 வாரங்களில் முற்றிலும் குறைந்துவிடும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
    First published:

    Tags: Pregnancy Sickness