ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா..? இந்த பிரச்சனை இருக்கானு உடனே செக் பண்ணிக்கோங்க..!

உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா..? இந்த பிரச்சனை இருக்கானு உடனே செக் பண்ணிக்கோங்க..!

ஹைப்பர்ஹைட்ரோசிஸ்

ஹைப்பர்ஹைட்ரோசிஸ்

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உள்ளவர்கள் அதிகப்படியான வியர்வை மற்றும் துர்நாற்றம் காரணமாக வெட்கப்படுவதோடு, தொழில் மற்றும் பிறருடன் பழகுவதில் இருந்தும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோடை காலத்தில் வெப்பம் காரணமாக வியர்ப்பது என்பது பொதுவான விஷயம். ஆனால் பிற சமயங்களிலும் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா?, வியர்வை வழிந்து மிகவும் அசெளகரியமாக உணர்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்றால் என்ன?

அதிகப்படியான வியர்வை என்பது ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என அழைக்கப்படுகிறது. அதாவது வியர்வை என்பது நமது உடல் வெப்பத்தை தணிக்க குளிர்விக்க ஆரோக்கியமான வழியாகும். ஆனால் அதுவே தேவையில்லாத சமயங்களில் அதிகமாக வெளிப்படுவது, அதாவது அதிக வெப்பம் இல்லாத இடத்தில் இருக்கும் போதும், எந்த வேலையும் செய்யாத போதும் கூட உடலில் இருந்து அதிகமாக வியர்ப்பது ஹைப்பர்ஹைட்ரோசிஸ் எனப்படுகிறது. பாலிஹைட்ரோசிஸ் அல்லது சுடோரியா என்றும் அழைக்கப்படுகிறது. இது வியர்வை சுரப்பிகளின் அதிகப்படியான செயல்பாட்டின் விளைவால் உருவாகிறது.

மேலும் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உங்களுக்கு அசெளகரியத்தை மட்டுமல்ல, சமூக வாழ்க்கையையும் பாதிக்கிறது. அதிகமாக வியர்ப்பது என்பது, கிட்டதட்ட மக்கள் தொகையில் 3 சதவீதம் பேரை பாதிக்கும் பிரச்சனையாக உள்ளது. அதிகமாக கை, கால்களில் வியர்க்கும் போது நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாது. எல்லோருக்கும் தானே வியர்க்கிறது, கொஞ்சம் எக்ஸ்ட்ரா வியர்ப்பதால் என்ன பிரச்சனை என நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு அதிகப்படியாக வியர்க்கிறது என்றால் அது எதனால் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் வகைகள்:

ஹைப்பர்ஹைட்ரோசிஸில் இரண்டு வகைகள் உள்ளன:

1. பிரைமரி ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் அல்லது ஃபோக்கல் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்:  இந்த வகை வியர்வைப் பிரச்னை, மரபுரீதியான காரணத்தாலும் ஏற்படக்கூடியது. இது பெண்கள் பருவமடையும் போது மோசமான நிலையை எட்டக்கூடியது. உள்ளங்கை, உள்ளங்கால், முகம், அக்குள் இந்த நான்கு இடங்களிலும் வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக இருக்கும். அந்த இடங்களில் இருந்து அதிகப்படியாக வியர்க்கும்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் கேன்சர் வருமா..? இந்த 5 பாதிப்புகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

2. செகண்டரி ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்: இந்த வகை சில நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்படக்கூடியது. நீரழிவு நோய், கீல் வாதம், தைராய்டு, இதயக்கோளாறு, தொற்றுப்பாதிப்பு, நரம்பு பிரச்சனை, மதுப்பழக்கம், முதுகெலும்பு பாதிப்பு, குறிப்பிட்ட சில மருந்துகளை நீண்ட காலமாக உட்கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த பிரச்சனை ஏற்படும்.

தோல் மருத்துவரும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி எல் ஜாங்கிட் கூறுகையில் "ஹைப்பர்ஹைட்ரோசிஸ் கைகள், கால்கள், அக்குள் மற்றும் முகம் போன்ற பகுதிகளை பாதிக்கலாம், ஆனால் சிலருக்கு முழு உடலும் அதிகமாக வியர்க்கலாம். இது சாதாரண வியர்வை என்று அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது, மேலும் அதனால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாக அதைப் பற்றி வெளியே சொல்ல வெட்கப்படுவார்கள். இதனை மருத்துவ சிகிச்சைகளால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்” என்கிறார்.

இந்த காலை பழக்கங்கள் உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் : டிரை பண்ணி பாருங்க..

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உள்ளவர்கள் அதிகப்படியான வியர்வை மற்றும் துர்நாற்றம் காரணமாக வெட்கப்படுவதோடு, தொழில் மற்றும் பிறருடன் பழகுவதில் இருந்தும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அதிக வியர்வை காரணமாக வெள்ளை, பாலியஸ்டர் அல்லது நைலான் ஆடைகளை அணிவதைத் தவிர்க்கிறார்கள். சிலருக்கு உள்ளங்கையில் அதிகமாக வியர்ப்பதால், கைக்குலுக்குவதை தவிர்ப்பார்கள். இது ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இருந்து தங்களை தாங்களே விலக்கிக்கொள்ள காரணமாக அமைகிறது.

ஹைப்பர்ஹைட்ரோசிஸில் இருந்து தப்ப உதவும் சில குறிப்புகள்:

• பாக்டீரியா எதிர்ப்பு சோப்பைப் பயன்படுத்தி குளிக்கவும்

• காரமான உணவைத் தவிர்க்கவும்

• லேசான, சுவாசிக்கக்கூடிய ஆடைகளை அணியுங்கள்

• ஆண்டிபெர்ஸ்பிரண்ட் பயன்படுத்தவும். இது வியர்வையைத் தடுக்காது, ஆனால் நீங்கள் வியர்க்கும்போது பாக்டீரியாவால் உருவாகும் துர்நாற்றத்தை மறைக்க முயற்சிக்கும்.

• மன அழுத்தம் அடையாமல், நிதானமாக இருக்க முயற்சிக்கவும்.

எல்லா சமயத்திலும் மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் உங்களை அதிகப்படியான வியர்வையில் இருந்து காக்காது. எனவே உங்களுக்கு அதிகப்படியாக வியர்க்கிறது என்றால், உடனடியாக அனுபவம் வாய்ந்த தோல் மருத்துவரை அணுகி மருந்துகள், க்ரீம் அல்லது ஊசி போன்ற சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்வது நல்லது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Sweating