ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பப்பை உன்னுடையது.. குழந்தை என்னுடையது... வாடகை தாய் முறை எல்லோருக்கும் சாத்தியமா..?

கர்ப்பப்பை உன்னுடையது.. குழந்தை என்னுடையது... வாடகை தாய் முறை எல்லோருக்கும் சாத்தியமா..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 54 : கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்து கேன்சர் போன்ற நோய்களால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். தவிர இதை எளிதாக குழந்தை பெறும் வழியாக பெண்கள் நோக்குவது சரியல்ல.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுந்தரியும் அவர் கணவரும் சொந்தமாக ஐடி கம்பெனி வைத்து நடத்தி வருகின்றனர். சுந்தரி மிகவும் புத்திசாலி. தன்னுடைய ப்ராஜெக்ட் களுக்காக இரவு பகல் பாராமல் ஓடிக்கொண்டே இருப்பவர். பல சமயங்களில் பயணம் செய்து கொண்டிருப்பார். என்ன பிரச்சனை என்றாலும் போனில் என்னுடைய ஆலோசனையை கேட்பார். பெரும்பாலும் ஆன்லைன் ஆலோசனையிலேயே தன்னுடைய பிரச்சனையை சரி செய்து கொண்டு விடுவார்.

அன்று தம்பதியாக மருத்துவமனைக்கு நேரில் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

"என்ன சுந்தரி! என்ன ஆச்சு ? ஏதும் முக்கியமான விஷயமா தான் இருக்கணும் . நேர்ல வந்து இருக்கீங்களே! " என்று கேட்டேன் .

அறிமுகமானவர் என்பதால் சுந்தரி நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.

" டாக்டர்! உங்களுக்கு தெரியும் எனக்கு திருமணமாகி பல வருஷம் ஆகுது. ரெண்டு பேர் சைட்லயும் குழந்தை வேண்டும் என்று ரொம்ப எதிர்பார்க்கிறார்கள்.

கோவிடுக்கு பின் இப்பதான் எங்க பிசினஸ் கிராஃப் மேல ஏறிக்கிட்டு இருக்கு. இந்த சமயத்துல ஒரு பிரக்னன்சி அதுக்கப்புறம் டெலிவரி. ஒரு வருஷமோ!! ரெண்டு வருஷமோ!! ஸ்பெண்ட் பண்றது கஷ்டம். எனக்கு ஏஜ் இப்பவே 30ஐ கிராஸ் பண்ணிவிட்டது." என்றார்.

அதற்குள் சுனிதாவின் கணவர் குறுக்கிட்டார். "இப்ப நயன்தாரா கல்யாணம் ஆகி உடனே ரெட்டை குழந்தைங்க பிறந்த விஷயத்தை நியூஸ்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டோம். அதை பத்தி நீங்க கூட நிறைய பேட்டி கொடுத்து இருக்கீங்க . எங்களுக்கு கூட அந்த மாதிரி ஒரு வாடகைத் தாய் குழந்தை சாத்தியமா? அதுக்கு என்ன பண்ணணும்? இத பத்தி கேக்குறதுக்கு தான் வந்தோம். " என்றார்.

வாடகைத் தாய் குழந்தை என்றால் என்ன?

ஒரு தம்பதியின் டெஸ்ட் டியூப் பேபி மூலமாக உருவாக்கப்பட்ட கருவை இன்னொரு பொருந்தக்கூடிய பெண்ணினுடைய கர்ப்பப்பையில் வைத்து 10 மாதங்கள் வளர்த்து எடுத்து பிறகு அதனுடைய சொந்த தாய் தந்தையரிடம் ஒப்படைப்பது வாடகைத் தாய் முறையாகும் .

இந்த முறையில் உள்ள ஒரு பெரிய சாதகம் என்னவென்றால் குழந்தை அந்த தம்பதியுடையது. வாடகை தாயுடன் எந்த விதமான ரத்த சம்பந்தமும் அந்த குழந்தைக்கு இருக்காது. அதனால் மரபியல் ரீதியாக எந்த விதமான தொடர்பும் இருவருக்கும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை .

Also Read : மேக்கப் சாதனங்கள் கூட கர்ப்பம் தரிப்பதை பாதிக்குமா..? மருத்துவர் தரும் ஷாக் ரிப்போர்ட்...

யாருக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது?

கர்ப்பப்பை இல்லாத அல்லது அவருடைய உடலால் கர்ப்பத்தை தாங்க முடியாத பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. அவர்களுக்கு இது அவர்களுடைய சொந்த மரபியல் ரீதியான குழந்தையை பெறக்கூடிய ஒரு வரமாக பார்க்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான ரத்த அழுத்தம் போன்றவை , கேன்சர் நோய் போன்ற தீராத நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாடகை தாய் முறை பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த வாடகை தாய்முறையில் ஏராளமான சட்ட சிக்கல்கள், பணப்பரிமாற்றங்கள், நீண்ட கால கண்காணிப்பு, கவனிப்பு, உணர்வுபூர்வமான பிரச்சனைகள், போன்றவை எழலாம் என்பதால் பெரும்பாலும் வாடகை தாய் மூலம் மட்டுமே குழந்தை கிடைக்கும் என்ற நிலையில் உள்ள தம்பதிகள் மட்டுமே இதை நாடுவார்கள்.

இந்த வாடகைத்தாய் முறையில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று வணிக ரீதியாக செய்யப்படுவது. கமர்சியல் சரோகசி என்று பெயர். இன்னொன்று மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே செய்யப்படுவது ,அல்ட்ரூயிஸ்டிக் சரோகசி என்பதாகும்.

Also Read :  கணவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் குழந்தை பெறுவதில் தாமதமாகுமா..?

இந்திய நாட்டில் வணிக ரீதியாக வாடகைத்தாய் முறை நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் பல வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஜார்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளில் வணிக ரீதியான உள்ளது அதனால் பல பிரபலங்கள் குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் இந்த நாடுகளுக்கு சென்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட செய்திகளை நாம் காண்கிறோம்.

இந்தியாவில் கர்ப்பப்பையில் குழந்தை உருவாவதற்கு தகுதியை இழக்கும்படியான ஏதேனும் பிரச்சனை இருந்தால்,

அவர்களுக்கான வாடகை தாயை அவர்களே கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலும் அது அவர்களுடைய சொந்த நண்பர்களாகவும் உறவினர்களாகவோ இருக்க வேண்டும்.

மேலும் அவர்களுக்கு இடையே எந்தவிதமான பண பரிமாற்றமும் இருக்கக் கூடாது. இது போன்ற எல்லா சட்டங்களையும் பூர்த்தி செய்யும் பொழுது மட்டுமே அவர்களால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற முயற்சிக்க முடியும்.

சுனிதா!! உங்களுடைய மருத்துவராக உங்களுக்கு நான் சொல்லக்கூடிய ஆலோசனை:

நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பதால் இந்த வாடகைத்தாய் முறையில் நாளை கடத்தாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு இல்லை.

ஒன்று இரண்டு வருடங்கள் உங்களுடைய குடும்பத்திற்காக கர்ப்பம் அடைவதும் குழந்தை பெற்று அதை வளர்ப்பதும் கூட நல்ல விஷயமே. கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஏராளமான அதிகப்படியான ஹார்மோன்கள் (முட்டைபை )ஓவரி கேன்சர் பிரச்சனைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கிறது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உண்டாகக்கூடிய ஹார்மோன்களும் மார்பக புற்றுநோயிலிருந்து அந்த தாயை பாதுகாக்கிறது. கர்ப்ப காலத்தில் உண்டாகும் மனரீதியான மாற்றங்கள், கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுதும் தாயின் மனதில் உண்டாகும் மகிழ்ச்சியான மாற்றங்கள ஆரோக்கியத்திற்கு அவசியமான வேதிப்பொருட்களை சுரக்க வைக்கின்றன.

Also Read : இறுக்கமான ஆடைகள் கர்ப்பம் தரித்தலை பாதிக்குமா..? ஜீன்ஸ் பேண்ட் அணிவது கர்ப்பப்பைக்கு ஆபத்தா..?

விலைமதிப்பில்லாத பல உறவுகளில் ஒன்று தாய்மை. தாய்க்கும் குழந்தைக்கு இடையே உள்ள பந்தம். ஒரு பெண் இன்னொரு தாயினுடைய மதிப்பை தன்னுடைய கர்ப்ப காலத்தின் போது உணருகிறார். பல நேரங்களில் குழந்தைகள் தன்னுடைய தாய் தந்தையரின் குரல்களை பிறந்த உடனேயே அடையாளம் கண்டு கொள்வதையும், இருதயத் துடிப்பை உணர்வதை, தாயிடம் செல்லும் போது அமைதியாக இருப்பதையும் கண்டிருக்கிறோம்.

கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்து கேன்சர் போன்ற நோய்களால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். தவிர இதை எளிதாக குழந்தை பெறும் வழியாக பெண்கள் நோக்குவது சரியல்ல.

டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சைக்காக செல்லும்போது ஏராளமான ஊசிகளும் மருந்துகளையும் எடுத்துக் கொண்டால் மட்டுமே பல கருமுட்டைகளை உருவாக்கி அதை கருவாக உருவாக்க முடியும்.

இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் வெற்றிகரமாக ஒரு சோதனை குழாய் குழந்தையாக உருவாவதற்கான வாய்ப்பு 30 லிருந்து 40 சதவீதம் மட்டுமே. பத்து மாத காலம் வாடகை தாயை நாம் பேணி பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.

ஒரு வருடத்திலிருந்து ஒன்றரை வருட காலம் இது உங்கள் மூளையை ஆக்கிரமித்து ஏராளமான மன அழுத்தத்தை உண்டாக்கும். குறைந்தபட்சம் 10 லட்சம் வரை நீங்கள் செலவும் செய்ய வேண்டி வரும். எனவே இது உங்களுக்கு தேவையானது அல்ல என்பது ஒரு மகப்பேறு மருத்துவராக என்னுடைய கருத்து .

Also Read : அதிகமாக உடற்பயிற்சி செய்தால் கர்ப்பம் தள்ளிப்போகுமா..? மருத்துவர் விளக்கம்

ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடங்கள் உங்களுடைய வேலைகளை சிறிது குறைத்துக் கொண்டு குடும்பத்திற்கான நேரத்தை செலவிடுங்கள். உங்கள் தாய்மையை உணருங்கள் .

கணவரும் அவருடைய வாரிசை நீங்கள் சுமக்கிறீர்கள் என்ற நன்றியோடு இருவருக்கும் இடையே உள்ள அந்நியோன்யமும் அன்பும் கூடுதலாகும் . ஒரு கணவன் மனைவி என்பதிலிருந்து , தாய் தந்தை என்ற கட்டத்திற்கு செல்லும் பொழுது அதற்காக ஒன்று இரண்டு வருடங்கள் தியாகம் செய்வதும் நல்லது தான்.

"விரைவில் இது பற்றி சிந்தித்து நல்ல முடிவுக்கு வருவீர்கள் என்று நினைக்கிறேன் சுனிதா !"என்று முடித்தேன்.

"அப்பாடி !!!இதில் இத்தனை சிக்கல்களை தாண்ட வேண்டி இருக்கிறதா? இத்தனை கட்டங்கள் இருக்கிறதா?

இவ்வளவு செலவும் இருக்கிறதா? நான் ஏதோ எளிதானது என்று நினைத்து விட்டேன் டாக்டர்!."

இருந்தாலும் கர்ப்பத்தால் ஒரு பெண்ணுக்கு உண்டாகக்கூடிய நன்மைகள் எத்தனை இருக்கிறது, என்று உங்களிடம் பேசிய பிறகுதான் புரிந்து கொண்டேன்.

இன்னும் ஒரு வருடத்தில் நன்றாக திட்டமிட்டு என்னுடைய வேலைகளை சிறிது சிறிதாக பகிர்ந்து கொடுத்து என் கர்ப்பப்பையில் என் குழந்தைக்கு திட்டமிடுவேன்." என்றார்.

சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் சென்ற தம்பதியை பார்த்து மனதுக்கு நிறைவாக இருந்தது.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Surrogacy Pregnancy, பெண்குயின் கார்னர்