Home /News /lifestyle /

கர்ப்பிணிகள் இசை கேட்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது - ஆய்வு

கர்ப்பிணிகள் இசை கேட்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது - ஆய்வு

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

கருவில் இருக்கும் போது தாயின் மூலம் குழந்தைகள் கேட்கும் இசை மற்றும் ஒலியை பிறந்த பிறகும் அவற்றால் நினைவில் வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது இசை. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கும், அவரது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் இசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் நல்ல இனிமையான இசையைக் கேட்பது அவர்கள் வயிற்றுக்குள் இருக்கும் பிறக்க போகும் குழந்தை மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை பிறப்பதற்கு முன்பே, அதன் மூளை வளர்ச்சியில் இசைக்கு பெரும் பங்கு உண்டு என்று ஏர்லன்வேபால் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

குழந்தை கருவில் இருக்கும் போது 16 முதல் 18 வாரங்களில் அதன் முதல் ஒலியைக் கேட்கிறது, மேலும் 24 வாரங்களில் அதன் காதுகள் வேகமாக வளரும். அதே போல கர்ப்ப காலத்தின் கடைசி சில மாதங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் இந்த காலத்தில் வயிற்றில் இருக்கும் ஒரு குழந்தை தனது தாயின் குரல், அவரது தாய் மொழி, வார்த்தை முறைகள் மற்றும் ரைம்ஸ்களை அடையாளம் காண முடியும்.

இசை மற்றும் கர்ப்பத்திற்கு இடையிலான தொடர்பு..

நமக்கு பிடித்தமான இசை அல்லது பாடலை கேட்பது நிச்சயமாக நம்மை எந்த சூழலிலும் உற்சாகப்படுத்தும். ஒரு கர்ப்பிணி தனக்கு மிகவும் பிடித்தமான இசையை கேட்டு மகிழும் போது அவரது வயிற்றுக்குள் உள்ளே இருக்கும் குழந்தையும் அதை அனுபவித்து மகிழலாம். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கருவில் இருக்கும் போது இசையை கேட்டு வளரும் குழந்தைகள், கருவில் இருக்கும் போது எந்த இசையையும் கேட்காத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டிருக்கின்றன.



கர்ப்ப காலத்தில் கேட்கும் இசை தாய்க்கு எவ்வாறு உதவுகிறது..?

கர்ப்பிணிப் பெண்களின் தூக்க சுழற்சியில் இசை கேட்பது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் பிரசவ பதட்டம் உள்ள பெண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் இசையின் பங்கு நேர்மறையான ஒன்றாக இருக்கிறது. கூடுதலாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மனச்சோர்வு அபாயத்தை குறைப்பதில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு நல்லதா… கெட்டதா…? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்..!

கர்ப்பத்தின் போது ஒரு கர்ப்பிணி இசையை கேட்பதால் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்:

* கருவில் இருக்கும் போது தாயின் மூலம் குழந்தைகள் கேட்கும் இசை மற்றும் ஒலியை பிறந்த பிறகும் அவற்றால் நினைவில் வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குழந்தைகளால் ஒலிகளை அடையாளம் காண முடியும் என்றும் பலமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே அதே இசையை குழந்தை பிறந்த பிறகு அழும் நேரங்களில் அமைதிப்படுத்த பயன்படுத்தலாம். இது உடனடியாக குழந்தைகளை சமாதானப்படுத்தி தூங்க வைக்க உதவும்.



* ஒரு கர்ப்பிணி பெண் இசையைக் கேட்கும் போது, கருவிலிருக்கும் குழந்தை அந்த அதிர்வுகளைக் கேட்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும். இது குழந்தையின் அனிச்சை செயல்பாடுகளை கருவிலேயே மேம்படுத்தவும், குழந்தையின் ஒட்டுமொத்த இயக்கத்தில் பங்கு வகிக்கவும் உதவும்.

* கர்ப்பிணி கேட்கும் இசை சில நேரங்களில் குழந்தைக்கு புரியாமல் போனாலும் ஒலிகளில் கவனம் செலுத்த அது முயற்சிக்கும். இது கருவிலிருக்கும் குழந்தையை மேம்படுத்த உதவுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby, Music, Pregnancy

அடுத்த செய்தி