ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சர்ஜிகல் மாஸ்க் VS துணி மாஸ்க் : இரண்டில் எது பாதுகாப்பானது..? யார் யாருக்கு எது சிறந்தது..?

சர்ஜிகல் மாஸ்க் VS துணி மாஸ்க் : இரண்டில் எது பாதுகாப்பானது..? யார் யாருக்கு எது சிறந்தது..?

இன்று மாஸ்க்கில் பல வகைகள் வந்துவிட்டாலும் எது பாதுகாப்பானது என்பதை இன்னும் அலசிக்கொண்டுதான் இருக்கிறோம்.

இன்று மாஸ்க்கில் பல வகைகள் வந்துவிட்டாலும் எது பாதுகாப்பானது என்பதை இன்னும் அலசிக்கொண்டுதான் இருக்கிறோம்.

இன்று மாஸ்க்கில் பல வகைகள் வந்துவிட்டாலும் எது பாதுகாப்பானது என்பதை இன்னும் அலசிக்கொண்டுதான் இருக்கிறோம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனாவால் மாஸ்க் என்பது இன்று நம் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. தினசரி உடை உடுத்துவது போல் மாஸ்க் அணிவது அனிச்சை செயலாகிவிட்டது. இன்று மாஸ்க்கில் பல வகைகள் வந்துவிட்டாலும் எது பாதுகாப்பானது என்பதை இன்னும் அலசிக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சர்ஜிகல் மாஸ்க் அல்லது துணி மாஸ்க் இரண்டில் எது சிறந்தது. கொரோனா தொற்றிலிருந்து எது நம்மை காக்கும் என்பதை பார்க்கலாம்...

மெடிக்கல் முகக்கவசம் :

இது ஒருமுறைப் பயன்படுத்திய பின் தூக்கி எறியக்கூடியது. அதனாலேயே பலரும் இதை தவிர்க்கின்றனர். ஆனால் ஒரு சிலர் இதை கட்டாயம் அணிய வேண்டும்.

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் அல்லது மருத்துவமனையில் பணியாற்றுவோர் மூன்றடுக்கு மெடிக்கல் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம்.

அதேபோல் கொரோனா பாதிப்பு கொண்டவர், மருத்துவ சிகிச்சைகள் கொண்டிருப்பவர்கள் , கொரோனா அறிகுறி கொண்டவர்கள் இந்த முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா வேகமாகப் பரவும் பகுதிகளில் வசிப்பவர்கள்,  அதேபோல் 60 வயதைக் கடந்தவர்கள், உடல் நோயால் பாதிப்பட்டிருப்பவர்கள் அணியலாம்.

துணி முகக்கவசம் :

இது நம் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். துவைத்து சுத்தமாக பராமரிப்பதே இதன் முக்கிய விஷயம்.

இந்த முகக்கவசம் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அணியலாம், அதிக கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வசிப்போர் அணியலாம்.

குழந்தையின் காதில் படியும் அழுக்குகளை எப்படி நீக்க வேண்டும்..? பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

சமூக இடைவெளி இருக்கக் கூடிய இடங்களில் அல்லது பயணம் மேற்கொள்ளும்போது ஃபிட்டாக இருக்க இந்த முகக்கவசம் அணியலாம்.

குறிப்பு : எந்த முகக்கவசம் அணிந்தாலும் மூக்கு, வாய் மற்றும் தாடை மூடுமாறு இருக்க வேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Mask, Surgical Mask